செவ்வாய், 7 ஜூலை, 2026

கொல்லிமலைக் காராளர் பேரூர் கல்வெட்டு

கொல்லிமலை காராளர் பேரூர் கல்வெட்டு:

ஊர் : பேரூர்,கோவை மாவட்டம்

அரசு : கொங்குச்சோழர்

இடம்:பட்டீஸ்வரர் கோயில் மகாமண்டபம் வடக்குச்சுவர்

13 ஆம் நூற்றாண்டில்,சோழர் ஆட்சி காலத்தில்,இரு குறுநில மன்னர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர் பற்றிய கல்வெட்டு இது.இதில் கொல்லிமலை காராளர்(மலையாளி) மக்களின் குல பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

விளக்கம்:

1.குறுநில மன்னர் ஒருவர், மலைநாட்டிலிருந்து படைகளை வரவழைத்து,படையெடுத்து சென்று கோவன் புத்தூர் என்கிற கோயமுத்தூரை வெற்றி கொள்கிறார்.

2.பின் பேரூருக்குச் சென்று திருவான்பட்டி உடையார் வணங்கி,வெற்றியின் அடையாளமாக வாயறைக்கா நாட்டு கீழ் மலையூர் என்கிற விக்கிரம சோழ நல்லூரை மலை இராச்சியத்திலிருந்து வந்தவர்களுக்கு தானமாக கொடுக்கிறார்.தானம் அளிக்கப்பட்ட ஊரின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளது.

3.அவ்வூரின் குடிமக்களாக (காணியாளர்களாக) "பிள்ளைகளில்(வெள்ளாளரில்)..... வாடியான் வீர கங்கனான தன்மபாலனும்,மழவரையன் .....  உத்தனும்,சோழன் கூத்தனும்,சோழன் வே மனதை பிள்ளையும்,பூசன் ....... ,காவி ....... ஆகியோருக்கு கொடுக்கிறார்.

4.வீர கங்கன்,மழவரையன்,சோழன்,பூசன் மற்றும் காவி இவர்களுக்கு ஏற்ற நபரை நாட்டாராக(மன்றாடி) நியமித்துக் கொண்டு ஆட்சி செய்யலாம்"என அரசர் கல்வெட்டிக் கொடுக்கிறார்.

"பிள்ளை" - பிள்ளை என்பது சோழ நாட்டில் வெள்ளாளருக்கு உள்ள பட்டம் ஆகும்."பிள்ளைகளில்" என்பதற்கு "வெள்ளாளரில்" என பொருள் ஆகும்.

***காஞ்சி வெள்ளாளர்கள் சோழ தேசத்திலிருந்து கொல்லி மலைக்கு குடியேறி,பின் மலை நாட்டிலிருந்து கோயமுத்தூருக்கு படை எடுத்துச் சென்று பேரூரிலும் குடியேறி இருக்க வேண்டும்***


***வெள்ளாளரில் வீரகங்கன் பட்டம் கொண்ட தன்மபாலனுக்கும்,மழவரையன் பட்டம் கொண்ட உத்தனுக்கும்,சோழன் பட்டம் கொண்ட கூத்தனுக்கும் மற்றும் மனதை பிள்ளைக்கும்,பூசன் பட்டம் கொண்ட ஒருவருக்கும்,காவி பட்டம் கொண்ட ஒருவருக்கும் காணியாட்சியாக கீழ் மலையூர் என்கிற ஊரை தானமாக கொடுக்கிறார் மன்னர்.***

வீர கங்கன்:
***இதே மாவட்ட கல்வெட்டில் வீர கங்கன் என்பவன் திருவெண்காடு ஊரை சார்ந்தவன் என்று உள்ளது.திருவெண்காடு கிழக்கு கடற்கரை பக்கம் சீர்காழி வட்டத்தில் உள்ளது.***

***வீர கங்கன் பட்டம் கொண்ட அரசூருடையான் பரமத்திதரான வீர கங்கன் என்னும் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.***

***கல்வராயன் மலை பகுதியை சோழர் கால கல்வெட்டுகளில் "மகதை மண்டலத்து வெண்காட்டு மலை துறவி நாடு" என குறிப்பிடுகின்றனர்.***

மழவராயர்:
***மழவராயர் என்னும் பெயர் மழுவர் மலையர் என திரிந்து தற்பொழுது மலையன் என அழைக்கப்படுகிறது.***

***சேர்வராயன் மலை காராளர்(மலையாளி) இனத்தில் மலையன் குலம் உள்ளது.கொல்லிமலை காராளர்(மலையாளி) இனத்தில் ஆதி மலையன் சக்ரவர்த்தி என்னும் குலம் உள்ளது***

***சேர்வராயன் மலையில் உள்ள கோவிலூர் வாணீஷ்வரர் கோவில் கல்வெட்டுகளில் "கற்கட மாராயன் முதலிகளில் மழவராயர்" என்னும் ஒருவர் குறிப்பிடப்படுகிறார்.

***திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்வெட்டுகளில் வெள்ளாளர் மாடைகளில் மழவராயர் அவினாசி மழவராயர் என்று உள்ளது குறிப்பிடத்தக்கது ***

***வெள்ளாளர்களுக்கும் மழவராயர் பட்டம் இருப்பது தெரிய வருகிறது.***

இதில் வரும் பிள்ளை(பிள்ளான்),சோழன்,மழவரையன்(மலையன்),பூசன்,காவி என்பது கொல்லி மலை காராள மக்களின் குல பெயர்கள் ஆகும்.

எனவே இந்த கல்வெட்டில் வரும் மலை இராச்சியம் என்பது கொல்லிமலை பகுதியாகவோ அல்லது கல்வராயன் மற்றும் கொல்லி மலை பகுதியாகவோ இருக்க வேண்டும்.

வெற்றி பெற்ற அரசர் விக்கிரம சோழராக இருக்கலாம் ,தோல்வியுற்ற அரசர் வீர கேரளர் அரசராக இருக்கலாம்.


கல்வெட்டு:

1. ஐஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திக் கோனேரி மேல்கொண்டான் ஆளுடையார் திருவான்பட்டி ஆளுடைய நாயினார் நாம் மலையிராச்சியத்திலே யிருந்து நாம் நம்

2. மிராச்சியத்திலே ஜயம் பண்ணி நாம் வந்து புகுந்து நாம் உடையாரை தெண்டன் பண்ணிக் கோவன்புத்தூரை எறிஞ்சு கொண்டு நாம் பேரூரிலே

3. வந்து புகுந்து திருவான்பட்டியுடையாரை தெண்டந் பண்ணி நமக்கும் அய்யனுக்கும் நன்றாக உதகம் பண்ணிக்குடுத்த ஊராவது வாயறைக்கா

4.நாட்டுக் கீழ்மலை யூரான விக்கிரம சோழ நல்லூர்க்கு எல்லையாவது கீழ்பாற்கெல்லை குண்டக் கரைக்கு மேற்கும் தென்பாற் கெல்லை மயிலாடுபா

5. றைக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை தண்டியன் கரைக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை... க்கு தெற்கும் இந்நான் கெல்லைக்குள் ந

6. டுவுப்பட்ட ஊர் ஏரி நாம் உதகம் பண்ணிக்குடுத்த இக்குடிகள் பிள்ளைகளில்... வடியான் வீரகங்க

7. னான தன்மபாலனும் மழவரை[யன்]... உத்தனும் சோழன் கூத்தனும் சோழன் வே மனதை பிள்ளை... பூசன் ...ன் காவி

8. இக் குடிகள் தம்மில் இசைந்த பேரை மன்றாட்டு இட்டுக் கொள்வார்களாகவும் இந்நான்கு எல்லை

9. சுங்கம் சாரிகை மற்றும் எப்பேர்ப்பட்டன கடவதல்ல பொன்... கடவதல்ல...

10. [புற்றுந் தெற்றியும்... மேனோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் அமுது படிக்குடலாவதாகவும் இஊர்க்கு... னாட்டு வார்க்கு ஊர்(க்)கு பொன்னு...

11. நத்தம்.... மற்றும் எப்பேற்பட்டனவும் செலுத்தக் கடவத...

நன்றி - கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக