மழவரையன் சுந்தர சோழன் செப்பேடு:-
அரசன் - சுந்தர சோழர்
சிற்றரசர் - மழவரையன் சுந்தர சோழர்
ஆண்டு - 10 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு விளக்கம்:-
"தூசியூர் நகரத்தாரிடம் (வணிகர் அல்லது குடிமக்கள்) முழு மனைக்கு கால் அளவும், அரை மனைக்கு அரை கால் அளவும் வரியாக கொடுக்க வேண்டும்.
வரி கொடுப்பதில் ஏதாவது சிக்கல் வந்தால் நந்திபுரம் ஊரில் உள்ள வரி அளவை அடிப்படையாக கொண்டு வரி கொடுக்க வேண்டும்" என உத்தரவு போட்டுள்ளார்.
(கும்பகோணம் ஊரிலுள்ள நந்திபுரம் (நாதன் கோவில் என்கிற திரு நந்திபுரம்) என்னும் ஊரில் உள்ள வரி அளவு என்பது சோழர் காலத்தில் முன்மாதிரியாக எல்லா ஊர்களிலும் வசூலிக்கப்பட்டது.)
(சோழரின் பல கல்வெட்டுகளில் "நந்திபுரம் ஊரில் உள்ள வரியை அடிப்படையாக கொண்டு வரி வசூலிக்க வேண்டும்" என உள்ளது.)
கல்வெட்டு:-
2.ண்டு யஆவது மழவரையன் சுந்தரசொழனெ-
3.ன்' தூசியூர் நகரத்தாரை நாங் கொள்ளும் மிறை முழும-
4.னை காலும் அரைமனை அரைக்காலும் நின்ற இறைஆ-
5.கக் கொள்வதாகவும் தண்டங்குற்ற முள்ளது நந்திபுர ம-
6.ற்சாதி¹ கொள்வதாகவும் இதன் றென்றான் ஸுகிதசந்தான-
7.ம் துப்பன வறுவான் இது இர[ரக்ஷி]த்தானடி என் தலை மெலது.
குறிப்பு:-
*இந்த "மழவரையன் சுந்தரசோழர்" என்பவர் இன்னொரு செப்பேடுகளில் "ஒற்றியூரன் கொல்லிமழவன் பிரதிகண்டன்" மகன் என குறிப்பிடப்படுகிறார்.
*இந்தப் "ஒற்றியூரன் பிரதிகண்டன்" மன்னர்கள் தொண்டை மண்டலத்திலுள்ள திரு ஒற்றியூரை பூர்வீகமாக கொண்டவர்கள்.சோழர்களின் படை தளபதிகள்.
*கொல்லிமலை காராளர் (மலையாளி) மக்களும் தங்களது பூர்வீகம் காஞ்சிபுரம் (தொண்டை மண்டலம்) என்கிறார்கள்.எனவே இந்த பிரதிகண்டனும் காராளர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
*இவர்களுக்கு கீழ் கொல்லிமலை காராளர்(மலையாளி) மக்கள் போர்வீரர்களாக இருந்திருக்க வேண்டும்.
*சோழருக்கு அடங்கிய சிற்றரசாக கொல்லிமலையையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் ஆட்சி செய்தவர்கள்.ஆதலால் இவர்கள் "கொல்லி மழவன்" என்ற பட்டம் கொண்டவர்கள்.
*கோவை பேரூர் கல்வெட்டு ஒன்றில் "மலை ராச்சியத்திலிருந்து வந்து பேரூர் பகுதியை ஆட்சி செய்தவர்களில் "மழவரையர்" பட்டம் கொண்டவர்களும் உண்டு".
(https://karalarmani.blogspot.com/2026/06/blog-post_13.html)
*கோவை மாவட்ட கல்வெட்டுகளில் "வெள்ளாளர் மாடைகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்.
*சேர்வராயன் மலை கோவிலூர் வாணீஷ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கற்கட மாராயர் "முதலிகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்.
நன்றி:-
SOUTH INDIAN INSCRIPTIONS VOL III
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக