செவ்வாய், 13 அக்டோபர், 2026
சிறுமலை "புயிலன் சேந்தன்" நடுகல் (கி.பி.1202):
"காராளர் காமராஜ் கவுண்டர்" நாட்டார் பட்டாபிசேகம் அழைப்பிதழ்
"மதிப்புக்கவுண்டர் நாட்டை" ஆளும்,நுனங்கனூர் "காராளர் பச்சாக் கவுண்டர்" மகன் "காராளர் காமராஜ் கவுண்டருக்கு" "நாட்டார் பட்டம் கட்டும் விழா" அழைப்பிதழ்....
"மதிப்புக்கவுண்டர் நாடு" என்பது சேலம் தருமபுரி எல்லையான மஞ்சவாடி கணவாயிலிருந்து சாமியாபுரம் கூட்டு சாலை வரைக்கும் உள்ள பகுதி ஆகும்.
மதிப்புக் கவுண்டர் நாட்டில் "காராளர்(மலையாளி)" வாழும் ஊர்கள்:-
1.கோம்பூர்
2.சின்ன மஞ்சவாடி
3.பெரிய மஞ்சவாடி
4.கல்லாத்துப்பட்டி
5.நடுப்பட்டி
6.நுனங்கனூர்
7.ஆவாரங்காட்டூர்
8.வரதக்கவுண்டனூர்
9.இலந்தைக்கொட்டப்பட்டி
10.தண்ணீர்த் தொட்டி
11.மோட்டுப்பட்டி
12.ஆலமரத்தூர்
13.தொம்பக்கல் ஊர் (தொம்பக்கலானூர்)
14.கோட்டை மேடு
15.மஞ்சவாடி
16.காளிப்பேட்டை
17.சாமியாபுரம்
சனி, 10 அக்டோபர், 2026
காராளர் (மலையாளி) குல தெய்வங்கள்(Karalar's (Malaiyali) family deity)
காராளர் (மலையாளி) குல தெய்வங்கள்
மலையில் வாழும் காராளர் (மலையாளி) இன மக்கள்,தொண்டை மண்டலத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் ஆவர்.
இவர்களுக்கு காராளக் கவுண்டர், காராள முதலி,பூபாள முதலி,மலையாள முதலி,மலையாளக் கவுண்டர்,மலை வெள்ளாளர்,மலைக் கவுண்டர்,மலையாண்டி வெள்ளாளர் என பிற பெயர்களிலும் அறியப்படுகிறார்கள்.
இவர்கள் கும்பிடும் குலதெய்வம்:-
1. அண்ணாமலையார் -(ஆதிசிவன்,ஆண்டியப்பன்)
(ஆதிக் கோவில் - பருவம் கிராமம்)
(இடம்- கல்வராயன் மலை பருவம் கிராமம்,சேர்வராயன் மலை தலைச்சோலை கிராமம்,கொல்லிமலை ஐந்து ஊர் நாடு,ஜவ்வாது மலை,பச்சமலை கீழக்கரை கிராமம்,வத்தல் மலை,சின்ன கல்வராயன்மலை சின்ன குட்டிமடுவு கிராமம்)
2. வரதராஜ பெருமாள்-(பெரியசாமி,வரதைய்யன்,வரதன்)
(பச்சை மலை பகுதிக்கு ஆதிக்கோவில் - மண்மலை)
(பச்சை மலையில் வரதராஜப் பெருமாளுக்கு கருப்பசாமி காவல் தெய்வமாக உள்ளது)
(இடம் - சின்ன கல்வராயன் மலை ஆல்ட்ரிபட்டி கிராமம்,கல்வராயன் மலை பாகாணம் கிராமம்,மண்மலை,சின்ன கல்வராயன் மலை பலாப்பாடி கிராமம்,சேர்வராயன் மலை பெரிய மதூர் கிராமம்,கொல்லிமலை,பச்சை மலை மருதை கிராமம்)
3. கரி வரதராஜ பெருமாள்-
(கரிராமன்,கரிய பெருமாள்)(கருப்பு காவல் தெய்வம்)
(ஆதி கோவில் - கரியக்கோவில் வளவு)
(இடம் :- கல்வராயன் மலை-கரியக் கோவில்,கரியக்கோவில் வளவு,கருமந்துறை,வெங்கோடு, எருக்கம்பட்டு,வில்வாத்தி,தண்டராம்பட்டு, புளியம்பட்டி, நொச்சிக்குட்டை)
(சேர்வராயன் மலை - குண்டூர்,காக்கம்பாடி,புலியூர்,கொட்டச்சேடு, செந்திட்டு,விராட்சியூர்),
கல்லாத்துப்பட்டி,சின்ன கல்வராயன் மலை புழுதிக்குட்டை,கோம்பை(போதக்காடு), கொட்டாயூர்,காளிப்பேட்டை,ஜவ்வாது மலை(தனி).
4. வடக்கு மலையான்-
(வெங்கடாஜலபதி பெருமாள்,சின்ன திருப்பதி,வெங்கட்ராமன்)
(ஆதிக்கோவில் - கல்வராயன் மலை சின்ன திருப்பதி)
(இடம் - கல்வராயன்மலை சின்ன திருப்பதி,சித்தேரி மலை,சின்ன கல்வராயன்மலை புழுதிக்குட்டை,பள்ளிக்காடு,
சேர்வராயன்மலை மாரமங்கலம்),பூவனூர்,நடுப்பட்டி,
ஜவ்வாது மலை(தனி)).
5. மணியப்ப சாமி-(பெருமாள்)
(இடம் - சேர்வராயன் மலை)
6.காளி அம்மன்
(இடம் - கல்வராயன் மலை,பச்சைமலை பக்கலம் கிராமம்,கொல்லிமலை,சேர்வராயன் மலை,காளிப்பேட்டை,அடிமலைபுதூர், வாணபுரம்,ஜவ்வாது மலை).
7.புடவைக்காரி மற்றும் பெரியாண்டிச்சி அம்மன்-
(வீட்டுசாமி)
(பச்சை மலையில் மட்டும் அனைத்து பங்காளிகளும் அவரவர் பங்காளி கூட்டத்தோடு கோவில் கட்டி வணங்குகிறார்கள்)
(கல்வராயன் மலையில் அறுவடையின் போது வணங்குகிறார்கள்)
(காராளர்(மலையாளி) அனைவரும் வாச பொங்கலின் போது வணங்குகிறார்கள்)
8.வேடியப்பன்-
(ஜவ்வாது மலை,ஏலகிரி மலை,கல்வராயன் மலை)
9.வெள்ளைப் பிள்ளையார் மற்றும் பெரியசாமி - (வரதராஜ பெருமாள்),
(இது கருப்பசாமி கோவில் இல்லை.தெய்வங்களில் பெரிய தெய்வம் என்பதால் உண்டான பெயர்)
(இடம் - பேளூர் வட்டத்தில் கல்வராயன் மலை தொடர்ச்சியில் உள்ள ஆல்ட்ரிப்பட்டி கிராமம்,சித்தேரி மலை பேரேரி புதூர்)
10.பொன் நாச்சியம்மன்-
(இடம் - சேர்வராயன் மலை,கொல்லிமலை,ஏலகிரி மலை,ஜவ்வாது மலை)
11.அறம் காத்தப்பன் -(அய்யனார்,அரங்க சிவன்,அரங்க சேவகன்,அரங்கதப்பன்)
(இடம்:- குண்டூர் நாடு,கொல்லிமலை)
(மாசி பெரியண்ணசாமிக்கும் அரங்க சிவன் என்னும் பெயருண்டு.)
(அறம் காத்த ஐயனார்,கரிய பெருமாளின் அவதாரம் என்று கொல்லிமலையில் பேச்சு வழக்கு உண்டு)
12.மாசி பெரியசாமி - (காமாட்சி அம்மனின் அண்ணனான கரி வரதராஜ பெருமாளின் அவதாரம்)
(இடம் - கொல்லி மலை,பச்சை மலை)
13.திருவரங்கம் பெருமாள் -
(ஆதிக்கோவில் - ஆலனூர்)
(ஶ்ரீ ரங்க ராமர்,பள்ளி கொண்ட பெருமாள்)
(இடம் - கல்வராயன்மலை ஆலனூர் கிராமம்,சேர்வராயன் மலை தலைச்சோலை கிராமம்,முள்ளிக்காடு கிராமம்,கன்னங்குறிச்சி)
14.கந்தசாமி (முருகன்)-
(இடம் :- கல்வராயன்மலை வெள்ளிமலை கிராமம்,கொல்லிமலை எடப்புலி நாடு)
15.வீர பத்ரன் - (அறுநூத்துமலை காராளர்கள் மட்டும்)
16.பச்சை அம்மன் -
(இடம் - காளிப்பேட்டை)(நெட்டராசன் என்னும் நாட்டார் வீடு மட்டும்)
17.சிலை பாட்டன் -
(அருநூத்துமலை காராளர்கள் மட்டும்,இது நடுகல் வழிபாடு),
18.இளைய பெருமாள் -
(லட்சுமண பெருமாள்,இளைய ராமர்)
(ஆதிக்கோவில் - கருமந்துறை)
(கரிய கோவிலிலிருந்து மண் எடுத்து வந்து கருமந்துறையில் கட்டிய கோவில்,இரண்டாவதாக கட்டியதால் இளைய பெருமாள் என பெயர் வந்தது.இதுவும் கரிய பெருமாள் கடவுள் தான்)
(இடம் - கல்வராயன்மலை கருமந்துறை, சின்ன கல்வராயன்மலை சின்ன குட்டிமடுவு கிராமம்,மூக்கனூர் கிராமம்,பச்சை மலை)
19.பெரியாண்டவர் - (இடம் -கல்வராயன்மலை,கொல்லிமலை)
20.போட்டுவரை பெருமாள்
(பொடவராயர் மலைப் பெருமாள்/போடுவராயர் மலைப் பெருமாள்)
(இது ஒரு கரி வரதராஜ பெருமாள்/கரியப் பெருமாள் கோவில் ஆகும்,"போட்டு வரை" என்னும் பாறை பகுதியில் உள்ளதால் போட்டு வரை பெருமாள் என பெயர் உருவாயிற்று)
(இடம் - கல்வராயன்மலை தொங்களூத்தூர் கிராமம்)
21.பட்டானவன்(பட்டவன்) -(கொல்லிமலை காராளர்கள் மட்டும்
22. வாணீஸ்வரன் (சிவன்) -
(இடம் - சேர்வராயன்மலை கோவிலூர் கிராமம்)
23.காமாட்சி அம்மன் -
(தாயம்மாள்,தைல அம்மாள்,அறம் வளர்த்த நாயகி)
(இடம் - கொல்லிமலை,சேர்வராயன் மலை அரங்கம் கிராமம்,கல்வராயன் மலை)
24. தீர்த்தகிரீஸ்வரர்(சிவன்) -
(இடம் :- கல்வராயன்மலை - தீர்த்தமலை, ஆலத்தி கிராமம்)
25.மீனாட்சி அம்மன் (நாச்சியம்மன்) -
(இடம் - கொல்லிமலை ஐந்து ஊர் நாடு)
26.செல்லியம்மன் -
(இடம் - கொல்லிமலை மேக்கினிக்காடு கிராமம்)
27.அழகு நாச்சியம்மன் -
(இடம் - ஏலகிரி மலை,ஜவ்வாது மலை,கொல்லிமலை)
28.பெரிய நாச்சியம்மன் -
(இடம் - ஏலகிரி மலை,ஜவ்வாது மலை,கொல்லிமலை)
29.இளைய நாச்சியம்மன் -
(இடம் - ஏலகிரி மலை,ஜவ்வாது மலை,கொல்லிமலை)
28.கதவ நாச்சியம்மன் - ஜவ்வாது மலை
29.மலைப் பெருமாள் - பச்சை மலை
28. சேரடி பெருமாள் - பச்சைமலை சேரடி கிராமம்
29. வஞ்சாரைப் பெருமாள் - பச்சைமலை வஞ்சாரை கிராமம்
30.குண்டுமணி பெருமாள் - பைத்தூர்
31. பொட்டிப் பெருமாள் -
(பொட்டியில் வைத்து ஆண்டுக்கொருமுறை வெளியே எடுத்து கும்பிடுவதால் பொட்டிப் பெருமாள் என பெயர் வந்தது)
(கல்வராயன் மலை அரையர் வீடு தெய்வம்)
32.மாதம்மாள் சாமி - கொல்லிமலை நவக்காடு கிராமம்
(நெவிடியான் வீடு குலதெய்வம்)
33. வேப்பாடி பெருமாள் - பச்சைமலை வேப்பாடி கிராமம்.
34.சென்றாயப் பெருமாள் (இளைய பெருமாள்) -
(சென்றாயப்பெருமாள்(சென்ன ராயர் பெருமாள்) என்பதற்கு இளைய பெருமாள் எனப் பொருள் ஆகும்.நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெயர் மாற்றம் பெற்றிருக்கலாம்)
(இடம் - கல்வராயன் மலை சின்ன திருப்பதி,அடிமலைபுதூர்,பெருமாள் பாளையம்(வலசையூர்)).
35. உய்யன் பட்டவன் -
(இடம் - கொல்லிமலை தேனூர் நாடு)
(உய்யன் வீடு பிரிவை சார்ந்தவர்கள் மட்டும்)
35.புலியப்பன் சாமி (நடுகல்)
(கல் தொட்டி வீடு பங்காளிகள் சாமி)
(இடம் - கொல்லிமலை,பைல் நாடு)
36.சின்னம்மன் -
(சின்னம்மா)
(இடம் - கொல்லிமலை)
37.நயினார் மலை வரதராஜ பெருமாள் -
(மாயவர்,நைனா மலை பெருமாள்)
38.போதமலை சித்தன் பெருமாள் -
(வரதராஜ பெருமாள்)
39. கொல்லிமலை அறப்பள்ளி ஈஸ்வரர்
40.மாயவர் பெருமாள் -
(காளிமலை = காளிங்கன் மலை,கடம்பூர் மலை)(ஜம்பூத்து மலை மாணிக்கன் வீடு)
(ஶ்ரீரங்க ராமர், ரங்கராமர்,ரங்கசாமி, அரிராமர்)
41. பொன் காளியம்மன் -
(காளிமலையில் குட்டியாண்டி வீடு)
42.செல்லாண்டி அம்மன் -
(காளிமலையில் சையன் வீடு)
43. வெண்ணையூர் உடையாரப்பன் -
(கும்மங்குறிச்சி,கல்வராயன் மலை)(சின்ன குட்டி மடுவு,சோழ வீடு குல தெய்வம்)
பொதுவான தெய்வங்கள்:
1.பொங்கலாயி அம்மன்
2.பாஞ்சாலி அம்மன்(அம்மா சாமி, திரௌபதி அம்மன்) & பஞ்ச பாண்டவர்
3.கூத்தாண்டவர்
( தருமபுரி மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,மஞ்சவாடி லிருந்து பட்டுகோணம்பட்டி வரைக்கும்,18 பட்டி ஊர் சேர்ந்த விழா) ,கல்வராயன்மலை,சேர்வராயன் மலை.
4.பூசை பெருமாள்(அய்யனார்)(புலியூர்,சேர்வராயன் மலையில் மட்டும்)
5.மாரியம்மன்
6.கருப்பசாமி
7.பிடாரி அம்மன்
8.ஏழு கன்னிமார்
9.அரசாயி அம்மன்
10.சோலையம்மன்(சைவம்) (கல்வராயன் மலை,பயிர் அருவடை தெய்வம்)
11.சடையன் (கொல்லிமலை)
12. உருளையன் (கொல்லிமலை)
13. வெட்டுக்காரன் (கொல்லிமலை)
14. நம்பி ஆண்டான் (கொல்லிமலை)
15.கொங்கலாயி அம்மன்
16.பிரம்பு ஐயனார்
வெள்ளி, 9 அக்டோபர், 2026
மோட்டுப்பட்டி இராஜராஜ சோழர் கல்வெட்டு (கி.பி.1010)
புதன், 7 அக்டோபர், 2026
ஜவ்வாது மலை கவரை நடுகல் (1048 ஆம் ஆண்டு)
செவ்வாய், 29 செப்டம்பர், 2026
சித்திரமேழி கொல்லன் கல்வெட்டு,ஜவ்வாது மலை
திங்கள், 28 செப்டம்பர், 2026
அலைவாய்மலை பட்டயத்தில் காராளர்கள்(மலையாளி) (கி.பி.1786)
சனி, 26 செப்டம்பர், 2026
போதமலைச் செப்பேடு (1782 ஆம் ஆண்டு)
திங்கள், 21 செப்டம்பர், 2026
வஞ்சிக்குழி நடுகல்,கல்வராயன் மலை (கி.பி.654)
சனி, 19 செப்டம்பர், 2026
பெரிய கல்வராயன் மலை,கரியவர் கோவில் கல்வெட்டு (கி.பி.1020).
பெரிய கல்வராயன் மலை கரிய கோவில் கல்வெட்டு (கி.பி.1020) :
*கல்வராயன் மலையில் காராளர்(KARALAR )என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.
*கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,மலையாள முதலி என்ற பெயரிலும் குறிப்பிடுவதை பார்க்கலாம்.
கல்லரையன்(கல்ராயன்,கல்வராயன்) என்னும் அரையர் குலத்து மக்களிடையே நிலவும் "கல் பிறக்கும் போதே பிறந்தவன் கல்லரையன்" என்னும் பழமொழி வாயிலாகவும்,இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கல்லைகுறிச்சி(இன்று கள்ளக்குறிச்சி) என்னும் ஊரின் பேரை காணும் போதும்,இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் "ல" என்பதற்கு பதில் "ள" என்று தவறாக படிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
"கல் நாட்டை" ஆண்ட அரையர்கள் "கல்லரையர்" என அழைக்கப்பட்டுள்ளனர் (ஆதாரம் - கிராங்காடு கல்வெட்டு)
*இக்கல்வெட்டு உள்ள இடத்தையும் ,இம்மக்கள் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்யும் போது,இம்மலை மன்னரான கல்லரைய கவுண்டர் கரிய பெருமாளுக்கு கொடுத்த இறையிலி நிலம் பற்றிய செய்தி ஆகும்.
*கல்லரைய கவுண்டர்" என்பதற்கு "தள்ளரையகவுண்டர்" என்றும், "மகன் வீரைய கவுண்டர்" என்பதற்கு "மதுர வீரைய்ய கவுண்டர்" என்றும் தவறாக படிக்கப்பட்டுள்ளது.
*இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுக்கள் புத்தகத்தில் உள்ளது.ஆனால் salem gazetteer ல் சாலிவாகன ஆண்டு 942(கி.பி.1020) என்று உள்ளது.
*18 ஆம் நூற்றாண்டு என்பதை ஆய்வுகுட்படுத்த வேண்டும்.
விளக்கம்:
கி.பி.1020 ஆம் ஆண்டு, வீரோதிகிரி வருடம்,மார்கழி மாதம் 21 ஆம் நாள்,குறுநில மன்னரான கல்லரைய கவுண்டரும்,அவரது மகன் வீரைய கவுண்டரும்,மேல் மலை நாட்டார்களும் கரிய பெருமாள்(கரி ராமன்) கடவுளுக்கு,பெரிய கல்வராயன் மலை மேல் நாட்டிலுள்ள,மேலை செம்பற்க்கையில் நிலம் தானம் விட்ட செய்தியாக,கரியவர் கோவிலில் (கரிய கோவில்) கல் வெட்டப்பட்டுள்ளது.சந்திரர் சூரியர் உள்ளவரை இந்த தானத்தை நடத்தி வர வேண்டும்.மீறுபவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவர் என்று உள்ளது.
(இந்த கால கட்டத்தில் தருமபுரி,முதலாம் ராஜேந்திர சோழன்(கி.பி.1014 - 1044) ஆட்சியின் கீழ் இருந்தது)
கல்வெட்டு:
1. (வி) ரோதிகிறி வருஷம் மார்
2.கழி மாதம் 21 தள்ள
3.ரையகவுண்டர்(கல்லரையகவுண்டர்) ம(கன்)
4. வீரையகவுண்டர் மேல்ம
5. (லை) நாட்டாரும் கரிய
6. பெருமாளுக்கு மேலைச்
7. செம்பறக்கை திருவி
8. ளையாட்டம்
9. படி நஞ்சை புஞ்சை நாற்பாக்கெல்லை
10.யு(ம்) சகலமும்
12. ந்தி (ஏ) சூரியர்வ(ரை)
13. அ (கு) தம் பண்(ணின)
14.வர் கெங்கையிலே
15. க(ஈ) ராம் பசுவை
16. கொன்ற பா
17. வத்திலே (போ)
18. க (க)டைவர்கள்.
***கல்ராயன்(கல்வராயன்) என்னும் பெயரில் ஐயனார் தெய்வம் உண்டு.இக்கோவில் பெத்தநாயக்கன் பாளையம் ஏரிக்கரையிலும்,லட்சியம் ஊரிலும்,ஆனைமலை ஒடையப்பாளையம்,செட்டிமாங்குறிச்சி ஒட்டப்பட்டி மற்றும் தம்மம்பட்டி பூசாலியூர் அருகிலும் இந்த கோவில் உள்ளது.***
(சேலம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 1 - பக்கம் 11 )
கல்வராயன் மன்னர் கல்வெட்டு, கிராங்காடு (கி.பி.1302)
கல்வராயன் மலை கிராங்காடு கல்வெட்டு (கி.பி.1302)
கல்வராயன் மலையில் காராளர்(KARALAR) என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.
இம்மக்களிடையே பெயர் எழுதுவதற்கென்று ஒரு வழக்கம் இருந்திருக்கிறது.ஒருவர் தன் பெயர் எழுதும் போது தன் குல பெயரையும் சேர்த்து எழுதுவார்கள்.அந்த நடையிலேயே இந்த கல்வெட்டும் அமைந்துள்ளது.
மேலும் இந்த அரையர் குலத்து மக்களிடையே நிலவும் "கல் பிறக்கும் போதே பிறந்தவன் கல்லரையன்" என்னும் பழமொழி வாயிலாகவும்,மலையின் அடிவாரத்தில் உள்ள கல்லைகுறிச்சி(இன்று கள்ளக்குறிச்சி) என்னும் ஊரின் பேரை காணும் போதும்,இக்கல்வெட்டில் "ல" என்பதற்கு பதில் "ள" என்று தவறாக படிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
"கல் நாட்டை" ஆண்ட அரையர்கள் "கல்லரையர்" என அழைக்கப்பட்டுள்ளனர்.
"கல்லரைய்ய" என்பதற்கு "கள்ளரைய்ய" என்று படிக்கப்பட்டுள்ளது,"கல் நாடு" என்பதற்கு "கள் நாடு" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....இந்த கல்வெட்டு இருக்கும் பகுதியில் வாழும் மக்களின் வரலாறை பார்க்கும் போதும் பழக்க வழக்கங்கள் பார்க்கும் போதும்,ஆண்ட மன்னர்கள் அவர்களின் குலங்களை ஆராயும் போதும், கல்லரைய்ய என்பது தான் சரியாக இருக்கிறது.படித்தவர்கள் எழுத்தை தவறாக கூட படிக்க வாய்ப்பிருக்கிறது.
கல்ராயன்(கல்வராயன்) என்னும் பெயரில் ஐயனார் தெய்வம் உண்டு.இக்கோவில் பெத்தநாயக்கன் பாளையம் ஏரிக்கரையிலும்,லட்சியம் ஊரிலும்,ஆனைமலை ஒடையப்பாளையம்,செட்டிமாங்குறிச்சி ஒட்டப்பட்டி மற்றும் தம்மம்பட்டி பூசாலியூர் அருகிலும் இந்த கோவில் உள்ளது.
மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகத்தில் வெளிவந்திருக்கிறது.ஆனால் Salem gazetteer ல் "சாலி வாகன ஆண்டு 1224(கி.பி.1302) என்றும் கல்வராயன் கவுண்டர்" என்றும் தெளிவான பதிவு உள்ளது.
இது மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.
விளக்கம்:
கி.பி.1302 ஆம் ஆண்டு விய வருடம் வைகாசி மாதம் 27-ம் தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூஜைகள் செய்ய பெரிய கல்வராயன் மலை கீழ்நாட்டை சேர்ந்த கருங்காடு (கெராங்காடு,கீரங்காடு) என்ற பகுதியை,குறுநில மன்னரான கல்லரைய்ய பெரிய கரியப்பக்கவுண்டர் பட்டத்து கல்லரைய்ய அன்னியப்ப கவுண்டர் ஆகிய இருவரும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது. இத்தானத்தை நயினாகவுண்ட நம்பியார் (நயினார் கவுண்டர் நம்பி) என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூஜையும், கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள் . இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இதற்குத் தீங்கு விளைவிப்பவர்கள்,கங்கை கரையிலே,காராம் பசுவை கொன்ற பாவத்திலே போவார்கள்.
(இந்த கால கட்டத்தில் மகதை நாட்டை வாணகோவரையர்கள்,முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு(கி.பி.1268 - 1310)கீழ் ஆட்சி செய்தனர்)
கல்வெட்டு:
1.விய வருஷம் வய்யாசி மாதம் 27
2. அவைய்யாரம்மை
3. சுவாமியாற்கு பூதா
4.னம் விட்டதுக்கு (க)
5. கல்லரையக பெரிய
6. கரியப்பகவுண்ட(ர்)
7. பட்டத்து கல்ல
8. ரய அண்ணியப்ப
9. கவுண்டர் இந்த ரண்
10. டு துரையளும் நாலு
11. கரைநாட்டரும் கல்
12. நாட்டில் செத்த(சேந்த) கரு(ங்)
13. காடு பூதானம் விட்ட
14. துக்கு பூசை நிமத்தி
15. யம் பண்ணி வருகுறவர்
16. கள் நயினாவுண்டந(ம்)பி
17. யார் உள்பட்ட யிந்தவூ(ர்)
18. தானததுக்கு யாதா மொரு
19. வர் பூசை கட்டளை அவி
20 (மெ) கம் அதி
21. காமாகா நடத்திவரு (கிற)
22. (வ)ர்கள் ஆயிராரோக்கி (ய)
23. (அய்)ஸ்வரியம் அவர்பி
24. .. வை தொழுது மாதா ..
25. யம் பண்ணி வருகுறவர்
26. இந்த பூ (த)ானம் பூமி
27. ஆக(வும்) சந்திர(ரா)தித்தர்
28. உள்ளமட்டும் நடத்தவு/ம் இ/
29. ப்படி யிதுக்கு (யாதா)
30. மொருத்தர ரண்டு(நி)
31. னைச்சவர்கள் கெங்
32. கைக்கரையிலே
33. க(ஈ) ராம் பசுவை (க்)
34. கொன்ற பாவத்தி
35. (லே)போவர் (கள்)
(சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் - கிருட்டிணன்) பக்கம் 91
புதன், 16 செப்டம்பர், 2026
சிறுகளூர்/சிறுக்கலூர் செக்கு கல்வெட்டு,கல்வராயன் மலை (10 ஆம் நூற்றாண்டு)
ஜவ்வாது மலை காராளர்(மலையாளி) இன மக்கள் வாழும் நாடுகள்.
ஜவ்வாது மலை மக்கள் காரைக்காட்டு வெள்ளாளர்,கார்காத்தவெள்ளாளர், காராளர்,மலை வெள்ளாளர், காராளக் கவுண்டர்,மலையாளி,மலையாள கவுண்டர்,பூபாள முதலி மற்றும் மலையாள முதலி என்னும் பெயர்களில் அறியப்படுகிறார்கள்.
ஜவ்வாது மலையில் 18 நாடுகளில் இவர்கள் வாழ்கிறார்கள்.இம்மக்களின் பெரிய பட்டகாரன் (ராஜா) கணமலை நாட்டில் வசிக்கிறார்.
(திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றியம்)
1. வீரகவுண்டனூர் நாடு
1. இந்திரா நகர்
2. எம்.ஜி.ஆர்.நகர்
3.பண்டிரேவ்
4.குட்டூர்
5. புதூர்
6.அரசனூர்
7.எண்டரப்பட்டு
8. கல்பிளந்தனூர்
9. கோவில்கொல்லை
10. மேட்டன்கல்லூர்
11. ஊர்கவுண்டனூர்
12. பம்பாத்தூர்
2.வீரப்பனூர் நாடு
1.குட்டிகவுண்டர்கொட்டாய்
2. முருகனேரி
3. வாலோத்தூக் கொல்லை
4. ஒடமங்கலம்
5. மேல்கொல்லை
6.மேல்வெள்ளிதாதன் கொட்டாய்
7.பூமரத்தூக்கொல்லை
8.வீரப்பனூர்
9.சடையனூர்,
10.மலைக்கொல்லை
11.அரசவல்லி
12.பர்கூர்
13.எட்டிமரத்துர்
14.கள்ளிப்பாறை
15.மண்டப்பாறை
16.மேல்மரத்தூர்
17.ஒடமங்கலம்
18.பெருமலை
19.குட்டியூர் பள்ளம்
20.பாலாண்டகொல்லை கொட்டாய்
21.கீழ்விளாங்குப்பம்
22. புதுப்பட்டு
22. தீத்தனார் தும்பகொல்லை
23. வள்ளிதாதன் கொட்டாய்
24. வாழத்தும்பை
25. விளாங்குப்பம்
26. காட்டூக்கொல்லை
3. தென்மலை அத்திப்பட்டு நாடு
1.தென்மலை அத்திப்பட்டு
2.சின்னகீழ்ப்பட்டு
3.மேல்பட்டு
4.பெரியகீழ்ப்பட்டு
4 பலாமரத்தூர் நாடு
1.நாச்சமலை
2.ஒண்டிக்குரையனூர்
3.புளிச்சகுட்டை
4.தோப்பூர்கொல்லை கொட்டாய்
5.சின்னக்குட்டை
6.குண்டுரெட்டி
7.குறியானூர்
8.மந்தக்கட்டு கொல்லை
9.நல்லப்பட்டு
10.நார்த்தமரத்தூர்
11.ரெட்டிக்கொல்லை
12.திமிரிமரத்தூர்
13.தோப்பூர்
14.வாழக்காவூர்
15.சேராமரத்துர்
16.கல்யாணமந்தை
17.பலாமரத்தூர்
18.வாழக்காடு
5. நம்மியம்பட்டு நாடு
1. கோவிலூர் ஆண்டிக் கொட்டாய்
2. கும்பலூர் கொல்லை மேடு
3. குப்பலூர்
4. கனிகிணத்தூர்
5. மேல் கோவிலூர்
6. முட்டுநத்தூர் ஊரன் கொல்லை மேடு
7. நாதனூர் பாலாண்டி கொல்லை மேடு
8. வள்ளியூர் சடையாண்டி கொட்டாய்
9. வெள்ளையான் கோட்டை
10 நாடாலூர் சடையன் வீடு
11. பூத்தூர் ரவுரான் கொல்லைமேடு
12. சோலை கொல்லைவெளி
13. செம்மண் கொல்லை
14. புலி கென்றான்கொல்லை கொட்டாய்
15. வண்டிகாரன் வீடு
16. வங்களா கொல்லை
17. கீழ்குப்பசானவூர்
18 கீழ்சரணங்குப்பம்
19. கோவிலாண்டுர்
20. மேல் நம்மியம்பட்டு
21. பட்டுலூர்
22. சின்னசேராமரத்தூர்
23. சினையிரப்பட்டு
24. ஏரியூர்
25. கீழ் கோவிலூர்
26 கீழ் நாடனூர்
27. கோரமடுவு
28. மேல்நாடலூர்
29. முதலை மடுவு
30. தடுப்பட்டு
31. நடுசாரன்குப்பம்
32. பாடானூர்
33. பட்டரயன்குடிசை
34. பெரியவீரப்பட்டு
35. தாசரிபுதூர்
36. போரத்துக்கொல்லை
37. சின்னமச்சூர்
38. ஜோனூர்
39. கல்லாத்துவீடு கொட்டாய்
40. காவிதிகுடிசை
41. கட்டயன்குடிசை
42. கோனேரிகுடிசை
43. கும்பலூர்
44. மச்சூர்
45. மேல்குப்பானச்சனூர்
46. மேல்சாரணங்குப்பம்
47. நாச்சமலை
48. நம்மியம்பட்டு
49.புலிகொன்றான்வெளி
50.புத்தூர்
51.தாதன்குப்பம்
52.வெள்ளியூர்
53. முட்டுநத்தூர்
54.பழையபுதூர்
55.பனைமரத்தூர்
56.ஆலமரத்து கோட்டை
57. சின்னத் தாதன் குப்பம்
6.மேல்சிலம்பாடி நாடு
1. சின்ன மோட்டூர்
2. விலாமரத்தூர்
3. விளிச்சாலூர்
4.ஏலத்தப்புதூர்
5. கீழ் சிலம்பாடி
6. மேல்கூட்டாத்தூர்
7. மேலூர்
8. ஓடன்கொல்லை
9. பலாக்கானூர் கொல்லை கொட்டம்
10. பாதிரி
11. மேல்சிலம்பாடி
12. மோளையானூர்
13. மோட்டுக் கொல்லை
14. படபஞ்சமரத்தூர்
15. ஆத்துக்கானூர்
16. கீழ் விளாமூச்சி
17. கூத்தனேரி
18. கூட்டாத்தூர்
19.மேல் விளாமூச்சி
20. மோட்டூர்
21. வண்ணாங்குட்டை
22. எம்.ஜி.ஆர் நகர்
23. மந்தை வெளி கொட்டாய்
24. சின்னகூத்தனேறி
25 சின்னசிலம்பாடி
26.பலாக்கானூர்
7.கோவிலூர் நாடு
8) குட்டக்கரை நாடு
1. பாதிரி
2 பட்டரைக்காடு
3. தும்பக்காடு
4. தும்பக்காடு கீழூர்
5. தும்பக்காடு நடுவூர்
6. கீழ்பெரியவள்ளி
7. கொள்ளேரி(கல்லேரி)
8 கொண்டிக்கானூர்
9. மஞ்சூத்து
10. மேல்சின்னகண்ணுகொல்லை
11. மேல்சேப்பளி
12.மேல் பொன்ரகம்கொல்லை
13. பட்டன்கோவிலூர்
14.புதூர்
15. தனியார்கொல்லைமேடு
16. வைதியன்கொல்லை
17. குட்டக்கரை
18. கீழ்ச்சேப்பளி
19. மேல்பெரியவள்ளி
20. அமட்டன்கொல்லை
21. சிங்காடு
22. அமட்டன்கொல்லைமேலூர்
9) காணமலை நாடு
கணமலை என்னும் ஊரில் தான் ஜவ்வாது மலை பெரிய பட்டகாரன்( ராஜா) வசிக்கிறார்.
