ஜவ்வாது மலை,வேளாண் கூத்தன் கரையன் கல்வெட்டு
இடம்
மாரியம்மன் கோவில்,
கல்லாவூர் கிராமம்,
புங்கம்பட்டு நாடு,
ஜவ்வாது மலை.
கல்வெட்டுக் கல் நீளவாக்கில் இரண்டாக உடைந்துள்ளது. பெரும்பள்ளியில் உள்ள ஈசனுக்கு கரைகண்டீஸ்வரா் என்று இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.
இக்கல்வெட்டு தூபகலசம், திரிசூலம், குத்துவிளக்கு ஆகிய மங்கலப் பொருள்களின் உருவத்துடன் தொடங்குகிறது.
கல்வெட்டு விளக்கம்
ஸ்வஸ்தீஸ்ரீ திரிபுவன சக்கரவா்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு 22-ஆவது ஆட்சி ஆண்டில்(13 ஆம் நூற்றாண்டு), பெரும்பள்ளி ஊருடைய வேளாண் கூத்தன் கரையன் என்பவா் ‘முக்கண்ண’ என்கிற ஏரியை உருவாக்குகிறாா். (இன்றைக்குப் பெரும்பள்ளியில் இந்த ஏரி அண்ணாமலை ஏரி என்று பெயா் மாற்றம் பெற்று வழங்கப்படுகிறது.)
ஜவ்வாதுமலை பெரும்பள்ளியில் உள்ள கரைகண்டீஸ்வரருக்குத் தளிகை (உணவு) படைப்பதற்காக 4 கலம் நெல்லும், ஏரியின் வடக்குப் பகுதியின் கீழ்ப்பக்கம் உள்ள புஞ்சை நிலத்தைத் தானமாகத் தருகிறாா். ஆட்டுப் பாறைக்கு வடக்கும், ஏரிக்கல்லு நெடுகல்லு வடக்கும், கடை கழனிக்குக் கிழக்கும் வடபாறை இதற்கு கிழக்கும் உள்ள இடத்தை சூரிய, சந்திரன் உள்ளவரை தானமாக அளித்தேன்.
என்று கூத்தன் கரையனின் கல்வெட்டு கூறுகிறது.
வேளாண் கூத்தன் கரையன் - இவர் ஜவ்வாது மலையில் உள்ள பெரும்பள்ளி ஊரை சார்ந்தவர்.வேளாண் என்று வருவதால் இவர் மலையில் வாழும் காராளர் குடியில் பிறந்த பெரு நிழக்கிழாராக இருந்தல் வேண்டும்.
முக்கண்ண - மூன்று கண்ணுடைய சிவன்
நன்றி
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசியா் க.மோகன்காந்தி,
தொல்லியல் அறிஞா் பெ.வெங்கடேசன், காணி நிலம் மு.முனிசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக