ஜவ்வாது மலையில் கோவிலூர் கிராமத்தில் உள்ள திருமூல நாதர் கோவில் அருகில் நிலத்தில் உள்ள செக்கு கல்வெட்டு.
இரண்டு கல் செக்கும் ஒருவரால் தானம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “பரதன் காரிதன் மகன் வென்றிட்டிட வாட்டி மோடி செக்கு"
என பொறிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்:
பரதன் காரி என்பவரோட மகன் வென்றிட்டிட வாட்டி மோடி என்பவர் தானம் கொடுத்த செக்கு.
மோடி - மோடி என்பது தாய்தெய்வம் பெயர் ஆகும்.மோடி என்பது ஆண்பால் பெயர், மோடாள் என்பது பெண்பால் பெயர் ஆகும்.
இந்த செக்கின் கல்வெட்டு தவிர மற்ற பகுதி கழனியில் புதைந்துள்ளது. இந்த செக்கின் விட்டம் 75 செ.மீ.
இந்த நிலத்திற்கு தெற்கில் மேட்டில் வெங்கடேசன் என்பவரது நிலத்தில் இரண்டு கல் செக்குகள் காணப்படுகின்றன.
இன்னொரு செக்கில் “பரதன் காரிதன் மகன் (வெ)ன்றிட்டிட செக்கு” என்றுள்ளது.
இந்த செக்கின் விட்டம் 1 மீட்டர் 20 சென்டி மீட்டர். அதே நிலத்தில் வேறு கல் செக்கும் மேற்படி கொடையாளி அளித்திருக்கிறார். இந்தச் செக்கின் விட்டம் 1மீட்டர்.
செக்குகள் செய்த காலத்தில் அதிக அளவில் இலுப்பை மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆமணக்கு அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும். இவற்றின் விதைகளை செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து வீட்டுக்கு பயன்படுத்தி கோயிலுக்கும் விளக்கேற்றியிருக்க வேண்டும். தற்காலத்தில் இலுப்பை மரங்கள் இல்லை என்பதுடன் ஆமணக்கு பயிரிடுவதும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
இந்து தமிழ் நாளிதழ்,
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் ம.காந்தி,
பொருளாளர் முனைவர் ப.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகர் பொறியாளர் மணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக