வெள்ளி, 31 ஜூலை, 2026

காளிங்கராய கவுண்டர் பட்டயத்தில் காராளர் (மலையாளி)

காளிங்கராய கவுண்டர் நாட்டில் காராளர்(மலையாளி):-

காளிங்கராய கவுண்டர் 13 ஆம் நூற்றாண்டில் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
இவர் கட்டிய அணை காளிங்கராயன் அணை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இவருடைய பட்டயத்தில் வெள்ளாளர் பிரிவுகள் கூறப்பட்டுள்ளது.
அதில் மலை கண்ட வேளாளர்,பச்சை மலையாளன்,பவளவ மலையாளன் போன்ற  பிரிவுகளும் இடம்பெற்றுள்ளது.

மலை கண்ட வேளாளர் - கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து போன காராளர் மக்கள்.
பச்சை மலையாளன் - பச்சைமலை பகுதி காராளர்கள் 
பவள மலையாளன் - ஜவ்வாதுமலை பகுதி காராளர்கள்.

நன்றி:-
கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் 

வியாழன், 30 ஜூலை, 2026

காங்கேய நாட்டுக் காராளர் (மலையாளி) இனப் புலவர்

காராளர்(மலையாளி) இனப் புலவர்:

காங்கேய நாட்டு புலவர்களில் பச்சைமலை காராளர் (மலையாளர்) பிரிவை சேர்ந்த புலவர்களும் இருந்துள்ளனர்.

புலவர்கள்:-

சோழர்களின் காலத்தில் சோங்கு 24 நாடுகட்கும் புலவர்கள் நியமிக்கப்பட்டனர். இடையில் நாட்டுப் புலவர்கள் வழக்கம் நின்றுவிடவே,விசயநகர அரசர்கள் காலத்தில் மீண்டும் பரம்பரைக் புலவர்கள் நியமிக்கப்பட்டனர். இதனைக் கொங்குப் புலவர் பட்டயம் விரிவாகக் கூறுகிளது.

 தங்கள் நாட்டுக்கென்று தனியாகப் புலவர்களை நியமித்துப் பார்க்கும் வழக்கம் காங்கேய நாட்டவருக்கு உண்டு.

1.செங்குந்த கோத்திரம் போக்கங்கூட்டம் நஞ்சராயப்புலவன், 
2.கம்பருக்குக் கையேட்டுக்கார உவச்சன், 3.பாலிடையன் (பாலுடையான்)
4.தொளுவன்(துளுவ வெள்ளாளர்)
5.வேதியன், 
6.சேரகுல வேளாளன், 
7.மங்கன், 
8.வணிகன் (வணிக செட்டியார், நகரத்தார்)
9.சோழியன் (சோழிய வெள்ளாளர்)
10திருவம்படிகாரன், 
11.பச்சை மலையாளன் (பச்சைமலை காராளர்)

ஆகிய சமூகத்தார் காங்கேய ஊர்களுக்கு புலவர்களாக விளங்கினர். 

நன்றி:-
"முத்தூர்" புத்தகம்,ஆசிரியர் இராசு ஐயா...

புதன், 29 ஜூலை, 2026

மழவரையன் சுந்தர சோழன் செப்பேடு -3

மழவரையன் சுந்தர சோழன் செப்பேடு:-

அரசன் - சுந்தர சோழர்
சிற்றரசர் - மழவரையன் சுந்தர சோழர்
ஆண்டு - 10 ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு விளக்கம்:-

"தூசியூர் நகரத்தாரிடம் (வணிகர் அல்லது குடிமக்கள்) முழு மனைக்கு கால் அளவும், அரை மனைக்கு அரை கால் அளவும் வரியாக கொடுக்க வேண்டும்.
வரி கொடுப்பதில் ஏதாவது சிக்கல் வந்தால் நந்திபுரம் ஊரில் உள்ள வரி அளவை அடிப்படையாக கொண்டு வரி கொடுக்க வேண்டும்" என உத்தரவு போட்டுள்ளார்.

(கும்பகோணம் ஊரிலுள்ள நந்திபுரம் (நாதன் கோவில் என்கிற திரு நந்திபுரம்)  என்னும் ஊரில் உள்ள வரி அளவு என்பது சோழர் காலத்தில் முன்மாதிரியாக எல்லா ஊர்களிலும் வசூலிக்கப்பட்டது.)

(சோழரின் பல கல்வெட்டுகளில் "நந்திபுரம் ஊரில் உள்ள வரியை அடிப்படையாக கொண்டு வரி வசூலிக்க வேண்டும்" என உள்ளது.)

கல்வெட்டு:-

1.ஸஷி ஸ்ரீ  கொவிராஜகெசரிபன்மற்க்கு யா-

2.ண்டு யஆவது மழவரையன் சுந்தரசொழனெ-

3.ன்' தூசியூர் நகரத்தாரை நாங் கொள்ளும் மிறை முழும-

4.னை காலும் அரைமனை அரைக்காலும் நின்ற இறைஆ-

5.கக் கொள்வதாகவும் தண்டங்குற்ற முள்ளது நந்திபுர ம-

6.ற்சாதி¹ கொள்வதாகவும் இதன் றென்றான் ஸுகிதசந்தான-

7.ம் துப்பன வறுவான் இது இர[ரக்ஷி]த்தானடி என் தலை மெலது.

குறிப்பு:-
*இந்த "மழவரையன் சுந்தரசோழர்" என்பவர் இன்னொரு செப்பேடுகளில் "ஒற்றியூரன் கொல்லிமழவன் பிரதிகண்டன்" மகன் என குறிப்பிடப்படுகிறார்.

*இந்தப் "ஒற்றியூரன் பிரதிகண்டன்" மன்னர்கள் தொண்டை மண்டலத்திலுள்ள திரு ஒற்றியூரை பூர்வீகமாக கொண்டவர்கள்.சோழர்களின் படை தளபதிகள்.

*கொல்லிமலை காராளர் (மலையாளி) மக்களும் தங்களது பூர்வீகம் காஞ்சிபுரம் (தொண்டை மண்டலம்) என்கிறார்கள்.எனவே இந்த பிரதிகண்டனும் காராளர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

*இவர்களுக்கு கீழ் கொல்லிமலை காராளர்(மலையாளி) மக்கள் போர்வீரர்களாக இருந்திருக்க வேண்டும்.

*சோழருக்கு அடங்கிய சிற்றரசாக கொல்லிமலையையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் ஆட்சி செய்தவர்கள்.ஆதலால் இவர்கள் "கொல்லி மழவன்" என்ற பட்டம் கொண்டவர்கள்.

*கோவை பேரூர் கல்வெட்டு ஒன்றில் "மலை ராச்சியத்திலிருந்து வந்து பேரூர் பகுதியை ஆட்சி செய்தவர்களில் "மழவரையர்" பட்டம் கொண்டவர்களும் உண்டு".
(https://karalarmani.blogspot.com/2026/06/blog-post_13.html)

*கோவை மாவட்ட கல்வெட்டுகளில் "வெள்ளாளர் மாடைகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்.

*சேர்வராயன் மலை கோவிலூர் வாணீஷ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கற்கட மாராயர் "முதலிகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்.

நன்றி:-
SOUTH INDIAN INSCRIPTIONS VOL III

கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தரசோழன் செப்பேடு -2:

கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழன் செப்பேடு:-

அரசன் - சுந்தர சோழன்

ஆண்டு - 10 ஆம் நூற்றாண்டு

சிற்றரசன் - கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழன்.

கல்வெட்டு விளக்கம்:-

"ஒற்றியூரன் பிரதிகண்டன்" மகன் "பிரதிகண்டன் சுந்தர சோழன்" ஆவார்.ஈழத்து போரில் தன் தந்தை பிரதிகண்டன் இறந்து போனதால்,இவரது நினைவாக,மக்களின் தாகம் தீர்க்க,தூசியூர் கற்றளி ஈஸ்வரர் கோவிலுக்கு அருகில் பாறையில் தண்ணீர் தொட்டி அமைத்தார்.


கல்வெட்டு:-

1 ஸஹி ஸ்ரீ கொல்லிமழவன் பிரதிகண்டன் சுந்தரசொழனென்

2 எங்களாச்ச ரிழத்துப் பட அவர் ஸ்ரீஷைாஹத்துக்குச் சிறு.

3 பாடு கல்லொடு குழிக்குத் தென்மெ(ற்*]க்கு தூசியுர் தி-

4 ருக்கற்றளி பரைெயரர்க்கு செதுகுடுத்தென் பிரதிகண்-

5 டன் சுந்தரசொழனென்

குறிப்பு:-

*இந்தப் "ஒற்றியூரன் பிரதிகண்டன்" மன்னர்கள் தொண்டை மண்டலத்திலுள்ள திரு ஒற்றியூரை பூர்வீகமாக கொண்டவர்கள்.சோழர்களின் படை தளபதிகள்.

*கொல்லிமலை காராளர் (மலையாளி) மக்களும் தங்களது பூர்வீகம் காஞ்சிபுரம் (தொண்டை மண்டலம்) என்கிறார்கள்.எனவே இந்த பிரதிகண்டனும் காராளர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

*இவர்களுக்கு கீழ் கொல்லிமலை காராளர்(மலையாளி) மக்கள் போர்வீரர்களாக இருந்திருக்க வேண்டும்.

*சோழருக்கு அடங்கிய சிற்றரசாக கொல்லிமலையையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் ஆட்சி செய்தவர்கள்.ஆதலால் இவர்கள் "கொல்லி மழவன்" என்ற பட்டம் கொண்டவர்கள்.

*கோவை பேரூர் கல்வெட்டு ஒன்றில் "மலை ராச்சியத்திலிருந்து வந்து பேரூர் பகுதியை ஆட்சி செய்தவர்களில் "மழவரையர்" பட்டம் கொண்டவர்களும் உண்டு".
(https://karalarmani.blogspot.com/2026/06/blog-post_13.html)

*கோவை மாவட்ட கல்வெட்டுகளில் "வெள்ளாளர் மாடைகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்.

*சேர்வராயன் மலை கோவிலூர் வாணீஷ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கற்கட மாராயர் "முதலிகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்

நன்றி:-

SOUTH INDIAN INSCRIPTIONS.VOL III

செவ்வாய், 28 ஜூலை, 2026

கொல்லிமலை பிரதி கண்டன் கல்வெட்டு கி.பி 980


கொல்லிமலை உத்தம சோழர் கால கல்வெட்டு:

இடம் :கொல்லிமலை அறப்பள்ளி ஈசுவரர் கோவில் கருவறை நுழைவாயில் இடப்பக்கம்
அரசு - உத்தம சோழன்.
ஆண்டு - கி.பி.980

கல்வெட்டில் வரும் பெயர் பிரதிகண்டன் சுந்தரசோழன் என்று உள்ளதால்,இக்குறுநிலமன்னர்,சுந்தர சோழன் காலத்தில் பதவி ஏற்றவராக இருக்கலாம்.

தெ.இ.க..தொ 19 274

விளக்கம்:

பிரதிகண்டன் சுந்தர சோழன் என்பவன் திரு அறப்பள்ளி ஈஸ்வரருக்கு கார்த்திகைத் திருவிழாவிற்குச் சாலைப்புறமாகக் (நன்செய் மற்றும் புன்செய் நிலம்) கற்கண்ணுக்கு மேல் குளம் உட்படக் நீர்நிலமான எல்லா நிலத்தையும் கொடையாக அளித்தமை.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ கேரப்பரகேசரிபந்மற்க்கு செல்ல ஈநின்ற ஆண்டு பத்தாவது 
2.ப்ரதி கண்டன் தரச்சோழந் திருவறப்பள்ளி யாழ்வார்க்கு காத்திகை காத்திகைத்
திருவிழாவுக்கு
3. சாலைப்புறமாக (ச்) ச (ய்) த நிலம் (காற் 7) சய் நிலம் கற்கண்ணுக்கு மேல் குளமுள்ப்பட நீர் நிலமாந தெல்லாம் தேவர்க்கு அவ்வூரரோ......

பிரதி கண்டன் சுந்தர சோழன்:-

திருச்செங்கோடு செப்பேட்டில் இவரின் தந்தை பெயர் கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்டன் என குறிப்பிடப்படுகிறார்.அதாவது ஒற்றியூரை சார்ந்த பிரதிகண்டன் எனப்பொருள்.

ஒற்றியூர் என்பது சென்னையிலுள்ள திருஒற்றியூர் ஆகும்.சோழர் காலத்தில் சென்னை பகுதி காஞ்சி மண்டலத்தில் அடங்கும்.

சோழர் காலத்தில் சோழருக்கு அடங்கிய சிற்றரசாக தொண்டை மண்டலத்திலிருந்து(காஞ்சி மண்டலம்) வந்து,கொல்லிமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை ஒருவர் ஆட்சி செய்துள்ளார்.

நன்றி: சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள்.


ஞாயிறு, 26 ஜூலை, 2026

காராளர் (மலையாளி) வாழும் கல்வராயன் மலை நாடுகள் (Karalar's nadu in Kalvarayan Hill)

கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள நாடுகள்:

காராளர் இனத்தை சார்ந்த கல்லரையன் (கல்+அரையன்) என்னும்  மன்னர்கள் அரசு ஆண்டதால் இம்மலை கல்ராயன் மலை என பெயர் பெற்றது.இவர்கள் அரையன் வீட்டை(குலம்) சார்ந்தவர்கள்.இவர்களுக்கு வாணரையன் என்னும் பெயரும் உண்டு.

இந்த கல்ராயர் மன்னர் கல்வெட்டு ஒன்று பெரிய கல்வராயன் மலை கரிய கோவிலிலும் கிராங்காடு ஊர் மாரியம்மன் கோவிலிலும் உள்ளது.இதன் காலம் கி.பி.1020 மற்றும் கி.பி.1302 ஆகும்.

"கல் பிறக்கும் போதே பிறந்தவன் கல்லரையன்" என்பது இவர்களின் பழமொழி.

(கல் - மலை என்று பொருள்
அரையன் - அரசன் என்று பொருள்)

**கல்லரையன் என்னும் சொல் பேச்சு வழக்கில் கல்ராயன்,கல்வராயன்,கல்விராயன் என பலவாறு மக்களால் பேசப்படுகிறது.**

கல்ராயன் மலைகளின் அமைப்பு முறைகள் பாளையப்பட்டு அல்லது பெரிய நாட்டு பிரிவாகவும், பெரிய நாடுகள் துணை நாடுகளாகவும், துணை நாடுகள் பல ஊர்களைக் கொண்டும் இருக்கின்றன.

அரையன் வீட்டை(குலம்) சார்ந்த பெரிய கல்ராயர்,சின்ன கல்ராயர், அரையக் கவுண்டர் ஆகிய மூவரும் பங்காளிகள்.

மேற்கூறிய மூன்று அரையன் வீட்டு குறுநில மன்னர்களும், கொக்கிரி வீடு சடையக் கவுண்டர் குறுநில மன்னரும் மற்றும் குரும்பக் கவுண்டர் குறுநில மன்னரும் ஆகிய மூன்று வீடும்(குலம்) மாமன் உறவினர்.

நாடுகள் பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு:


அரையக் கவுண்டர் நாடு:

(அ) கடயநாடு:

1. தரிசுக்காடு

2. நிலாவூர்

3. மணியார்பாளையம்

4. ஈச்சங்காடு

5. அருவெங்காடு

6. மேல்துக்கிL

7. கீழ்துக்கிலி

8. கருணாம்பட்டு

9. நக்கவலவு

10. மேல்நிலாவூர்

(ஆ) கள்ளிப்பாறைநாடு:

11. கிழாக்காடு

12. வெங்கனூர்

13. கூடாரம்

14. பெருநத்தம்

15. வில்வாத்தி

16. புதூர்

17. கண்ணூர்

18. கள்ளிப்பாலை

19. கொட்டப்பூண்டி

குரும்பக் கவுண்டர் நாடு:

அ)தும்பை நாடு:

20. மோட்டாம்பட்டி

21. தும்பை

22. பாச்சேரி

23. புதுப் பாளையப்பாட்டு

24. சிறுக்கலூர்

25. கூடலூர்

26. பாக்களம்

27. வேளாநெல்லி

28. பெரும்பூர்

ஆ)தென்மலை நாடு:

29. பழையப் பாளையப்பட்டு

30. கள்ளிப்பட்டி

31. பொருப்பம்

32. தூரூர்

33. பெலப்பூண்டி

34. பாணப்பாடி

35. ஆத்திப்பாடி

36. மலையரசம்பட்டு

37. மொட்டயலூர்

38. இன்னாடு

39. எருக்கம்பட்டு

40. வெங்கோடு

41. வெதூர்

42. வெள்ளரிக்காடு


இ)ஆதிப்பதிநாடு:

43. ஆனைமடுவு

44. மூலைக்காடு

45. வஞ்சிக்குழி

46. வாழக்குழி

47. எடப்பட்டு

48. பாப்பாத்தி மூலை

49. மான்கொம்பு

50. தும்பாம்பட்டு

51. அவலூர்

52. தடுத்தாப் பாளையம்

53. குறும்பலூர்

54. ஏரிக்கரை

55. புரசம்பட்டு

56. தேக்கம்பட்டு

57. சேராப்பட்டு

58. பெருக்கஞ்சேரி

59. கீரிப்புலி

60. அன்னூர்

சடையக் கவுண்டர் நாடு:

அ) மதுநாடு:

61. வெள்ளிமலை

62. வாழப்பாடி

63. மாயம்பாடி

64. சாத்தனூர்

65. கெண்டிகல்

66. மதூர் 

67. கங்காப்பாடி

68. வண்ணியூர்

69. ஆராம்பூண்டி

70. மல்லியம்பாடி

71. பரங்கிநத்தம்

72. தேவனூர்

ஆ)சுண்டப்ப நாடு:

73. வெள்ளாறு

74. கரியலூர்

75. ஆலத்தி 

76. சுண்டப்பாடி

77. மாடிப்பட்டு

78. கொடுந்துறை

79. முண்டியநத்தம்

80. கல்புடை

81. வையலம்பாடி

82. மட்டப்பாறை

83. கருவேலம்பாடி

84. நொச்சிமேடு

இ) உப்பூர்நாடு:

85. உப்பூர்

86. எருக்கம்பட்டு

87. வாரம்

88. கிடார்

89. தொரங்கூர்

90. கருநெல்லி

91. மேல்முருவம்

92. தொரடிப்பட்டு

93. வண்டகப்பாடி

94. எட்ராபட்டு

ஈ) உழவுநாடு:

95. எழுதூர்

96. காவியம்

97. வேலம்பட்டி புதூர்

25. பாச்சேரி

99. சினந்தூர்

100, சின்னதிருப்பதி

101. தொடமாதி

102. தாரணம்பட்டு

103. முண்டியூர்

104. பொட்டியம்

பெரிய கல்ராயன் மலை நாடு:

அ) கீழ்நாடு:

105. பட்டிமேடு

106. கிராங்காடு

107. ஆலமரத்துப்பட்டு

108. அடியலூர்

109. சுல்லூர்

110. பட்டிவலவு

111. சேம்பூர்

113. பாச்சமேடு

113. கன்னியாவலவு

114. நாகலூர்

115. தாழக்கரை

116, மேல்பூண்டி

117. கீழ்ப்பூண்டி

118. குன்னூர்

119. காட்டுவலவு

120. ஆவாரை

121. தேக்கம்பட்டு

122. பணம்பட்டு

123. அத்தரிப்பட்டு

124. மொடவன்கோயில்

125. சிட்டம்பட்டு

ஆ) மேல்நாடு:

126. மண்ணூர்

127. பெரண்டூர்

128. மொரசம்பட்டு

129. மோதூர்

130. தாழ்ப்பள்ளம்

131. மேல்பள்ளம்

132. அளரிப்பட்டு

133. கோவில்புத்தூர்

134. ஒடுவன்காடு

135. பெரியவலவு

136. செம்பருக்கை

137. செங்காட்டுப் புதூர்

138. புளியம்பட்டு

139. கரியக்கோயில்

140. வேலம்பட்டு

141. முரசம்பாடி

142. சூலாங்குறிச்சி

சின்ன கல்ராயன் மலை நாடு:

அ) தென்னாடு:

143, ஈச்சங்காடு

144. பொலப்பன்கடை

145. கீரைக்கடை

146, அருணா

147, வெள்ளரிக்காடு

148. கோயில்காடு

149. கள்ளுப்பட்டு

150. இராக்கோடு

151. ஏரிவலவு

152. வெங்காயக்குறிச்சி

153. பகுடுப்பட்டு

154. மூங்கில்பட்டு

155. புதூர்

156, பழைய செல்லங்குறிச்சி

157. வளக்காப்பட்டு

158. கொண்டியாப்பட்டு

159. தேக்கம்பட்டு

160, நாவலூர்

161. மோலயக்காரன் வலவு

162. கே.நவம்பட்டு

163. எரும்பூர்

164. நவம்பட்டு

165. அம்பலத்திட்டு

166. கச்சியான்வலவு

167. அத்திமரத்துவலவு

166. பெத்தாக்குறிச்சிவலவு

169. நத்தம்பட்டு

170. குப்பூர்

171, கும்மங்குறிச்சி

172. குத்தாப்பட்டு

173, காட்டுவலவு

174, மோலயனூர்

175. சேர்வாய்ப்பட்டு

176. மணியார்க்குண்டம்

177. வலசவலவு

178. அருவன்காடு

179. கீழ்நடுப்பட்டு

180. மேல்நடுப்பட்டு

ஆ) வடநாடு:

181. கிளாக்காடு

182. தொட்டித்துறை

183. கருமந்துறை

184. பெருஞ்சூர்

185. பூண்டிக்காடு

186. கும்பாடி

187. மருதையான் வலவு

188. வேலம்பட்டு

189. செல்வங்குறிச்சி

190, சின்னமாங்கோடு

191. குறிச்சி

192. பச்சப்புலாத்திவலவு

193. ஆலமரா


வெள்ளி, 24 ஜூலை, 2026

கல்வெட்டில் மலையாள முதலிகள் (Malaiyala Mudhali's inscription)

கல்வெட்டில் மலையாள முதலிகள்

ஆங்கிலேயர் காலம் முன்பு வரையில் ஜவ்வாது மலையின் பெயர் நவிரமலை ஆகும்.யானைகள் நிறைந்த மலை என்பதால் இந்த பெயர் வந்தது.

இந்த நவிரமலை(ஜவ்வாது மலை) சோழர் ஆட்சி காலத்தில் ஆடையூர் நாட்டில் இருந்துள்ளது.இன்றும் ஆடையூர் கிராமம் மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.

ஆடையூரை ஆட்சி செய்தவர்கள் ஆடையூர் நாடாழ்வான் என அழைக்கப்பட்டனர்.இந்த கரிகால ஆடையூர் நாடாழ்வான் குடும்பத்தில்,அரச பதவி காரணமாக அண்ணன் குடும்பத்திற்கும்,தம்பி குடும்பத்திற்கும் பகை ஏற்படுகிறது.தம்பி குடும்பத்தை ஊரை விட்டு வெளியேற்ற ஊர் மக்கள் சபதம் எடுக்கிறார்கள்.அதை கல்வெட்டி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த கல்வெட்டில் கல்வராயன் மலை பகுதிகள் மற்றும் நவிரமலையில் (ஜவ்வாது மலை) உள்ள தென்பற்று நாடு (தென்மலை நாடு) மற்றும் வடமலை நாடு ஆகிய இரு மலைநாட்டு நாட்டவர்,நாட்டு முதலிகள்,மலையாள முதலிகள்,பிள்ளை முதலிகள்,மலை அடிவாரத்து முதலிகள்,முதுநீர் மலையாளர்கள் மற்றும் மலையரண் முதலிகள் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.

*நாட்டு முதலி :- நாட்டார் 

*மலையாள முதலி:- மலை மக்கள் மலையிலிருந்து நிலப்பகுதியில் தங்கும் பொழுது மலை மக்களை மலையாளர் என பிற மக்கள் அழைக்கிறார்கள்.அப்படி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த மலையாளர் மக்கள் வாழும் நாட்டுக்கு நாட்டார்.

*பிள்ளை முதலி:- 
நாட்டு முதலிக்கு அடுத்த பதவியாக இருக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகளில் "தொண்டை மண்டலத்து ஆர்பாக்கம் கிழார் முதலிபிள்ளை"என்பவரும்,"வெள்ளாளர் மாங்குடையான் உலகன் முதலிபிள்ளை" என்பவரும் குறிக்கப்படுகிறார்கள்.
கோயம்பேடு குறுங்காலீஷ்வரர் கோவில் கல்வெட்டில் "நடுநாட்டு திருநாவலூர் முதலிப்பிள்ளை சூரியக்கோன்" என்பவர் குறிப்பிடப்படுகிறார்.
மீனாட்சி கோவில் மண்டபத்தில் முதலிபிள்ளை மண்டபம் ஒன்று உள்ளது.இது கடந்தை முதலியார் என்பவரால் கட்டப்பட்டது.

*தனியாள் முதலி:- தனியார் படைப்பிரிவுக்கு தளபதி

*படை நாயகம் :- படை தளபதி

*முதுநீர் மற்றும் மலையரண் மலையாளர் பற்றிய குறிப்புகள் இல்லை.

சோழர் காலத்திலேயே இங்கு காராளர் இனத்தை சார்ந்த முதலியார்கள் குடியேறி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.அதற்கு சான்றாக கார்காத்த வெள்ளாளர் குல பிரிவில் ஒன்றான பாக்குமுடையார் குல பிரிவு இன்றும் இந்த மக்களிடையே உள்ளது.

கல்வெட்டு:-

திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம்.
ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் ஆயிரத்து ஒரு நூற்று எண்பதின் மேல் செல்லாநின்ற ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்துத்ருதியையும் நா[ய]ற்றுக்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _ க்கு உள்ளுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரை நாடும் மூவரை வென்றநல்லூற்கு மேற்கு சிற்றிங்கை[க்]குக் கிழக்கு உட்பட்ட 
 நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டு கரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றாடுவார்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும் நவிரமலைத் தென்பற்று நாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளு முன்னுப்பட்ட
பலசனத்தோமும் அடிவாரத்து மலையாளரும் மலையாள முதலிகளும் முதுநீர்மலையாளரும் மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்னாட்டவரும் பன்னாட்டு முதலிகளும் பொற்கொ[ற்ற] கைக்[கோளரும் ஆண்]டார்களும் சிவப்ராஹ்மணரும் மன்றாடிகளு முவச்சரும் தென்கரைநாட்டு வடமலைநாட்டவரும் தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவ[ரு]ம் பண்
ணுவாரும் நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும் பாணரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும் இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்] அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ [ண]ம் பண்ணினபடியாவது எங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[இ]ருக்க. இவர் ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி
யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன் பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]ணாயனும் கருப்புக்கட்டி நாயக்க[ருட]னே கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதேடிக் கிழற்றுப்போயிருக்க இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந்தீ[ர்த்து]த் திருவெழுத்துச்சாத்தின திருமுகமும் குடுத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு
ம் எங்களுக்கும் பகைதேடி வெறுப்பான பேருடனே கூடி எங்களுக்குப் பகையாகையினாலும். இவர்கள் பிரிதிகங்கர் வ[ழியி]லுள்ள பேராகையாலும் இப்பெரியுடையாநும் அரசகணாயனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வானும் எங்கள் நாயன்மாற்கு இராசத்துரோகிகளும் நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் மூவரையும் பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தோம். பிரிதிகங்கர் மக்கள் எங்கள் நாயன்
மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக் கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வர்முறையிலே இராச்சியம் பண்ணப் கடவர்களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி இப்பெரியுடையானையும் அரச[கணா]யனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும், இவர்கள் மக்களி[ல்] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில் புகுத ஒட்டோம்
இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யோம், இடங்குடுப்பாரோடு கூடுவதுஞ் செய்யோம். இவர்க[ள்] மூவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு] இடங்குடுக்[கச்] செய்யக்கடவோமு மல்லோம். இவர்களுக்குக் கீழோலை விடுதல், இவர்களைக் கா[த்]தல், இவர்க[ள் _ _ _ _ _] சருடன் பேசுதல் செய்தாருண்டாகில் இராசத்துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க ரு]த்தறுக்கக்கட _ _ _ _ கவும். இவர்கள் பெண்டுகளை மூக்கு மூலையுமறுத்துவிட
 க்கடவோமாகவும். இவர்கள் பக்கல் பெண்டுகள் போனவன் குடியாக இப்படி [ஆகச்] செய்யகடவோமாகவும் இவர்கள் பக்கல் போன பேரைப் ப[ணி]செய் மக்[களை] இட்டுக் கொன்றுபோடக் கடவோமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் பூணை ஓலைப்பாடியு[ம் ந]ந்திமங்கலமும் உள்ளுப்பட்ட இந்த அனைத்து[ங்] _ _ _ _ _இப்படி நிலைமைக் _ _ _ _ள் ப்ரமாணமிட்டோம்.
இப்படி அற்றுமறவும் செய்திலோமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத் தானே மிணாளன் அசல வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கி[ற] ப[றை]யற்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில் படுக்க[த] ஒலைப்பாடிக்குத் தப்பினாருண்டாகில் செயங்கொண்ட நாச்சியார் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பட்ட[ஆ]டுபட்டது படக்கடவோமாக செயங்கொண்ட நாச்சியார் திரி_ _ _ _ _ தமிட்டுச் சிங்கநாயற்று இருபத்துமூன்றா
 ந் தியதியான பஞ்சமியும் கஸ்வதியும் பெற்ற செவ்வாய்க் கிழமை நாள் ஆடுவெட்டிப் பூதமுதை[த்]து நிலைமை ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறை நாயனார் கோயிலிலே கல்லும் வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம். இக் கல்வெட்டினபடிக்குத் தப்பினவன் கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்]தினவன் பாவங்கொள்வான். இப்படிக்கு இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் _ _ _ _ ய நாட்டாசாரியனேன். இவை என்னெழுத்து.


மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம் பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, 
அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.

விளக்கம்: 

*வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. 

*ஆடையூர்நாட்டு பகுதிகள் மற்றும் குடிகள்:

அ)எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _ க்கு உள்ளுப்பட்ட நாடும்,மலையும்,அடிவாரமும், தென்கரை நாடும்.

ஆ) மூவரை வென்றநல்லூற்கு மேற்கு மற்றும் சிற்றிங்கை (சிட்டிலிங்கி)க்குக் கிழக்குக்கு(கல்வராயன் மலை பகுதி) உட்பட்ட நாடும்,மலையும்,மலையில் உள்ள நாடும்.இந்த இரண்டு கரைநாட்டுக்கு உட்ப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகம் செய்வார்களும்,மன்றாடுவார்களும், பிள்ளைமுதலிகளும் தனியாட்களும் படைநாயகம் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும்.

இ) நவிரமலைத்(ஜவ்வாது மலை) தென்பற்று நாட்டவரும்,நாட்டுமுதலிகளும், வடமலைநாட்டவரும், நாட்டுமுதலிகளும் பலசனமும்,அடிவாரத்து மலையாளரும், மலையாள முதலிகளும்,முதுநீர்மலையாளரும், மலையரண்முதலிகளும்,செட்டிகளும், வாணிகரும்,கணக்கரும்,கருமப்பெரும் பன்னாட்டவரும்,பன்னாட்டு முதலிகளும், பொற்கொல்லர்,கைக்கோளரும் ஆண்டார்களும்,சிவப்ராமணரும், மன்றாடிகளும், உவச்சரும்.

ஈ) தென்கரைநாட்டு(கல்வராயன் மலை பகுதி) வடமலை நாட்டவரும், தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவரும் பண்ணுவாரும், நியாயத்தாரும்,பன்னிரண்டு பணிமக்களும்,உள்ளிட்ட பெரும் வேடரும், பாணரும்,பறையரும்,பறைமுதலிகளும் செக்கிலியரும்,இறுளரும் உள்ளிட்ட அனைத்துச்சாதிகளும்,கீழ்க்கண்ட சபதம் ஏற்கிறார்கள்.

*அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். 

*இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். 

*பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர்.

*அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான்,அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். 

*இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர் ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம்.
இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். 

*இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம்.

*அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். 

*சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.

ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள்,கல்வராயன்மலை நாட்டவர்கள் மற்றும் ஜவ்வாதுமலை நாட்டவர்கள் மேற்கண்டபடி சூளுரை செய்துள்ளனர்.

பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138

செவ்வாய், 7 ஜூலை, 2026

கொல்லிமலைக் காராளர் பேரூர் கல்வெட்டு

கொல்லிமலை காராளர் பேரூர் கல்வெட்டு:

ஊர் : பேரூர்,கோவை மாவட்டம்

அரசு : கொங்குச்சோழர்

இடம்:பட்டீஸ்வரர் கோயில் மகாமண்டபம் வடக்குச்சுவர்

13 ஆம் நூற்றாண்டில்,சோழர் ஆட்சி காலத்தில்,இரு குறுநில மன்னர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர் பற்றிய கல்வெட்டு இது.இதில் கொல்லிமலை காராளர்(மலையாளி) மக்களின் குல பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

விளக்கம்:

1.குறுநில மன்னர் ஒருவர், மலைநாட்டிலிருந்து படைகளை வரவழைத்து,படையெடுத்து சென்று கோவன் புத்தூர் என்கிற கோயமுத்தூரை வெற்றி கொள்கிறார்.

2.பின் பேரூருக்குச் சென்று திருவான்பட்டி உடையார் வணங்கி,வெற்றியின் அடையாளமாக வாயறைக்கா நாட்டு கீழ் மலையூர் என்கிற விக்கிரம சோழ நல்லூரை மலை இராச்சியத்திலிருந்து வந்தவர்களுக்கு தானமாக கொடுக்கிறார்.தானம் அளிக்கப்பட்ட ஊரின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளது.

3.அவ்வூரின் குடிமக்களாக (காணியாளர்களாக) "பிள்ளைகளில்(வெள்ளாளரில்)..... வாடியான் வீர கங்கனான தன்மபாலனும்,மழவரையன் .....  உத்தனும்,சோழன் கூத்தனும்,சோழன் வே மனதை பிள்ளையும்,பூசன் ....... ,காவி ....... ஆகியோருக்கு கொடுக்கிறார்.

4.வீர கங்கன்,மழவரையன்,சோழன்,பூசன் மற்றும் காவி இவர்களுக்கு ஏற்ற நபரை நாட்டாராக(மன்றாடி) நியமித்துக் கொண்டு ஆட்சி செய்யலாம்"என அரசர் கல்வெட்டிக் கொடுக்கிறார்.

"பிள்ளை" - பிள்ளை என்பது சோழ நாட்டில் வெள்ளாளருக்கு உள்ள பட்டம் ஆகும்."பிள்ளைகளில்" என்பதற்கு "வெள்ளாளரில்" என பொருள் ஆகும்.

***காஞ்சி வெள்ளாளர்கள் சோழ தேசத்திலிருந்து கொல்லி மலைக்கு குடியேறி,பின் மலை நாட்டிலிருந்து கோயமுத்தூருக்கு படை எடுத்துச் சென்று பேரூரிலும் குடியேறி இருக்க வேண்டும்***


***வெள்ளாளரில் வீரகங்கன் பட்டம் கொண்ட தன்மபாலனுக்கும்,மழவரையன் பட்டம் கொண்ட உத்தனுக்கும்,சோழன் பட்டம் கொண்ட கூத்தனுக்கும் மற்றும் மனதை பிள்ளைக்கும்,பூசன் பட்டம் கொண்ட ஒருவருக்கும்,காவி பட்டம் கொண்ட ஒருவருக்கும் காணியாட்சியாக கீழ் மலையூர் என்கிற ஊரை தானமாக கொடுக்கிறார் மன்னர்.***

வீர கங்கன்:
***இதே மாவட்ட கல்வெட்டில் வீர கங்கன் என்பவன் திருவெண்காடு ஊரை சார்ந்தவன் என்று உள்ளது.திருவெண்காடு கிழக்கு கடற்கரை பக்கம் சீர்காழி வட்டத்தில் உள்ளது.***

***வீர கங்கன் பட்டம் கொண்ட அரசூருடையான் பரமத்திதரான வீர கங்கன் என்னும் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.***

***கல்வராயன் மலை பகுதியை சோழர் கால கல்வெட்டுகளில் "மகதை மண்டலத்து வெண்காட்டு மலை துறவி நாடு" என குறிப்பிடுகின்றனர்.***

மழவராயர்:
***மழவராயர் என்னும் பெயர் மழுவர் மலையர் என திரிந்து தற்பொழுது மலையன் என அழைக்கப்படுகிறது.***

***சேர்வராயன் மலை காராளர்(மலையாளி) இனத்தில் மலையன் குலம் உள்ளது.கொல்லிமலை காராளர்(மலையாளி) இனத்தில் ஆதி மலையன் சக்ரவர்த்தி என்னும் குலம் உள்ளது***

***சேர்வராயன் மலையில் உள்ள கோவிலூர் வாணீஷ்வரர் கோவில் கல்வெட்டுகளில் "கற்கட மாராயன் முதலிகளில் மழவராயர்" என்னும் ஒருவர் குறிப்பிடப்படுகிறார்.

***திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்வெட்டுகளில் வெள்ளாளர் மாடைகளில் மழவராயர் அவினாசி மழவராயர் என்று உள்ளது குறிப்பிடத்தக்கது ***

***வெள்ளாளர்களுக்கும் மழவராயர் பட்டம் இருப்பது தெரிய வருகிறது.***

இதில் வரும் பிள்ளை(பிள்ளான்),சோழன்,மழவரையன்(மலையன்),பூசன்,காவி என்பது கொல்லி மலை காராள மக்களின் குல பெயர்கள் ஆகும்.

எனவே இந்த கல்வெட்டில் வரும் மலை இராச்சியம் என்பது கொல்லிமலை பகுதியாகவோ அல்லது கல்வராயன் மற்றும் கொல்லி மலை பகுதியாகவோ இருக்க வேண்டும்.

வெற்றி பெற்ற அரசர் விக்கிரம சோழராக இருக்கலாம் ,தோல்வியுற்ற அரசர் வீர கேரளர் அரசராக இருக்கலாம்.


கல்வெட்டு:

1. ஐஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திக் கோனேரி மேல்கொண்டான் ஆளுடையார் திருவான்பட்டி ஆளுடைய நாயினார் நாம் மலையிராச்சியத்திலே யிருந்து நாம் நம்

2. மிராச்சியத்திலே ஜயம் பண்ணி நாம் வந்து புகுந்து நாம் உடையாரை தெண்டன் பண்ணிக் கோவன்புத்தூரை எறிஞ்சு கொண்டு நாம் பேரூரிலே

3. வந்து புகுந்து திருவான்பட்டியுடையாரை தெண்டந் பண்ணி நமக்கும் அய்யனுக்கும் நன்றாக உதகம் பண்ணிக்குடுத்த ஊராவது வாயறைக்கா

4.நாட்டுக் கீழ்மலை யூரான விக்கிரம சோழ நல்லூர்க்கு எல்லையாவது கீழ்பாற்கெல்லை குண்டக் கரைக்கு மேற்கும் தென்பாற் கெல்லை மயிலாடுபா

5. றைக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை தண்டியன் கரைக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை... க்கு தெற்கும் இந்நான் கெல்லைக்குள் ந

6. டுவுப்பட்ட ஊர் ஏரி நாம் உதகம் பண்ணிக்குடுத்த இக்குடிகள் பிள்ளைகளில்... வடியான் வீரகங்க

7. னான தன்மபாலனும் மழவரை[யன்]... உத்தனும் சோழன் கூத்தனும் சோழன் வே மனதை பிள்ளை... பூசன் ...ன் காவி

8. இக் குடிகள் தம்மில் இசைந்த பேரை மன்றாட்டு இட்டுக் கொள்வார்களாகவும் இந்நான்கு எல்லை

9. சுங்கம் சாரிகை மற்றும் எப்பேர்ப்பட்டன கடவதல்ல பொன்... கடவதல்ல...

10. [புற்றுந் தெற்றியும்... மேனோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் அமுது படிக்குடலாவதாகவும் இஊர்க்கு... னாட்டு வார்க்கு ஊர்(க்)கு பொன்னு...

11. நத்தம்.... மற்றும் எப்பேற்பட்டனவும் செலுத்தக் கடவத...

நன்றி - கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள்




திங்கள், 6 ஜூலை, 2026

கொல்லிமலை செக்கு கல்வெட்டுகள்

கொல்லிமலை செக்கு கல்வெட்டுகள்:
kollimalai chekku inscriptions:

கொல்லிமலையில் காராளர்(Karalar) என்னும் மலையாளி பழங்குடி இனம் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் சின்ன அண்ணன் பிரிவை சார்ந்தவர்கள்.இம்மக்களுக்கு காராள கவுண்டர்,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை வெள்ளாளர் என்றும் பிற பெயர்கள் உண்டு.

இவ்வினத்தில் சாத்தன் வீடு என்னும் குலத்தில் பிறந்த அறப்பள்ளி,பன்றி என்னும் இருவர் தானமாக கொடுத்த செக்கு பற்றிய செய்திகள் இது.

கல்வெட்டு 1:

இடம்:
கொல்லிமலை,அரியூர்நாடு, மேல் கலிங்கம் சோழமுடையார் கோயில் அருகில் உள்ள செக்கு

 காலம் :12 ஆம் நூற்றாண்டு.(1200 ஆண்டுகளுக்கு முன்)

 செய்தி :

 இவ்வூர்ச் சிவன் கோயிலுக்கு "அறப்பள்ளி சாத்தன்" கொடுத்த செக்கு.

கல்வெட்டு பகுதி:
ஸ்வஸ்திஸ்ரீ இச்செக்கு உள்ளூர் மாதேவர்க்கு குடுத்தேந் அறப்பள்ளி சாத்தநாந

 கல்வெட்டு 2:

 இடம்:

  கொல்லிமலை,திண்ணனூர் நாடு வாசலூர்ப் பட்டி தோட்டம்.

 காலம் :12 ஆம் நூற்றாண்டு.

 செய்தி :

 வாயலூருடையான் (வாசலூர்) "பன்றி சாத்தன்" கொடுத்த செக்கு.(வாயலூர் பகுதியை ஆட்சி செய்தவர் அல்லது நாட்டார்)

கல்வெட்டு பகுதி:

 ஸ்வஸ்திஸ்ரீ வாயலூருடையாந் பந்றி சாத்தன் செக்கு.

நன்றி - ஆவணம் இதழ் 12

ஞாயிறு, 5 ஜூலை, 2026

கொல்லிமலை,நெடுவலம்பட்டி வணிகர் கல்வெட்டு

கொல்லிமலை நெடுவலம்பட்டி வணிகர் கல்வெட்டு:

 இடம்:நெடுவலம்பட்டி,கொல்லிமலை

ஆண்டு: 12 ஆம் நூற்றாண்டு
(800 வருடங்களுக்கு முன்)

கல்வெட்டிலுள்ள உள்ள தெய்வத்தைச் சுற்றி மேளம்,விளக்குகள், வில் மற்றும் செளரி போன்ற வணிகக்குழுக்களின் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் உள்ள சிங்கம், அதன் மேல் ஆந்தை அல்லது முயல் குறிப்பு இது வீர லட்சமி(கொற்றவை) உருவம் என்று காட்டுகிறது.

கல்வெட்டு:

"ஸ்வஸ்தி ஸ்ரீ நெடுவலமான தேசி ஆசிரிய
பட்டணம் ஹர" 

விளக்கம்:

நெடுவலமான - பெரும் படையான, 
தேசி - வணிகர்
ஆசிரிய - போர்க் காயத்தால் ஓய்வு கொள்,
பட்டணம் - காப்புடைய ஊர், 
ஹர - அழித்து, வென்று,எறிந்து. 

இன்றைய நெடுவலம்பட்டி என்ற ஊர் பெயர் இதை வணிகர் தம் பெரும்படை நிலமாக இருந்திருக்க வேண்டும்.

போரில் காயமுற்ற வணிகப் படை வீரர் தங்கி மருத்துவம் பார்த்து ஓய்வு கொள்ளும் இடம் இங்கே இருந்துள்ளது. அதை யாரோ அழித்த வென்ற செய்தியை கீழே தமிழ் எழுத்தில் உள்ள கல்வெட்டு
தெரிவிக்கிறது. 

ஆனால் அழித்தவர் யார் என்பது
தமிழ் கல்வெட்டில் இல்லை. ஆனால் வீர லட்சுமி(கொற்றவை) உருவத்தின் வலப்புறத்திலும், தலை மீதும் திரிந்த சிந்து எழுத்து, தமிழி எழுத்து கலப்பில் குறிப்புகள்
உள்ளன. 

சிந்து தமிழி எழுத்து:

வீர லட்சுமி(கொற்றவை) தெய்வத்திற்கு மேலேயும் வல பக்கமும் சிந்து தமிழி எழுத்து காணப்படுகிறது.

அழித்த வணிகர் பட்டணத்தை
மீண்டும் பழையபடியே வணிகரிடம் ஒப்படைத்தாக (restore) தெரிகிறது. அழித்த கடற்படை எந்த வேந்தனுடையது என்று குறிப்பு இல்லை.

இது வணிகருடைய கடற்படையா? வணிகர் நிலப் படையினருடன் அவருக்குள் ஏற்பட்ட பிணக்குப் போரா? இது என்றும் தெரியவில்லை. 

முதலில் தலை மேல் உள்ள எழுத்து:

சதுரத்தில் கீழே வலித்த கோடு நா; 8 வடிவ உடுக்கை -வ; நெடுங்கோட்டின் குறுக்கே = - ன; 0 - ம்; n - ப; தமிழி [- ட்; மீண்டும் [- ட; தமிழி | - ர்; தமிழி | - ண்; தமிழி |● - ஈ, தமிழி L - ரு; ? - ன்; பிறை )) - ந; தலைமாறான J - ன்; பிறை ((-ன; =-ண். இதில் உள்ள எழுத்துகள் நாவனம் பட்டர் ண்ஈருன் (ணீருன்> நீருன்) நன்னண் > நன்னன் என்பது. இதன் பொருள் நாவனன் (ம்) - நாவாய்ப் படை; பட்டர் - படைத் தலைவர்; நீருள்(ன்) கடலில், seas; நன்னன் -பெருந்தகை, Lord. 

இதன் பொருள் "நாவைப்(கடற்படை) படைத் தலைவர் இவர் கடல்களின் பிரான் (Lord of seas) "என்கின்றன மேலே உள்ள சிந்து, தமிழி கலப்பு எழுத்துகள்.

வலப்பக்க எழுத்துகள்:

தலைமாறான J கீழ் வலித்த கோடுடன் நா; உடுக்கை 8-வ; @ - ன; V - ம்; n - ப; [] - ட், பட்டாக் கத்தி - ட; கவிழ்ந்த ய - ய்; வில் D - த; | - ர்; A - ம; A - ம். இதில் உள்ள எழுத்துகள் நாவனம் பட்டய் தர்மம் என்பன. பட்டய் > பட்டை என படிக்க வேண்டும். இதன் பொருள் நாவனன்(ம்) - நாவாய்; பட்டை - படை; தர்மம் - கல் நிறுத்தம்.

இந்த "கல் நிறுத்தம் நாவாய்ப்(கடற்படை) படையால் நிகழ்ந்தது" என்று பொருள்.

குறிப்பு: 

இதே போல் சிந்து தமிழி எழுத்துக்கள் பெரம்பலூர் வெண்கலம் சிவன் கோவில் வணிக கல்வெட்டுகளில் உள்ளது.அதில் "தாவளம்(தாங்கும் இடம்)" என்று உள்ளது.

நன்றி: சோழ மண்டல வரலாற்று தேடல் குழு