1.பதி மலை
2. காணமலை
3. மேல்முருங்கைமந்தை
4. சீங்காடு
5. தஞ்சன் பாறை
6.முத்தாண்டி குடிசை
7.வேடகொல்லைமேடு
8.இருளம்பாறை
9.இலந்தம்பட்டு
10.கீழ்முருங்கைமந்தை
11.மல்லிமேடு
12.மேல்கணவாயூர்
13.பாலபிரியம்பட்டு
14.பொங்களூர்
15.அரசனூர்
16.ஆவார வலசை
17.காவம்பட்டு
18.கீழ்கணவாயூர்
19.மலைகொல்லை
20.மேல்புளியங்குப்பம்
21சென்பகத்தோப்பு
22.நீர்தும்பை
23.கல்லாத்தூர்
24.நாகலூர்
25.நீப்பளாம்பட்டு
26.நெல்மந்தை
27.பாவமதி
28.பள்ளத்தூர்
29.புளியாங்குப்பம்
30.சாந்தம்பட்டு
31.கீழ்சென்பகத்தோப்பு
10.கல்லாத்தூர் நாடு
1.துரிஞ்சிக்குப்பம்
2.மோட்டூர்
3.கிளையூர்
4.தீத்தாண்டபட்டி வலசை(செங்கம் வட்டம்)
(திருப்பத்தூர் வட்டம்)
11. நெல்லிவாசல் நாடு
1.வலசை
2. நெல்லிவாசல் நாடு
3. மலைதிருப்பத்தூர்
4. மலையாண்டிப்பட்டி
5. மேல்பட்டு
6. நெல்லிப்பட்டு
7. புலியூர்
8. சேம்பரை
12.புதூர் நாடு
1. சித்தூர்
2. கீழூர்
3. மொழலை
4. விளாங்குப்பம்
5. நடுகுப்பம்
6. வழுதலம்பட்டு
7. புதூர்நாடு
8. அரும்பட்டு
9. கோம்பை
10. மேலூர்
13.புங்கம்பட்டு நாடு
1. பேளூர்
2. வசந்தபுரம்
3. அரசமரத்துகொல்லை
4. பழைய பாளையம்
5. ரங்கசமுத்திரம்
6.கொத்தனூர்
7.பெருமாள் கோயில் வட்டம்
8. தகரகுப்பம்
9. பெரும்பள்ளி
10. சேர்கலூர்
11. சின்னவட்டானூர்
12. கல்லாவூர்
13.கீழானூர்
14.கம்புகுடி
15. குடகுமலை
16. நடுவூர்
14.குரும்பேரி நாடு
1. மாம்பாக்கம்
(வேலூர் மாவட்டம்)
2. அணைக்கட்டு
15.பீஞ்சமந்தை நாடு
1. முத்தனூர்
2. நெல்லிமரத்துக் கொல்லை
3. நாய்க்கனுர்
4. பீஞ்சமந்தை
5. நச்சிமடுவு
6. பளமரத்துகொல்லை
7. பழந்தூர்
8. அதிமரத்துக் கொல்லை
9. கீழ் பிஞ்சமந்தை
10. ஏரிக்கொல்லை
11. அவுசரி ஓடை
12. பங்களா கொல்லை
13. கருப்பன்கொல்லை
14. முதியன்கொட்டாய்
15. பொதிபாறை
16. சடையன் கொல்லை
17. பெரியகொட்டன்செட்டி
18. பெரியதட்டான்குட்டை
19. பெரியபளப்பாறை,
20. பிள்ளையார்குட்டை
21. பொதிப்பாறை கொல்லை
22. புதூர்
23. புலியமரத்தூர்
24. சட்டதூர்
25. தேக்குமரத்தூர்
26. தெத்தூர்
27. தொங்குமலை
28. என். பழந்தூர்
29. புதுகுப்பம்
30. அல்லேரி
31. காவலியூர்
32. கொரத்துர்
33. குனக்கலூர்
34. மூலனூர்
35. முகுதவல்லிமேடு
36.பெரிய எட்டிப்பட்டு
37.செங்காடு
38.ஆட்டுகாரன்துரை
39. சின்ன எட்டுபட்டு
40 சின்னகுட்டன்செட்டி,
41. சின்னபனப்பாறை
42. எள்ளுபாறை
43. குடிகம்
44. காட்டியம்பட்டி
45. கீழ்குப்புசூர்
46. முள்ளுவாடி
47. கோனுர்
48. குப்புசூர்
16. ஜார்தன் கொல்லை நாடு
1. பெரிய கனிசை
2.பூசன மலச்சி
3.சின்னதாட்டான்குட்டை
4.காணிசைப்புத்தூர்
5.ஜார்தன்கொல்லை
6.இலந்தம்புதூர்
7. குண்டுராணி
8. பட்டிகுடிசை
9. கடுக்கமரத்துக் கொல்லை
10. சின்ன சுவிசி
11. தோனியூர்
12.முத்தன்குடிசை
13. சளதுகொல்லை
14.எரிமேடு
15. இளயனிமரத்தூர்
17. பாலம்பாட்டு நாடு
1.அரச மரத்தூர்
2. சின்னூர்
3. கொலையனூர்
4. குறனூர்
5. நெக்கினி
6. பட்டிகொல்ல
7. பாலம்பாட்டு
8. தானிமரத்தூர்
18.அத்தியூர் நாடு
1. குருமலை
2. வெல்லக்கல் மலை
3. நச்சிமேடு
4. அனிமலை
5. தெள்ளை (கணியம்பாடி ஒன்றியம், சோழவரம் ஊராட்சி)
சேலம் மாவட்ட பதிவுகளில் உள்ள நாடுகள்
(SALEM DISTRICT MANUAL), பக்கம் -313.
1. நெல் வாசல் நாடு
2.புதூர் நாடு
3.புங்கம்பட்டு நாடு
4.தென்மலை நாடு
5.பர்கூர் நாடு
6.மூலைக்காடு நாடு
7.பள்ளப்ப நாடு
8.நடுப்பட்டு நாடு
9.பீமன்குளம் நாடு
10.ஏலகிரி நாடு