ஜவ்வாது மலை சித்திரமேழி கொல்லன் கல்வெட்டு
இடம்:
வேடியப்பன் கோவில்,
பெரும்பள்ளி கிராமம்,
புங்கம்பட்டு நாடு,
ஜவ்வாது மலை.
காலம்: 12 - 13 ஆம் நூற்றாண்டு
நாவகரும சோமநந்தி என்றழைக்கப்பட்ட சித்திரமேழி (பெரியநாட்டார்) கொல்லனுக்கு காணியாக நிலம் அளிக்கப்பட்டமை.யாரால் அளிக்கப்பட்டது என தெரியவில்லை.
கல்வெட்டு:
1. ஸ்வஸ்தி நாவ
2. கரும
3. சோமந்தி
4. தந் சித்திர
5. மேழிக் கொல்
6. லந் தந் கா
7. ணியாகக்
8. கொடுத்தோ[ம்]
நாவ கரும சோமந்தி என்பவர் சித்திரமெழி கொல்லன்(தட்டான்) என கூறப்பட்டுள்ளார்.எனவே இவர் சித்திரமேழி பெரிய நாட்டார் குழுவில் ஒருவராக இருக்க வேண்டும்.
சித்திரமேழி பெரியநாட்டார் என்பவர்கள் ஒரு வணிக குழுவினர்.இவர்கள் வேளாண்மை பொருள்கள் எங்கு அதிகமாக கிடைக்குமோ அங்கெல்லாம் சென்று பொருள் வாங்கி வியாபாரம் செய்பவர்கள்.
இக்கல்வெட்டின் மூலம் 12 ஆம் நூற்றாண்டில் ஜவ்வாது மலையில்(நவிரமலை) உழுது பயிர் செய்யும் வேளாண் தொழில்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
நன்றி- ஆவணம் இதழ் 24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக