சனி, 8 மே, 2021

கதிர்முனை தீண்டா காராளன்

கருது(கதிர்)முனை தீண்டாத காராளர்...
கவடு வஞ்சம் தெரியாத காராளர்...

1961 ஆம் ஆண்டு கல்வாராயன் மலையின் தொடர்ச்சியான அருநூத்துமலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அங்குள்ள நமது நடுஅண்ணன் கூட்டமான பச்சைமலை காராளர்கள் சொன்ன பழமொழி இது...

இதற்கு அர்த்தம் கருது முனை கூட தீண்டாது தாம் விவசாயம் செய்யாமல் பல ஆட்களை வைத்து வேலை செய்தவர்கள் என்று பொருள்.அதாவது பெரிய நிலைப்ரபுத்துவம் படைத்தவர்கள் அல்லது ராஜா என்று அர்த்தம்.
பச்சை மலையில் நாட்டுகட்டு பாடல் ஒன்றில் "பூசாரியான மன்னனின் தம்பி,மன்னனிடம் சண்டையிட்டவனாக தன் மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு காஞ்சிபுற நாட்டை விட்டு மலையில் குடியேறினான்" என்று நம் வரலாறை கூறுகிறது.இந்த கருது முனை தீண்டாத காராளர் என்பதற்கும் மன்னனின் வழி வந்த காராளர்கள்(மலையாளி) என்பதற்கும் தொடர்பு இருக்கிறது.
இந்த கருதுமுனை தீண்டா காராளர் என்பது காராளர் மன்னனான வாணாதிராயனுக்கும் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இமன்னனின் கல்வெட்டுக்கள் கொல்லிமலையிலும், அருநூத்துமலையிலுள்ள சிறுமலையிலும் கிடைத்துள்ளது குறிப்பிட தக்கது.
மேலும் இம்மன்னன் கட்டிய ஆரகளூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் வரலாறும்,தமிழ் மலையாளி என்கிற காராள மக்களின் ஆதிகோவிலான கலவராயன்மலை கரியலூர் கரிவரதராஜ பெருமாள் (கரிராமன்)கோவில் வரலாறும் ஒன்றாகவே இருக்கிறது.இக்கரிராமன் கோவிலில் இம்மன்னனின் அடையாள சின்னமான எலி உருவ சிலையும் அதன் பக்கத்தில் மன்னர் மற்றும் அவரின் மனைவி சிலையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து நம் காராளர்கள் மூன்று அண்ணன் தம்பிகளும் குறுநில மன்னர்களின் வாரிசுகள் என்பது தெரிகிறது.