வியாழன், 4 டிசம்பர், 2025

கல்வராயன் மலை கல்வெட்டு,கரிய பெருமாள் கோவில்

  கல்வராயன் மலையில் காராளர்(KARALAR )என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.

கல்வராயன் குலத்தை சார்ந்த மன்னரான கல்வரைய கவுண்டரும்,வீரைய கவுண்டரும்,நாட்டார்களும் கரிய பெருமாள் கடவுளுக்கு மேலை செம்பற்க்கையில் நிலம் தானம் விட்ட செய்தியாக கல் வெட்டப்பட்டுள்ளது.சந்திரர் சூரியர் உள்ளவரை இந்த தானத்தை நடத்தி வர வேண்டும்.மீறுபவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவர் என்று உள்ளது.


இக்கல்வெட்டு உள்ள இடத்தையும் ,இம்மக்கள் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்யும் போது,இம்மலை மன்னரான கல்வராயன் கவுண்டர் கரிய பெருமாளுக்கு கொடுத்த இறையிலி நிலம் பற்றிய செய்தி ஆகும்.ஆனால் கல்வரைய கவுண்டர் என்பதற்கு தள்ளரையகவுண்டர் என்றும், வீரைய கவுண்டர் என்பதற்கு மதுரை வீரைய்ய கவுண்டர் என்றும் தவறாக படிக்கப்பட்டுள்ளது.


இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுக்கள் புத்தகத்தில் உள்ளது.ஆனால் salem gazetteer ல் சாலிவாகன ஆண்டு 942(கி.பி.1020) என்று உள்ளது.


18 ஆம் நூற்றாண்டு என்பதை ஆய்வுகுட்படுத்த வேண்டும்.


கல்வெட்டு:


1. (வி) ரோதிகிறி வருஷம் மார்

2.கழி மாதம் 21 தள்ள

3. () ரையகவுண்டர் மேல்ம

4. வீரையகவுண்டர் மேல்ம 

     யுள்பட ச

5. (லை) நாட்டாரும் கரிய

6. () பெருமாளுக்கு மேலைச்

7. செம்பறக்கை திருவி

8. ளையாட்டம்

9. படி நஞ்சை புஞ்சை

     நாற்பாக்கெல்லை 

10.யு(ம்) சகலமும்

12. ந்தி (ஏ) சூரியர்வ(ரை)

13. அ (கு) தம் பண்(ணின)

14.வர் கெங்கையிலே

15. க(ஈ) ராம் பசுவை

16. கொன்ற பா

17. வத்திலே (போ)

18. க (க) டைவர்கள்

(சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் - கிருட்டிணன்-பக்கம் 92)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக