வெள்ளி, 26 ஜூன், 2026

ஜவ்வாது மலை,கோவிலூர் சோழர் கால கங்கர் கல்வெட்டுகள்

ஜவ்வாது மலை,கோவிலூர் சோழர் கால கங்கர் கல்வெட்டுகள்

சோழர் கால கங்கர் கல்வெட்டு:

ஜவ்வாது மலை கோவிலூரில் உள்ள திருமூலநாதர் கோயிலின் கருவறையின் தெற்கு பக்கத்தில் முப்பட்டைக் குமுதத்தில் 

கல்வெட்டு 1 :

*11 ஆம் நூற்றாண்டு,வீர ராஜேந்திர சோழனின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘கங்க குறுநில மன்னன் பிரிதிவி கங்கன் அரசகங்கன் நாயன் வருகிறான்’ 
என குறிப்பிடப்பட்டுள்ளது. 

(இந்தக் கல்வெட்டில் திருமூலநாதர் கோயிலுக்கு எதிரில் ஒரு குளம் வெட்டிய தகவலும் பெரிய ஏரிக்கு தும்பு அமைத்துள்ள தகவலும் உள்ளது.)

கல்வெட்டு 2 :

கோவிலூர் ஊருக்கு நுழையும் முன்பாக சாலை ஓரத்தில் வேலியில் மறைந்துள்ள ஒரு அரசனின் சிற்பம் நிற்கிறது. 

11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டில்“கலிதாநம் தந்தான் அழகிய கங்க நாடாழ்வான்”என்று உள்ளது.

"கலிதானம்" என்பது கோவிலுக்கு நிலங்களையோ அல்லது வேலை ஆட்களையோ தானமாக கொடுப்பது ஆகும்.

"கங்க நாடாள்வான்" என்பது கங்க நாட்டை ஆள்பவன் என்று பொருளாகும்.

இவர், ஒரு கங்கர் குறுநில அரசராவார். இந்தச் சிற்பம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

கல்வெட்டு 3:

*13 ஆம் நூற்றாண்டு,மூன்றாம் இராஜராஜ சோழனின் 29-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில்
 ‘பிருதிவி கங்கன் கூத்தாடுந்தேவன்’ என்பவரின் பெயர் உள்ளது.

* இந்த கல்வெட்டுகள் மூலம் ஜவ்வாது மலையின் ஒரு பகுதி கங்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது தெரிய வருகிறது.

*இந்த கங்கர் மன்னர்கள் காராளர் இனத்தை சார்ந்தவர்கள் என "கார் மண்டல சதகம்" நூல் குறிப்பிடுகிறது.

*இந்த கங்க மன்னர்கள் சோழர் ஆட்சிக்கு முன்பாகவே தகடூர்(தருமபுரி) நாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சோழர் காலத்தில் அவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக மாறினர்.

(கருவறையின் தெற்கு சுவரில் விஜய நகர மன்னரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.)

(திருமூலநாதர் கோயிலுக்குரிய இரண்டு லிங்கங்கள், பிள்ளையார், திருமால், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் கற் சிலைகள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.)

பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒரு நடுகல் திருமூலநாதர் கோயில் வளாகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

நன்றி:
இந்து தமிழ் நாளிதழ்,
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் ம.காந்தி, 
பொருளாளர் முனைவர் ப.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகர் பொறியாளர் மணி.

ஜவ்வாது மலை,கோவிலூர் புலி குத்தி பட்டான் நடுகல்

புலி குத்திப்பட்டான் நடுகல்: 

ஜவ்வாது மலை,கோவிலூர் திருமூலநாதர் கோயில் கோபுரத்துக்கு வடகிழக்கு பக்கத்தில் ஒரு புலிக்குத்தி நடுகல் உள்ளது. 

இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகும்.

“மங்கல பரிதந் மூலகத்துக்கு மகன் வில்லி புலி குத்திப் பட்டான்” 
என்ற கல்வெட்டும் உள்ளது. 

விளக்கம்:
மங்கலம் என்னும் ஊரை சார்ந்த பரிதன் (பரதன்) மூலகத்தான் மகன் வில்லி என்பவர்,கால்நடைகளையும் மக்களையும் காக்கும் பொருட்டு,புலியுடன் சண்டையிட்டு புலியை கொன்று தானும் வீர மரணம் அடைந்துள்ளார்.

நன்றி:
இந்து தமிழ் நாளிதழ்,
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் ம.காந்தி, 
பொருளாளர் முனைவர் ப.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகர் பொறியாளர் மணி.



ஜவ்வாது மலை,கோவிலூர் செக்கு கல்வெட்டு

ஜவ்வாது மலை கல்செக்கு கல்வெட்டு:

ஜவ்வாது மலையில் கோவிலூர் கிராமத்தில் உள்ள திருமூல நாதர் கோவில் அருகில் நிலத்தில் உள்ள செக்கு கல்வெட்டு.

இரண்டு கல் செக்கும் ஒருவரால் தானம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “பரதன் காரிதன் மகன் வென்றிட்டிட வாட்டி மோடி செக்கு"
என பொறிக்கப்பட்டுள்ளது. 

விளக்கம்:

பரதன் காரி என்பவரோட மகன் வென்றிட்டிட வாட்டி மோடி என்பவர் தானம் கொடுத்த செக்கு.

மோடி - மோடி என்பது தாய்தெய்வம் பெயர் ஆகும்.மோடி என்பது ஆண்பால் பெயர், மோடாள் என்பது பெண்பால் பெயர் ஆகும்.

இந்த செக்கின் கல்வெட்டு தவிர மற்ற பகுதி கழனியில் புதைந்துள்ளது. இந்த செக்கின் விட்டம் 75 செ.மீ. 

இந்த நிலத்திற்கு தெற்கில் மேட்டில் வெங்கடேசன் என்பவரது நிலத்தில் இரண்டு கல் செக்குகள் காணப்படுகின்றன.

இன்னொரு செக்கில் “பரதன் காரிதன் மகன் (வெ)ன்றிட்டிட செக்கு” என்றுள்ளது. 

இந்த செக்கின் விட்டம் 1 மீட்டர் 20 சென்டி மீட்டர். அதே நிலத்தில் வேறு கல் செக்கும் மேற்படி கொடையாளி அளித்திருக்கிறார். இந்தச் செக்கின் விட்டம் 1மீட்டர். 

செக்குகள் செய்த காலத்தில் அதிக அளவில் இலுப்பை மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆமணக்கு அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும். இவற்றின் விதைகளை செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து வீட்டுக்கு பயன்படுத்தி கோயிலுக்கும் விளக்கேற்றியிருக்க வேண்டும். தற்காலத்தில் இலுப்பை மரங்கள் இல்லை என்பதுடன் ஆமணக்கு பயிரிடுவதும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி:
இந்து தமிழ் நாளிதழ்,
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் ம.காந்தி, 
பொருளாளர் முனைவர் ப.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகர் பொறியாளர் மணி.

திங்கள், 22 ஜூன், 2026

காராளர் சிறப்பைக் கூறும் கார் மண்டல சதகம் புத்தகம் (KARALAR HISTORY IN Kar Mandala Sadhagam Book)

காராளர் சிறப்பை கூறும் கார் மண்டல சதகம்:

எழுதியவர் - 
கொங்கு வேளாளர் அவினாசி ஆறை கிழார் (கி.பி.1025 - 1075)

விளக்கவுரை எழுதியவர் - 
ப.அ.முத்து தாண்டவராயன் பிள்ளை அவர்கள் (11-11-1929).

சதகம் என்றால் நூறு என்று பொருள்.நூறு பாடல்களை உடைய நூல் ஆதலால் சதக நூல் என்று பெயர்.

*காராளர் என்பவர்கள் பூர்வீகம் கார் மண்டலம் ஆகும்.இன்றைய கர்நாடகாவின் தென் பகுதியும்,கேரளாவின் வடக்குப்பகுதியும்,தருமபுரி,கிருட்டிணகிரி,ஓசூர் மற்றும் திருப்பத்தூர்,பவள மலை என்கிற ஜவ்வாது மலையின் மேற்கு பகுதி மற்றும் கல்வராயன் மலையின் மேற்கு பகுதி 11 ஆம் நூற்றாண்டின் கார் மண்டலம் ஆகும்.


புத்தகத்திலிருந்து சிறு குறிப்புகள்:

*கார் நாடு கரு நாடு என்றாகி இன்று கர்நாடகா என்றாயிற்று.

*பூதேவியின் கிருபைக்கு பாத்திரர் பூபாலர் என்னும் காராளர்.பக்கம் - 2

*கார் மண்டலம் - தென் கார் நாடு(கர்நாடகா),வடக்கு கேரளா.பக்கம் -3

*கார் மண்டல மலைகள் - பாலாறும்,தென் பெண்ணை ஆறும் உற்பத்தி ஆகும் நந்தி மலை மற்றும் வேடர் வாழும் திருவேரக மலை(திருப்பதி).
பக்கம் - 4

*மேல் நாடாகிய மலை நாட்டில் 32 வளநாடுகள்(32 ஆயிரம் பேர் வேளாளர்), வேளிர் நாட்டில் 64 வளநாட்டிலும் காராளர்(62 ஆயிரம் பேர் வேளாளர்).
பக்கம் -9

*தகடூர் நாடு கார் மண்டலத்தில் உள்ளது.
பக்கம் -11

*காராளர் அணியும் மாலை செங்கழுநீர் மாலை (குவளை மாலை), மூவேந்தரில் முதல் வேந்தன் சேரன் அணியும் மாலை பனை மாலை,காராளர் குதிரை சயிந்தவம் குதிரை.பக்கம்-12

*காராளர் யானை-கிரிசரம் யானை,மும்முரசு - மணம் வெற்றி தியாகம். பக்கம்-13

*காராளர் கொடி-சிவ பெருமானின் காளை கொடி, 
காராளர் கோல்-ஏர் உழும் பொது கையில் பிடிக்கும் சிறு கோல்.பக்கம்-14

*வேளாளர் வகை - 
பூபாலராதியர் எண்மர்(எட்டு பேர்):- 

1.பூபாலர் (பேரரசர்) 
2.ராஜகர் (இளவரசர்), 
3.கோசர் (கோயில்தம்பிரான்மார்), 
4.புரவலர் (தம்பிரான்மார்),
5.திருமாளிகைத்தேவர் (அரசமனைவாழ்வோர்), 
6.பண்டாரத்தார் (நிதிக்கிழவர்), 7.அத்துவாசிகர்.[சமயச்சடங்கியற்றுவோர்), 8.சாமந்தர், (ஏழுகாலும் பரி சுத்தர்),

 இவர்கள் யாவரும் அரசர்க்கு நெருங்கிய உறவினர். 

பூவைசியராதி மூவர் - 

1.பூவைசியர் 
2.கோவைசியர் 
3.தனவைசியர். பக்கம்-16

*உழுதுண்ணும் வேளாளர் காராளர் பக்கம்-16

*காராளருக்கு பணி செய்பவர்கள்:-

திருமால் குடியினர் ஆதலால் காராளர் தம்மவரைப் போலவே பிறக்குடிகளையும் பாதுகாக்கும் பேரன்பு வாய்ந்தவர். 

***"வெட்டில் கிளியே நாவா யேனம் தொட்டியர் கள்வர் சோனைப்பெரும்புயல் நட்ட நாட்டேழ் குற்றமு மகற்று தற்குப் பணியாளரைக் காத்தல் இவ்வேளாளர் கடமையாயிற்று" ***

காராளருக்கு பணி செய்வாராவர் பதினெட்டு பேர்:-

1.கணக்கர்
2.கம்மியர் (கைவினை கலைஞர்)
3.மேய்ப்பர் 
4.குயவர் 
5.பணிச்சவர் (பணியாளர்)
6.வண்ணார் 
7.நாவிதர் 
8.காவலாளர் 
9.குடிமி 
10.தாசி (கோவில் பணி செய்பவர்)
11.பூவாண்டி(இறைவனுக்கு மாலை காட்டுபவர்)
12.மேளகாரர் 
13.வைரியர்(நடன கலைஞர்)
14.பாணர் (இசை கலைஞர்)
15.பண்ணைக்காரர் 
16.பண்ணைக்காரி 
17.கம்புகட்டி (நீர் பாசன வேலை செய்பவர்)
18.தோட்டிச்சி என்னும் பதினெண்மர்.
பக்கம்-17

* கார்நாட்டின் காராளர் முற்காலத்து விளக்கமுற்ற பதினெண்குடி வேளிராவர் கடம்பர்,நுளம்பர்,வைதும்பர்,தண்டகர் சாதவாகனர்,காலசூரியர்,பல்லவர் அண்டிரர்,குந்தளர்,யாதவர்,ஓய்சளர் ராஷ்டிரகூடர்,சழுக்கர்,மாபலிவாணர் மோரியர்,தொண்டையர் என்பர்.
பக்கம்- 17

*காராளர் குலம் ஐந்து - கங்கை ,சூரியன்,சந்திரன்,இந்திரன்,குருகுலம் 
பக்கம்-21

*காராளர் இரு பிரிவினர் - 
1.சுரோத்தியர் (கடவுள் பற்றாளர்) திருமால்,சிவன்.
2.விரோத்தியர் (கடவுள் மறுப்பாளர்) சமணம் புத்தம்.பக்கம்-22

*கங்கையில் பிறந்த கங்காதத்தன் மற்றும் காங்கேயன் சந்ததியினர் இந்த கங்கை குல காராளர்.பக்கம்-22

*கார் மண்டல மன்னர் இரு கங்கர்கள், 1.வேளிர் நாட்டு கங்கன்(காங்கேயன்) (சூரிய குலம்).
2.மலை நாட்டு கங்கன் - கங்காதத்தன் (சந்திரன் குலம்).

*திருமலை நாட்டில் உள்ள ஶ்ரீசைல சிவனை வணங்கியவர்கள் காராளர்
 பக்கம்-26

*சிவ சமுத்திரம் (கர்நாடகாவில்) ஊரை அமைத்து வாழ்ந்தனர்.பக்கம்-27

*கார் மண்டலமான கங்கபாடி,மும்முடி சோழ மண்டலம் என்றும், கருமலை நாடு என்றும், மகிழாசுரன் நாடு என்றும் பெயர் வழங்கும்.பக்கம்-28

*காராளர் திருமாலையும் வழிபட்டு,சங்கு சக்கர முத்திரைகளை உடலில் இட்டுக் கொள்வர்.பக்கம்-32

*காராளர் வழிபடும் கடவுள்கள் - சிவன்,உமாதேவி,ஒற்றை கொம்புடைய விநாயகர்,முருகன்,வீரபத்திரன்,பைரவர்,திருமால், இலக்குமி,பிரம்மா மற்றும் கலைமகள் பக்கம்-32

*சிவன்,திருமால் ஆலயங்களில் பூசை செய்பவர்கள் காராளர்.பக்கம்- 33

*திருக்கடன்மல்லை (மாமல்லபுரம்) ஆண்ட வாணர் மன்னருக்கு பிரியமான காராளர்கள்,தில்லை,திருவரங்கம்,மதுரை,காஞ்சி, வல்லம் ஆகிய ஊர்களில் கோவில்களையும் கடிகை(கல்லூரி) அமைத்தனர்.பக்கம்-34

*மேலையூர், வெள்ளைக்குளம்,சிருங்கேரி,வேலூர், வேளூர்,திரு சைலம்,நந்தி மலை,விமலகிரி, பாலையூர் ஆகிய ஊர்களில் திரு மடங்களை நிர்மாணித்து பழந்தமிழை காத்து வந்தனர்.பக்கம்-35

*முத்தரையர் (மும்மண்டல வேளாளர்) என்னும் பெயரில் அரசாங்க பதவிகளிலும்,குறுநில மன்னர்களாகவும் இருந்தவர்கள் காராளர்கள்.பக்கம்-36

*சைவ சமய அப்பரும்,வைணவ சமய நம்மாழ்வாரும் காராளர்.பக்கம்-36

*நாத முனி மற்றும் நம்பியாண்டார் நம்பி இருவரையும் ஆதரித்து வந்தவர் விருத்தாச்சலம் ஊரின் சிக்க பூபதி என்னும் காராளர் ஆவார்.பக்கம்-36

*இருங்கோ, அதியன்,நன்னன், வேள்எவ்வி, பெருநள்ளி ஆகியோர் காராளர்.பக்கம்-37

*கார் மண்டலத்துக் கங்கன் இறவாமல் ஐயனார் பாதத்தில் தவம் செய்கிறான்,குவளை மாலை அணிந்த பழையன் மடிந்து போனான.பக்கம்-38

*இருங்கோசர்,கூடல் கிழார் ஆகியோர் கார் மண்டலத்தை சார்ந்த காராளர் பக்கம்-38

*ஆவியார் நாட்டை சேர்ந்த ஆவியாரும்,அரிசில்கிழார் நாட்டை சார்ந்த அரசில் கிழாரும் ,கருவூர்கதபிள்ளையும் கார் நாட்டு காராளர்.பக்கம்-39

*வெள்ளிவீதியார் என்னும் பெண் மற்றும் அத்தி (வீர நாராயணன் சோழன் காலத்தில் தில்லைக்கு பொன் வேய்ந்தவன்,காட்டு மன்னார் குடியில் பெரியேரி அமைத்தவன்) என்பவர்கள் காராளர் .பக்கம்-40

வேளாளர் மற்றும் காராளர் வரலாறை கூறும் மேழி விளக்கம் நூல் (VELALAR AND KARALAR)

*சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர்கள் வேளாளர்,வேளாள நாச்சி...
திருமாலுக்கும் பூதேவிக்கும் பிறந்தவர்கள் காராளர், காராள நாச்சி...
இருவரும் பெண் கொடுத்து பெண் எடுத்து கொண்டதால்,இருவரும் மாமன் மச்சான் உறவினர்.

*வேளாளர் வாழும் நாடுகள் - பக்கம்-13

*காராளர் வரலாறு ,மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடிகள் கேட்ட திருமால்,ஒரு அடியாக பூமியை அளக்கும் போது,பூதேவிக்கும் திருமாலுக்கும் பிறந்தவர்கள் காராளர்கள் .பக்கம்- 26

*பூபாலனென்னும் காராளன்,இந்திரன் மகளை தூக்கிச் சென்ற சூரனோடு போர் புரியும் போது ,காராளன் மைத்துனன் வேளாளன் போர் பற்றி அறிந்து காராளனுக்கு உதவி செய்து போரில் வெற்றி பெற்றனர்.பக்கம்- 27

*பல வகை காராளர் - 
பவள மலையான்,பச்சை மலையான், வணிகாட்டு வெள்ளாளர்,பாலை வெள்ளாளர்,பள்ளி காராளர்,நீரூற்று நாட்டு வேளாளர்,வேட்டை செல்லும் உடும்பறை வேளாளர் (அவினாசி வட்டம்) .பக்கம்-48

*வெள்ளிமலை முருகன் கடவுளை கும்பிடுபவர்கள் வேளாளர் மற்றும் காராளர்கள் .பக்கம்-49

திங்கள், 15 ஜூன், 2026

கரிராமன்(Kari Raman) என்கிற கரிவரதராஜ(Kari Varatharaja) பெருமாள்

கரிராமன் என்கிற கரி வரதராச பெருமாள்

                    கரிராமன் என்னும் கடவுள் மலையாள கவுண்டர் என்னும் காராளர் மக்களால் வணங்கப்படும் முதன்மை கடவுள் ஆகும்.இவ்வினத்தில் ஒரு  குறிப்பிட்ட குலம் இக்கடவுளை குலசாமியாக வணங்குகிறது.

             இக்கடவுள் பெயர் கரிவரதராஜ பெருமாள் என்றாலும் நாயக்கர் காலத்தில் தான் கரிராமன் என்ற பெயர் வந்திருக்கும் என நான் கருதுகிறேன்.கிருஷ்ணகிரிக்கு உட்பட்ட ஒரு கரிராமன் கோவில் ஜாகிர்தார் முறை காலத்தில் கட்டப்பட்டுள்ளது,அதில் இருக்கும் மூலவர் கரிவரதப்பெருமாள் ஆயினும் கரிராமன் என்றே அழைக்கப்படுகிறார்.மேலும் ஶ்ரீரங்க பெருமாளை ஶ்ரீரங்க ராமர் என்றும்,இளைய பெருமாளை இளைய ராமர் என்றும் அழைக்கிறார்கள்.

பெருமாள் சாமியை ஏன் ராமன் என அழைக்கடுகிறார் என தெரியவில்லை.இவ்வின மக்களை கேக்கும் பொழுது ராமனும் பெருமாள் அவதாரம் என்பதால் அப்படி அழைக்கிறோம் என்கின்றனர்.

ஆனால் கரி ராமன் என்கிற கரி வரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் நம் முன்னோர்கள் கரிய பெருமாள் என்று தான் கூறியிருக்கிறார்கள்.

நம் இன குரு வெளியிட்ட ஆவணத்தில் காஞ்சீபுரம் கரி வரதராஜ சாமி என்று தான் உள்ளது.

       மலையாளக்கவுண்டர்கள் பிரிந்து இடம்விட்டு இடம் செல்லும் போது தன்னோடு குலசாமியையும் கொண்டுசெல்கின்றனர்.அப்போது பொருளாதார சூழ்நிலை காரணமாக சிலை வைக்க முடியாமல்,கரிராமனுக்கு பதிலாக கற்க்களையே வைத்து வழிபடுகின்றனர்.

பின் சில தலைமுறைக்கு பின்னால் கரிவரதராச கடவுளின் சிலை வடிவத்தை மறந்து,கோவில் கட்டி சிலை வைக்கும் போது ராமன் சிலையை வைத்து விடுகின்றனர்.இப்படி அறியாமையில் அமர்ந்த நிலையில் இருக்கும் விஷ்ணு லட்சுமி சிலைக்கு பதிலாக,கரிராமன் என்று தவறான சிலையை(ராமன் சிலையை) வைத்து வழிபடுகின்றனர்.

         ஆனால் இன்றும் மலையாளக் கவுண்டர் இனத்தின் ஆதிக்குடியேற்றத்தின் போது ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் ஆதிக்கோவில் கருமந்துறையில் அமைந்துள்ளது.அங்கு கரிராமன் என்ற கரிவரதன் தானும் தன் இரு மனைவியருடன் அமர்ந்தநிலையில் காட்சித் தருகிறார்.

இனிமேலும் நாம் அனைவரும் கடவுள் பெயரை சரியாக உச்சரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.பெருமாளை பெருமாள் என்று தான் உச்சரிக்க வேண்டும் ராமன் என்று கூறக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

கடவுள் தான் நம் வரலாற்று அடையாளம்,நம் தவறான உச்சரிப்பால் கடவுள் சிலைகள் மாறி உள்ளது,வரும் காலங்களில் நம் வரலாறும் தவறாக மாற வாய்ப்பு உள்ளது.

      மலையாள கவுண்டர்களைப்போல் சேலம் பகுதியில் வாழும் நாட்டுக்கவுண்டர்கள் கரிவரதனை கரிய மாணிக்கப்பெருமாள் என்ற பெயரிலும்,ஆத்தூரில் வாழும் வேளாளர்கள் ஆத்தூர் கரிவரதராச பெருமாளையும் குலசாமியாக வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

சனி, 13 ஜூன், 2026

மலைக் கவுண்டர்களின் குல அமைப்பு

மலைக் காராள கவுண்டர்களின் குல அமைப்பு:


கிழக்கு தொடர்ச்சி மலையிகளில் கல்வராயன் மலை,சேர்வராயன் மலை,பச்சைமலை,கொல்லிமலை,ஈரோடு மாவட்ட பர்கூர் மலை மற்றும் வத்தல் மலை போன்ற மலைகளில் வாழும் நம் காராளர்(மலையாளி) இனத்தில் வீடு என்னும் பங்காளி(காணியாளர்) உறவுமுறை பற்றி எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நமக்கு குலம் என்னும் அமைப்பு முறை இருந்தது,இன்று அது அழிந்து விட்டது.

(வீடு என்பது ஒரே பங்காளிகள் கூட்டம் (காணியாளர்கள்) ஆவர்.எடுத்துக்காட்டாக காடை வீடு, தும்புடையான் வீடு,அரையன் வீடு,கரியன் வீடு போன்று இன்னும் பல) 

ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த மலையை சார்ந்த காராளர்(மலையாளி) மக்கள்,அந்தந்த மலைக்குள்ளே பெண் எடுத்தும் கொடுத்தும் திருமணம் நடைபெறும் போது,இந்த குல அமைப்பு உயிர்ப்போடு இருந்தது.

எப்பொழுது மற்ற மலை காராளர்(மலையாளி) மக்களோடு மண உறவு ஏற்பட்டதோ அன்றிலிருந்து மெல்ல மெல்ல அழிந்துவிட்டது.

குறிப்பிட்ட பல வீடுகள்(பங்காளி உறவுமுறை) சேர்ந்தது தான் ஒரு குலம்.சிவனை குலதெய்வமாக பல வீடுகள் சேர்ந்த ஒரு குலத்தை சார்ந்தவர்கள் வழிபடுவர்.

எடுத்துக்காட்டாக காடை வீடு,அய்யனார் வீடு என்று இன்னும் பல வீடுகள் சேர்ந்து வரதராஜ பெருமாள் சாமியை குலதெய்வமாக கும்பிடுவர்.அதே போன்று சிவனையும் சில வீடுகள் சேர்ந்து குலதெய்வமாக கும்பிடுவர்.காளி சாமியையும் சில வீடுகள் சேர்ந்து கும்பிடுவர்.

அதனால் தான் இவ்வினத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குலசாமி,வீட்டு சாமி என இரு தெய்வங்கள் இருக்கும்.வீட்டு சாமி என்பது அனைவருக்கும் புடவைக்காரி அம்மன் மற்றும் பெரியாண்டிச்சியாக தான் இருக்கிறது.குலசாமி மட்டும் மாறுபடும்.

    ஒவ்வொரு குலத்துக்குள்ளும் திருமணம் உறவு நடைபெறாது,அதிலிருக்கும் வீடுகள் அனைத்தும் பங்காளி(காணியாளர்) உறவுமுறையை குறிக்கும்.

சிவனை குல தெய்வமாக கும்பிடும் குலம், பெருமாளை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும் அல்லது காளியை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும்.இப்படி இரு வெவ்வேறு குலங்களுக்குள் தான் திருமணஉறவு நடைபெறும்,ஒரே குலத்துக்குள் திருமணம் நடைபெறாது,ஏனெனில் அவர்கள் பங்காளி(காணியாளர்கள்) என்னும் உறவுமுறையில் இருப்பார்கள்.

  நம் முன்னோர்கள் வகுத்த இந்த குல அமைப்பு மறைந்தாலும் உண்மையான பங்காளி உறவு முறை கொண்ட வீடு அமைப்பு முறையில் இக்காராள மக்கள் சரியாக இருக்கிறார்கள்.அதாவது தும்புடையார் வீடு ஆண் ஒருவன் அதை தவிர்த்து மற்ற வீடுகளான அரையர் வீடு,பூச்சு கவுண்டர் வீடு(பூச்சு கவண்ணன், பூச்சு கண்ணான்)  போன்று மற்ற வீடுகளில் பெண் எடுப்பானே தவிர தும்புடையார் வீட்டிலே பெண் எடுப்பதில்லை.
                   தற்ப்பொழுது என்ன குலம் என்ன வீடு என்று கேட்பது மறைந்து என்ன வீடு என்று கேட்டபது மட்டும் வழக்கத்தில் இருக்கிறது.வீடு என்பது இப்பொழுது குலமாக மாறி வருகிறது.அரையர் வீடு, தீக்கடையார் வீடு என்றில்லாமல் அரையர் குலம், தீக்கடையார் குலம் என்று மாறி வருகிறது.

கதிர்முனை தீண்டா காராளன்

கருது(கதிர்)முனை தீண்டாத காராளர்...
கவடு வஞ்சம் தெரியாத காராளர்...

1961 ஆம் ஆண்டு கல்வாராயன் மலையின் தொடர்ச்சியான அருநூத்துமலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அங்குள்ள நமது நடுஅண்ணன் கூட்டமான பச்சைமலை காராளர்கள்(மலையாளி) சொன்ன பழமொழி இது...

இதற்கு அர்த்தம் "கருது முனை கூட தீண்டாது தாம் விவசாயம் செய்யாமல் பல ஆட்களை வைத்து வேலை செய்தவர்கள்" என்று பொருள்.அதாவது பெரிய நிலைப்ரபுத்துவம் படைத்தவர்கள் அல்லது ராஜா என்று அர்த்தம்.

பச்சை மலையில் நாட்டுகட்டு பாடல் ஒன்றில் "பூசாரியான மன்னனின் தம்பி,மன்னனிடம் சண்டையிட்டவனாக தன் மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு காஞ்சிபுரம் நாட்டை விட்டு மலையில் குடியேறினான்" என்று நம் வரலாறை கூறுகிறது.

இந்த "கருது முனை தீண்டாத காராளர்" என்பதற்கும் மன்னனின் வழி வந்த காராளர்கள்(மலையாளி) என்பதற்கும் தொடர்பு இருக்கிறது.

இந்த கருதுமுனை தீண்டா காராளர் என்பது காராளர்(கார் காத்த வேளாளர்) மன்னனான வாணாதிராயனுக்கும் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இமன்னனின் கல்வெட்டுக்கள் கொல்லிமலையிலும், அருநூத்துமலையிலுள்ள சிறுமலையிலும் கிடைத்துள்ளது குறிப்பிட தக்கது.

மேலும் வாணாதிராயர் மன்னன் கட்டிய ஆரகளூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் வரலாறும்,தமிழ் மலையாளி என்கிற காராளர் மக்களின் ஆதிகோவிலான கலவராயன்மலை கரியலூர் கரிவரதராஜ பெருமாள் (கரிராமன்)கோவில் வரலாறும் ஒன்றாகவே இருக்கிறது.இக்கரிராமன் கோவிலில் இம்மன்னனின் அடையாள சின்னமான எலி உருவ சிலையும் அதன் பக்கத்தில் மன்னர் மற்றும் அவரின் மனைவி சிலையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து நம் காராள முன்னோர்கள் மூன்று அண்ணன் தம்பிகளும் குறுநில மன்னர்களின் வாரிசுகள் என்பது தெரிகிறது.


புடவைக்காரி அம்மன் வழிபாடு (பச்சை மலை காராளர்கள்)

புடவைக்காரி அம்மன் மற்றும் பெரியாண்டிச்சி அம்மன் வழிபாடு:

இந்த பெரியாண்டிச்சி அம்மன் மற்றும் புடவைக்காரி அம்மன் வழிபாடானது,பச்சை மலை காராளர்(மலையாளி) மக்களிடம் மட்டும் தனித்துவமாக உள்ளது.கல்வராயன் மலை,கொல்லி மலை,சேர்வராயன் மலை மேற்கு(முக நாடு,முத்து நாடு) பகுதிகளில் வாழும் காராளர் மக்களிடம் இந்த வழிபாடு இல்லை.

பச்சை மலையில் உள்ள நாடுகளில் வன்னாடு என்னும் பகுதி மலை பகுதியும் நிலப்பகுதியும் கொண்ட பகுதி ஆகும்.இந்த பகுதியை ஆண்ட வன்னாட்டு அரசர்கள் கபாலிக மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.கபாலிக மத கடவுள் சுடுகாட்டு காளி பெரியாண்டிச்சி ஆகும்.எனவே மக்களும் அதை பின்பற்றி இருக்க வேண்டும்.

இந்த பச்சை மலை காராளர்(மலையாளி) மக்கள் பச்சை மலையிலும், துறையூரிலிருந்து மல்லியக்கரை போகும் பகுதிகளிலும்,சேலத்திலிருந்து அரூர் செல்லும் பகுதிகளிலும்,சேர்வராயன் மலை(கிழக்கு பகுதி) சேல நாடு பகுதிகளிலும் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டிலிருந்து பொன்முடி(பொம்மிடி) போகும் பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு மலையாளக் கவுண்டர், காராளக் கவுண்டர்,மலை வெள்ளாளர்,மலையாள முதலி,காராள முதலி என்பது பிற பெயர்கள் ஆகும்.

பச்சை மலை காராளர்களில்(மலையாளி) ஒவ்வொரு வீடும்  தனித்தனியே புடவைக்காரி அம்மனுக்கு கோவில் கொண்டுள்ளனர்.வீட்டு சாமி கோவில் என்றும் கூறுகிறார்கள்.

(வீடு என்பது பங்காளிகள் என்பதை குறிக்கும் பல வீடுகள் சேர்ந்தது ஒரு குலம் ஆகும்)

மாசி மாதம் செவ்வாய்கிழமை இரவு மற்றும் புதன் கிழமைகளில் விழா நடைபெறுகிறது.

பெரியாண்டிச்சிக்கு மண்ணு பிடாரி,பெரியாயி என்ற பெயரும் உண்டு.

புடவைக்காரி அம்மன் என்பது அந்தந்த குலத்தில் இறந்து போன பெண்களுக்காக எடுக்கும் விழா ஆகும்.இப்படி விழா எடுப்பதால் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

சேலம்லிருந்து அரூர் செல்லும் வழியில் தண்ணீர் தொட்டி என்னும் ஊரில் தும்பையுடையார் வீடு பங்காளிகள் கும்பிடும் புடவைக்காரி அம்மன் திருவிழாவில் நான் நேரில் கண்டதை நான் பதிவிடுகிறேன்.

கோவிலில் ஒரு இரும்பு பெட்டியில் பட்டு கூரை புடவை,தாலி,வளையல் ஆகியவை உள்ளது.இவைகள் தான் புடவைக்காரி அம்மனின் அடையாளங்கள்.

கோவிலின் கருவறையில் சிலைகளுக்கு பதில் கற்கள் வைத்து வழிபடுகிறார்கள்,வெள்ளி தகடால் ஆன அம்மன் உருவத்தை அந்த சாமி கல்லின் மேல் வைத்து கட்டியுள்ளார்கள்.இந்த உருவம் தான் பெரியாண்டிச்சி அம்மன்.இவர் பெண் தெய்வம். ஆண் தெய்வத்திற்கு கோவிலுக்கு வெளியே கல் நாட்டி நிரந்தரமாக வைத்துள்ளார்கள்.இவர் பெயர் பெரியாண்டவர்.

(இந்த தெய்வத்திற்கு அண்ணாமலை,உண்ணாமலை என்றும் கூறுகிறார்கள்.ஆனால் அண்ணாமலையார் உண்ணாமலையார் சைவ கடவுள் பலி கொடுக்க மாட்டார்கள்...அந்த தெய்வங்களின் அவதாரம் என்பதால் கூறுகிறார்கள் போலும்)

1.செவ்வாய் இரவு அன்று பெரியாண்டிச்சி அம்மனை பிள்ளையார் கோவிலிலிருந்து அழைக்கிறார்கள்.இதற்கு சாமி அழைத்தல் என்று பெயர்.

2.பின் நடு இரவு பொழுதில் நல்லி ஆடு(இளம் ஆடு) பெரியாண்டிச்சி அம்மனுக்கு பலி இடப்படுகிறது.பலியிடுவதற்கு முன் நல்லி ஆட்டு காதில் சீராளன் பாடல் பாடப்படுகிறது,பாடல் பாடி முடித்தபின் நல்லி ஆட்டை அழைக்கிறார்கள்,அவர்கள் ஏற்கனவே விரித்து வைத்திருந்த வெள்ளை வேட்டியில் ஆடு படுத்து கொள்கிறது.ஆடு படுத்தவுடன் ஆட்டின் ஈரல் எடுக்கப்பட்டு கொதிநிலையில் இருக்கும் எண்ணெயில் பொரித்து அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி பெண்கள் பார்க்க அனுமதி இல்லை,மூடிய பகுதியில் இந்த நிகழ்வு நடக்கிறது.

3.பின் ஆட்டு கறி சமைக்கப்பட்டு,பங்காளிகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் உண்கிறார்கள்.இந்த கறி ஒரு பிரசாதம் ஆகும்.எனவே பங்காளி குடும்ப உறுப்பினர் அனைவரும் இதை வாங்கி உண்கிறார்கள்.எலும்புகளை அந்த மூடிய பகுதியிலேயே போட்டு புதைத்து விடுகிறார்கள்.திருமண ஆகி போன பெண்கள் இதில் பங்கேற்பது இல்லை.

4.புதன் விடியல் காலையில் பெரியாண்டிச்சி அம்மனுக்கு முப்பூசை நடக்கிறது.கோழி மற்றும் ஆடு,நல்லி ஆடு போல் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.கருப்பு பன்றியும் பலியிட படுகிறது.

5.புதன் கிழமை காலையில் புடவைக்காரி அம்மனை பிள்ளையார் கோவிலிலிருந்து சாமி அழைக்கிறார்கள்.இந்த அழைப்பின் போது வேப்ப இலை மற்றும் வேறு ஒரு இலை கொத்தை பெருக்கல் குறி போன்று பின்னால் போட்டு கொண்டே வருகிறார்கள்.

6.மதிய அளவில் மாமன் மச்சான் உறவு காரர்கள் மற்றும் சொந்தங்களை அழைத்து கறி விருந்து வைக்கிறார்கள்.

7.திருமணம் ஆன பெண்கள் தங்கள் பிறந்த வீடு சாமிக்கு சீர் வரிசை செய்கிறார்கள்.

8.சாயுங்காலத்தில்(மாலை) கறி பங்கிடப்பட்டு ஒவ்வொரு பங்காளியும் பிரித்து கொள்கிறார்கள் கூடவே எள்ளு உருண்டையும்,பச்சரிசி உருண்டையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

***சில இடங்களில் பெரியாண்டிச்சி தெய்வத்திற்கு மண்ணால் ஆன சிலையை
படுத்து கொண்டிருப்பது போல் செய்கிறார்கள்.பூவனூரில் வாழும் காராளர்(மலையாளி) மக்கள் இப்படி வழிபடுகிறார்கள்***


திங்கள், 8 ஜூன், 2026

கலசைபாடி உடையான் காளை பெருமாள் கல்வெட்டு

 
கலசைபாடி (கலசபாடி) உடையான் காராளன் காளை பெருமாள்:
திருப்பூர் மாவட்டம்,
சர்க்கார் பெரியபாளையம்,
சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டு.

பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனின் நான்காம் ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 1289-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. 

இக்கல்வெட்டில் "அருவியூரான் கலசைபாடி உடையான் காளை பெருமாள்" என்னும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

பொருள் - அருவியூரில் வசிப்பவனும், கலசைபாடியை பூர்வீகமாக கொண்டவனுமான காளை பெருமாள் என்னும் பெயரை கொண்டவர் ஆவார்.

அருவியூரான் என்பது தற்பொழுதுள்ள அரூர் பகுதியாக இருக்கலாம்.

இதில் வரும் "கலசைபாடி" என்பது கலசபாடி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது.தருமபுரி மாவட்டம் அரூர் பகுதிக்கு அருகாமையில் கல்வராயன் மலையில் இவ்வூர் அமைந்துள்ளது.

இவ்வூரில் காராளர் என்னும் மலையாளி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு காராள கவுண்டர்,மலையாள கவுண்டர் என்பது பிற பெயர்கள் ஆகும்.

இவ்வூரில் தான் காராளர்(மலையாளி) இன மக்களின் தலைமை குரு மற்றும் ராஜாவான குலசேகரன் பட்டம் கொண்ட தேனாண்டை  குலத்தை சார்ந்த "குலசேகரன் தேனாண்டை இலட்சுமண கவுண்டர்" வசிக்கிறார்.

கல்வெட்டு விளக்கம் மற்றும் கல்வெட்டு பகுதி:

அக்காலத்தில் இக்கோவில் இறைவன் 'குரக்குத்தளி நாயனார்' என்று அழைக்கப்பட்டுள்ளார். இந்த இறைவனுக்கு வைகாசி மாதத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் இந்த ஊரில் ஒன்றுகூடி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

வணிகர்களின் தீர்மானமும் சுங்க வரியும்
கோவில் திருவிழாவிற்கான பொருட்செலவை ஈடுகட்ட, வணிகர்கள் தங்கள் வியாபாரத்தின் மீது தாங்களே ஒரு வரியை (சுங்கம்) விதித்துக்கொள்ளத் தீர்மானித்தனர். அதன்படி, ஊருக்குள் வரும் இறக்குமதிப் பொருட்கள், ஊரிலிருந்து செல்லும் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் தலைச்சுமையாகக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் என அனைத்து வகையான வணிகப் பரிமாற்றங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு சுங்கம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும், அந்த நிதியைக் கொண்டு வைகாசித் திருநாளை நடத்தலாம் என்றும் அவர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
பன்முகத்தன்மையைக் காட்டும் கையொப்பங்கள்

இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து, பல்வேறு வணிகக் குழுக்களைச் சேர்ந்த 64 வணிகர்கள் தங்களின் கையொப்பத்தைப் பதிவு செய்துள்ளனர். 

இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல் என்னவென்றால், கையொப்பமிட்டவர்களில் மலை மண்டலத்தை (தற்போதைய கேரளா) சேர்ந்த நான்கு வணிகர்கள் 'வட்டெழுத்து' முறையிலும், மற்றவர்கள் 'தமிழ்' எழுத்து முறையிலும் கையொப்பமிட்டுள்ளனர். 

இது அக்காலத்தில் நிலவிய மொழிப் பயன்பாட்டையும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்களிடையே இருந்த சுமூகமான உறவையும் காட்டுகிறது.

புகழ்பெற்ற வணிகக் குழுக்களும் ஊர்களும்
கையொப்பமிட்ட வணிகர்களின் பெயர்களோடு, அவர்கள் சார்ந்த ஊர்களும் வணிகக் குழுக்களின் பெயர்களும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

• வணிகக் குழுக்கள்: பதினெண் விஷயப் பெருநிரவியார், ஐந்நூற்றுவன் பெருநிரவியார், கொடும்பாளூர் மணிக்கிராமம் போன்ற பழங்காலத் தமிழகத்தின் மாபெரும் வணிகக் கூட்டமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர்.

• பல்வேறு ஊர்கள்: பாண்டிய மண்டலம், சோழ வளநாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சேர நாட்டைச் சேர்ந்த ஏராளபுரம் (தற்போதைய கேரளாவின் எர்ணாகுளம்), கங்கைகொண்ட சோழபுரம், கொடும்பாளூர், சுந்தரபாண்டியபுரம், திருவாலூர் போன்ற பல்வேறு தொலைதூர ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இந்தத் தீர்மானத்தில் பங்கேற்றுள்ளனர்.
பெயர்களில் வெளிப்படும் பண்பாட்டுச் சுவடுகள்
வணிகர்களின் பெயர்கள் அக்கால மக்களின் இறைபக்தியையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக உள்ளன.

• பல வணிகர்கள் சிவபெருமானின் நடனத்தைப் போற்றும் வகையிலான பெயர்களைச் சூட்டியுள்ளனர். உதாரணமாக, 'அந்தியும் பகலும் ஆடுவான்' மற்றும் கால் மாற்றி ஆடும் நடராசரைக் குறிக்கும் 'மாறி ஆடுவான்' போன்ற பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன.

• திருஞானசம்பந்தர் மீதிருந்த பக்தியின் காரணமாக 'திருஞானசம்பந்தன்', 'பால்வாய் உடையான்', 'சம்பந்தப்பெருமாள்' போன்ற பெயர்களும் வியாபாரிகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.
• கையொப்பம் இட்ட 64 வணிகர்களின் பெயர்கள்:
•
• *சுந்தரப்பெருமாள்
• ( பதினெண் விஷயப் பெருநிரவியார் குழுவைச்சேர்ந்தவர்)
•
• *ஆட்கொண்ட நாயகர்
•
• *பிள்ளை நாட்டு செட்டி
•
• *ஏராளபுரத்து வியாபாரி கூத்தன் கண்ணன்
• (ஏராளபுரம் என்பது தற்போதைய எர்ணாகுளம்.)
•
• *உறையூருடையான் பெரியய்யதேவன்
•
• *ஏராளபுரத்து அல்லூருடையான்
•
• *கயிலாயனான வணிகை மாதா
•
• *அருவியூரான் கலசைப்பாடி உடையான் காளை பெருமாள்
•
• *நாவலூர் உடையான் திருநிலை அழகியான் அதிரைவீசாடுவான்
•
• *திருமலை நாட்டு பெருமங்கலமுடையான் உலகன் உய்யவந்தான் சேரமான் தோழன்
•
• *திருவாலூர் இவணங்குடையான் தொண்டகநாயன் பெரிய்யநாயன்
•
• *வணிகையராதித்தன்
•
• *திருவாலூர் வியாபாரி கடுவங்குடையான் திருஅண்ணாமலைப்பெருமான்
•
• *பாண்டிமண்டலத்து சுந்தரபாண்டியபுரத்து சிரியப்பிள்ளை
•
• *வெள்ளூரான கோதண்டராமபுரத்து பால்வாய் உடையான் சொக்கனார்
• ( பால்வாய் உடையான் என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும் பெயராகலாம்)
•
• *மீமலை அவையா உடையான் மாதுயரந்தீர்த்தான் சுந்தையன்
•
• *ஜயங்கொண்டசோழபுர முதலிகைப்பள்ளியுடையான் நீராலமுடையான் பொசிவாசிகொண்டான்
•
• *விக்கிரமசோழபுரத்து மாத்தூர் உடையான் பஞ்சநெதிவாணன்
•
• *பாண்டி நாட்டு சுந்தரபாண்டிபுரத்து திருஞானசம்பந்தன்
•
• *பாண்டிமண்டலத்து சீகல்லபுர நாட்டு குலசேகரபுரத்து பேர் இலத்துடையான் சீகயிலாயமுடையான் அந்தியும் பகலும் ஆடுவான்
•
• *ஏராளபுரத்து வியாபாரி மாணிக்கன் புந்தியில் உறைவான்
•
• *குலவாய் நாட்டு சுந்தரபாண்டியபுரத்து மங்கலமுடையான் ஓதாதுணர்ந்தான்
•
• *பாண்டிமண்டலத்து நகரம் தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்கசோழ பட்டணத்து வெளியாற்றூர் உடையான் உத்தமாண்டன் சொக்கனார்
•
• *பாண்டிமண்டலத்து நகரம் தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்கசோழ புரத்து பாம்பையன் உடையான் அருள்பெற்ற நம்பியான ஆடும் பெருமாள்
•
• *கொடும்பாளூர் மணிக்கிராமத்து வெண்ணை சொக்கனான அழகிய்ய உடையான் பொன்னப்பிள்ளை
•
• *கொடும்பாளூர் மணிக்கிராமத்து தனபாலன்
•
• *பாண்டிமண்டலத்து நெடுபரமுடையான் சொக்கனார்
•
• *பாண்டிமண்டலத்து சுந்தரபாண்டியபுரத்து உய்யக்கொண்டான் பெரிய்ய நாயன்
•
• *தொண்டைமானார் இராகொபுரத்து வல்லியூர் உடையான் கூத்தன்
• உலகுதொழ நின்றான்
•
• *கூத்தன் உடையான்பிள்ளை திருவானன் ஆன திருஞானசம்பந்தன்
•
• *தாமரைப்பூண்டி உடையாந் சூரியனாந சம்பந்தப்பெருமாள்
•
• *கங்கைகொண்டசோழபுரத்து கொளம்பாக்கமுடையான் செநசுயன்
•
• *கருவூருடையான்
•
• *பதினெண்விஷயத்தாரில் உடையாந் திருவானைக்காவுடையாந்
•
• *கட்டியகையந்
•
• *அம்பலத்தாடுவார்
•
• *கருப்பூர் உடையாந் இளையாந் அம்பலத்தாடுவான்
•
• *இராசராச வளநாட்டுஅரசூருடையான் அடிகள் சமையச்சக்கரவத்தி நீலகண்டன்
•
• *பாண்டிமண்டலத்து ஐபொழில் விக்கிரமசோழபுரத்து வெண்டவளந்தான்
•
• *நீற்பழநியுடையான் அடிகள் ஆழ்வாந் பெருங்கருணைப்பெருமாள்
•
• *திரிபுவனமாதேவியுடையான் பெரியான்
•
• *பாண்டிமண்டலத்து கொடும்பாளூர் தம்பிராந் தோழன்
•
• *எறிபடநல்லூர் வடபாடியில் சேந்தமங்கலமுடையான் சிய்யன் சுந்தரப்பெருமாள்
•
• *சுந்தரசேகரபுரமான தேசிஉகந்த பட்டணத்து மருதநாதபுரமுடையான்
•
• *சுந்திதேவப்பெருமாள் ஆன திருவிடையான்
•
• *வெள்ளூர் உடையான் பெரிய்யான் சொக்கனார்
•
• *அய்ந்நூற்றுவன் பெருநிரவியார் மணிய்ய சக்கரவத்தி
•
• *வடக்கிலூரான வீரபாண்டியபுரத்து வியாபாரி சேந்தன் சேந்தநாந அமரகோன்
•
• *உடைய நாயகர்
•
• *கதாபுரத்து கோட்டைக்கரைஉடையான் வண்ணக சூரியன் சக்கரவத்தி அழகியான்
•
• *பாண்டிமண்டலத்து தேசி ஏவணமுடையான்
•
• *தனசந்
•
• *கொடும்பாளூர் சேரமான் தோழன்
•
• *கொடும்பாளூர் மணிக்கிராமத்து வியாபாரி ஆண்டக்கன் சொக்கனார்
•
• *பாண்டிமண்டலத்து கீழ்க்குண்டாற்று வீரநாராயணபுரத்து திரு.. உடையான் அரங்குள .. பெருமாள்
•
• *..ழாப்பள்ளியுடையான் கயிலைப்பெருமாள் மலைப்பெருமாள்
•
• *நீர்ப்பழனி உடையான் அரசன் மணியனான மாறி ஆடுவான்
• (மாறி ஆடுவான் என்பது கால் மாற்றி ஆடும் நடராசப்பெருமானைக் குறிக்கும் பெயராகலாம்)
•
• *பாண்டிமண்டலத்து இராசநாராயணபுரத்து திருவெண்பூர் உடையான் தேவன் திருவானமாமலை உடையான்
•
• *கண்ணனூருடையான் பெரியான் அமரகோன்
•
• *சமைய மந்திரி அமர்கோன்
•
• *சாங்கியன் கீழையான் அறப்பித்தந் திருஅண்ணாமலை உடையானான சூரியன்
•
• *களத்தூர் கிழவன் இம்மைய் திருவான்கள....ப்பிள்ளை
•
• *கண்ணார் அமுதன் கூத்தன் தேவன்
•
• *புழங்குடையான் சந்திரன் அழகியபாதன்
•
நன்றி:
ஆறகளூர் பொன். வெங்கடேசன்
தலைவர்: சேலம் வரலாற்று ஆய்வு மையம்

சனி, 6 ஜூன், 2026

காராளர்(மலையாளி) இன கடவுளும் பிற இனமும்...


1.பலாப்பாடி வரதராசப்பெருமாள் கோவில் வன்னியர் உரிமை:

கிழக்கு தொடர்ச்சி மலையில்,கல்வராயன் மலை தொடர்ச்சியில் வாழப்பாடி,பேளூர் பகுதிக்கு உட்பட்ட பலாப்பாடி கிராமத்தில் காராளர் என்னும் மலையாளக்கவுண்டர் இன மக்கள் வசிக்கிறார்கள்.

இவ்வூரில் நடுஅண்ணன் (பச்சை மலையாளி) பிரிவு மக்களுக்கு சேர்ந்த தெய்வமான திரு வரதராசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு அண்டை ஊரிலிருக்கும் தும்புடையார் வீடு,மால வீடு மற்றும் சில குலத்தை சேர்ந்த அனைவரும் படி(ஒரு படி பச்சை அரிசி) கொடுத்து பொங்கலிட்டு திருவிழா எடுப்பது வழக்கம்.

அப்படி ஒரு நாள் திருவிழா வேளையில் அண்டை ஊரில் ஒரு சாவு நிகழ்ந்து விடுகிறது, ஆதலால் பெரும்பான்மையான மக்கள் வரமுடியாமல் போகவே கோவிலின் தேரை தூக்குவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது. திருவிழாவை நிறுத்தினால் தெய்வக்குற்றம் ஏற்படும் என்று பக்கத்து ஊரான சின்னமநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த வன்னியரை பலாப்பாடி ஊரார் உதவிக்கு அழைக்கின்றனர்.

"இனிவரும் காலங்களில் எங்களுக்கு இந்த கோவிலில் என்ன உரிமை கொடுப்பீர்கள்" என வன்னியர் இன மக்கள் பலாப்பாடி ஊராரிடம் கேட்க" ஒவ்வொரு திருவிழாவின் போதும் ஒரு குறிப்பிட்ட சாமி தேரை தூக்கும் உரிமை உங்களுக்கு" என பலாப்பாடி ஊரார் உறுதியளிக்கின்றனர் வன்னியர் மக்களும் ஒப்புக்கொள்ள அன்று திருவிழா நடைபெறுகிறது.அன்றிலிருந்து வன்னிய மக்களுக்கும், மலையாளக் கவுண்டருக்கும்(காராளர்) தொடர்பு ஏற்படுகிறது.

அனால்,சற்று காலத்திற்கு முன்பு வன்னியர்கள்,பலாப்பாடி ஊரில் பஞ்சாயத்தை கூட்டி கோவிலின் தேரின் உரிமையை எழுத்து பூர்வமாக கேட்க,பலாப்பாடி ஊரார் "எங்களின் முன்னோர்கள் உங்களுக்கு வாய்மொழியாக சொன்னபோதே நீங்கள்
கேட்டிருக்க வேண்டும், இப்பொழுது இயலாது, உங்களுக்கு கொடுத்த உரிமையை நீங்கள் நிறைவேற்றலாம்"என கூறி,எழுத்து மூலத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.அன்றிலிருந்து வன்னியர்கள் இந்த உரிமையை மறுத்து,கோவிலுக்கு வருவதை நிறுத்தி விட்டனர்.

தகவல் - காராளர் துரைசாமி கவுண்டர்,சிறுமலை கிராமம்.

2.கோலாத்துக்கோம்பை இளையராமர் கடவுளும் வன்னியரும்:

காராளர் (மலையாளக் கவுண்டர்) இனத்தில் நடு அண்ணன் இனத்தை சேர்ந்த மக்கள் பச்சை மலையில் வாழ்ந்து வருகின்றனர்.

(*பச்சை மலையில் இளையபெருமாள் (இளையராமர்) கோவில் இல்லை.கல்வராயன் மலையில் உள்ளது)

பச்சை மலை காராளரில் (மலையாள கவுண்டர்) பெரிமாக்கட்டி என்னும் குலத்தை சேர்ந்தவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் பஞ்சத்தின்போது தங்கள் குலதெய்வமான இளைய பெருமாள்(இளைய ராமர்) சாமியோடு குடிபெயர்ந்து,பேளூருக்கு பகுதியில், சின்னமநாய்க்கன்பாளயத்துக்கு அருகிலுள்ள ஊரான கோலாத்துக்கோம்பை என்னும் ஊரில் வந்து அமர்ந்தனர்.பின் சில நூறு வருடங்கள் கழித்து சில காரணங்களால் தங்கள் குலசாமியை அங்கயே விட்டுவிட்டு,அருகிலுள்ள கல்வராயன் மலைதொடர்ச்சியிலுள்ள சிறுமலை என்னும் ஊரில் குடிபெயர்கின்றனர்.

காராளர் மக்கள் வெளியேறியப்பின் அவ்வூரில் வன்னியர் இன மக்கள் குடியேற்றம் நடந்துள்ளது.இளைய பெருமாள்(இளையராமர்) கோவில் வன்னியர் மக்கள் வசம் சென்றது. இப்பெருமாளுக்கு ஒவ்வொரு திருவிழாவையும் அங்கிருக்கும் வன்னிய மக்களே சிறப்பாக நடத்துகின்றனர். இருந்தபோதும் திருவிழாவின் போது காராளர்(மலையாளி) இன பெரிமாக்கட்டி குலத்தை சேர்ந்த ஒருவர் பூசாரியாக இருக்கிறார்.

3.மூக்கனூர் இளைய பெருமாள் கோவிலும்,உடையார் இனமும்

சேலம் மாவட்டத்தில்,அரூர் செல்லும் சாலையில் குப்பனூர் என்னும் ஊரில் உடையார்களில் நத்தமான் பிரிவை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

அதன் பக்கத்து ஊர்களான பூவனூர், கொட்டாயூர், தாதனூர் மற்றும் மூக்கனூர் ஆகிய ஊர்களில் நடு அண்ணன் வகையை சார்ந்த காராளர்(மலையாளக்கவுண்டர்கள்) மக்கள் வசித்து வருகின்றனர். 

(*குப்பனூர்  உடையார் இன மக்களும், காராள மக்களும் மாமன் மச்சான் போன்று பழகுவார்கள், ஆனால் இரு இனத்துக்கும் திருமண உறவு இல்லை.)

இந்த நான்கு ஊரின் கவுண்டர்களுக்கு பொதுவான கோவிலாக மூக்கனூரிலுள்ள திரு இளைய பெருமாள் (இளையராமர்) கோவில் உள்ளது.இவ்வூர்கள் இருபுறமும் சேர்வராயன் மலைத்தொடர்களும் மலைத்தொடர்களும் சூழ்ந்து கல்வராயன் காணப்படுவதால், இப்பகுதி மக்கள் வேட்டைக்கு போவது வழக்கம்.

அப்படி ஒரு நாள் காராளர்களில்(மலையாளி) சிலப்பேர் வேட்டைக்கு சென்று ஒரு பெரிய காட்டுப்பன்றியை வேட்டையாடுகின்றனர். தங்கள் வேட்டையின் திறமையை ஊர்வலமாக சென்று மக்களுக்கு காட்டுகின்றனர்.அப்படி ஊர்வலமாக செல்லும்போது குப்பனூருக்கும் செல்கின்றனர்.குப்பனூர் உடையார்கள் அவைகளை வரவேற்று,மரியாதை நிமித்தமாக துணிவிரித்து அமரவைத்து பருகுவதர்க்கு தண்ணீர் கொடுக்கின்றனர். பின் வேட்டையை பற்றி பேசுகின்றனர். இறுதி நேரத்தில் உடையார்கள் காராளர்களிடம் "இளையராமர் சாமித்தேர் எங்கள் ஊரையும் தண்ட (உலா) வேண்டும், பொங்கல் வைக்கும் உரிமை எங்களுக்கும் தர வெண்டும்" என கேட்க,பழகும் பழக்கத்தின் காரணமாக காராளர்களும்(மலையாளி) சரி என ஒப்புதழ் அளிக்கின்றனர்.

இளையபெருமாள்(இளைய ராமர்) சாமி திருவிழாவின்போது ஒவ்வொரு ஊரின் பொங்கலுக்கும் சாமிக்கொடையை அனுப்பி பொங்கலை கொண்டு வருவது வழக்கம்.அப்படி ஒரு திருவிழாவின் போது, உடையார்கள் முதலில் பொங்கல் வைத்து "நாங்கள் பொங்கல் வைத்துவிட்டோம் குடையை அனுப்புங்கள்"எனக்கூற காராளர்களும் யோசிக்காமல் குடையை அனுப்பி பொங்கலை கொண்டு வருகிறார்கள்.

அதற்கடுத்த  திருவிழாவின் போது "முதல் பொங்கல் எங்களுடயதுதான்,குடையை முதலில் எங்களுக்குத்தான் அனுப்ப வேண்டும்"என்று கூறி,போன வருட திருவிழாவை சுட்டிக்காட்டி உரிமை
கோருகின்றனர்.பின் காராளர்கள்(மலையாளி),கொடுத்த வாக்கை மீறக்கூடாது என ஒப்புக்கொள்கின்றனர்.

அன்றிலிருந்து காராள(மலையாளி) மக்களின் இளையபெருமாள்(இளையராமர்) கடவுளை, குப்பனூர் உடையார் இன மக்களுக்கும் கும்பிட ஆரம்பித்து விட்டனர்.

தகவல் - காராளர் தனபால் கவுண்டர், பூவனூர்.

4.பெருமா பாளையம் சென்றாய பெருமாள் கோவிலும் வன்னியர் இனமும்:

சேலம் மாவட்டம் வலசையூருக்கு அருகிலுள்ள பெருமா பாளையம் என்ற ஊரில் மூலட்டான் குலம்(வாச்சான் குலம்) பிரிவை சார்ந்த காராளர்(மலையாளி) இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.இவர்கள் பச்சை மலையையிலிருந்து இட்பெயர்ந்தவர்கள்.

இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருமா பாளையத்தில் இந்த காராள மக்கள் விவசாயம் செய்து வசித்து வந்துள்ளனர்.
இவர்களின் பங்காளிகள் மட்டும் சேர்ந்து வணங்கும் வீட்டு சாமி(புடவைக்காரி அம்மன் மற்றும் பெரியாண்டிச்சி அம்மன்)  திருவிழாவில் முப்பூசையில் ஆடு,கோழி மற்றும் பன்றி பலியிடுவது வழக்கம்.

இம்முப்பூசையில் வன்னியர் வளர்த்த பன்றியை தவறுதலாக பிடித்து அம்மனுக்கு பலியிட இரு இனத்துக்கும் பிரச்சனை வருகிறது.அப்பிரச்சனையில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெளியேறி சேலம் அரூர் நெடுஞ்சாலையில் மஞ்சாவாடி கணவாய்க்கு அருகிலுள்ள கோம்பை ஊர்(கோம்பூர்) என்னும் ஊரில் குடியேறி தற்பொழுது அங்கு விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இன்று,இவர்களின் குலசாமி கோவிலான சென்றாய பெருமாள் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் வன்னியர் இன மக்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டது.

புரட்டாசி,தை மற்றும் சித்திரை மாதத்தில் காராளர்(மலையாளி) இனத்தில் பெருமாள் சாமியை குலசாமியாக வணங்குபவர்கள் விழா எடுத்து வழிபாடு செய்வார்கள.அந்த மாதத்தில் இந்த மூலட்டான் வீடு (வாச்சான் வீடு) மக்களும் கோம்பூரிலிருந்து பெருமா பாளையத்துக்கு சென்று தன் குலசாமியாகிய சென்றாய பெருமாளை வழிபட்டு வருகிறார்கள்.

இந்த கோவிலுக்கு நிறைய நிலங்கள் இருப்பதால் இந்த கோவிலை அறநிலை துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

தகவல் - காராளர் பிரவீன் கவுண்டர்,கோம்பூர்.