வியாழன், 11 டிசம்பர், 2025

வெங்கல பானை கல்வெட்டு 2.மதூர் வரதராஜ பெருமாள் கோவில்.

சேர்வராயன் மலையில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில் வெங்கல பானை கல்வெட்டு.
சேர்வராயன் மலை(சேருவா மலை) சேல நாடு,முக நாடு,முட்ட நாடு என மூன்று பிரிவாக உள்ளது.

இதில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில் வெங்கல பானை கல்வெட்டு காணப்படுகிறது.

இந்த மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில்,காராளர் என்கிற மலையாள கவுண்டர்களில் தும்புடையார் வீடு குல தெய்வ கோவில் ஆகும்.
இக்கோவிலில் உள்ள 3 வெங்கல பானைகளில் கல்வெட்டு காணப்படுகிறது

வெங்கல பானை 2:
கல்வெட்டு:

செலனாட்டு க்குச் சொந்தம தூரழக் காக்கவுண்டன் யிந்தத் தவிலை
வரதராசப்பெருமாளுக்குக் கொடுத்த உபயம் உ 

விளக்கம்:

சேல நாட்டுக்கு சேர்ந்த மதூர் கிராமத்தில் வசிக்கும் அழக்கா கவுண்டன், அவ்வூரிலுள்ள வரதராச பெருமாளுக்கு வெங்கல தவிலை தானமாக கொடுத்த செய்தி.
(இதில் உபயம் 2(உ ) என்று உள்ளது.இரண்டு வெங்கல பானையாக இருக்கலாம்)


இதில் ஆண்டு குறிப்பிடபடவில்லை,எழுத்து உருவம் பார்க்கும் போது 200 வருட முற்பட்ட கல்வெட்டாக இருக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக