கொல்லிமலை நெடுவலம்பட்டி வணிகர் கல்வெட்டு:
இடம்:நெடுவலம்பட்டி,கொல்லிமலை
ஆண்டு: 12 ஆம் நூற்றாண்டு
(800 வருடங்களுக்கு முன்)
கல்வெட்டிலுள்ள உள்ள தெய்வத்தைச் சுற்றி மேளம்,விளக்குகள், வில் மற்றும் செளரி போன்ற வணிகக்குழுக்களின் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டில் உள்ள சிங்கம், அதன் மேல் ஆந்தை அல்லது முயல் குறிப்பு இது வீர லட்சமி(கொற்றவை) உருவம் என்று காட்டுகிறது.
கல்வெட்டு:
"ஸ்வஸ்தி ஸ்ரீ நெடுவலமான தேசி ஆசிரிய
பட்டணம் ஹர"
விளக்கம்:
நெடுவலமான - பெரும் படையான,
தேசி - வணிகர்
ஆசிரிய - போர்க் காயத்தால் ஓய்வு கொள்,
பட்டணம் - காப்புடைய ஊர்,
ஹர - அழித்து, வென்று,எறிந்து.
இன்றைய நெடுவலம்பட்டி என்ற ஊர் பெயர் இதை வணிகர் தம் பெரும்படை நிலமாக இருந்திருக்க வேண்டும்.
போரில் காயமுற்ற வணிகப் படை வீரர் தங்கி மருத்துவம் பார்த்து ஓய்வு கொள்ளும் இடம் இங்கே இருந்துள்ளது. அதை யாரோ அழித்த வென்ற செய்தியை கீழே தமிழ் எழுத்தில் உள்ள கல்வெட்டு
தெரிவிக்கிறது.
ஆனால் அழித்தவர் யார் என்பது
தமிழ் கல்வெட்டில் இல்லை. ஆனால் வீர லட்சுமி(கொற்றவை) உருவத்தின் வலப்புறத்திலும், தலை மீதும் திரிந்த சிந்து எழுத்து, தமிழி எழுத்து கலப்பில் குறிப்புகள்
உள்ளன.
சிந்து தமிழி எழுத்து:
வீர லட்சுமி(கொற்றவை) தெய்வத்திற்கு மேலேயும் வல பக்கமும் சிந்து தமிழி எழுத்து காணப்படுகிறது.
அழித்த வணிகர் பட்டணத்தை
மீண்டும் பழையபடியே வணிகரிடம் ஒப்படைத்தாக (restore) தெரிகிறது. அழித்த கடற்படை எந்த வேந்தனுடையது என்று குறிப்பு இல்லை.
இது வணிகருடைய கடற்படையா? வணிகர் நிலப் படையினருடன் அவருக்குள் ஏற்பட்ட பிணக்குப் போரா? இது என்றும் தெரியவில்லை.
முதலில் தலை மேல் உள்ள எழுத்து:
சதுரத்தில் கீழே வலித்த கோடு நா; 8 வடிவ உடுக்கை -வ; நெடுங்கோட்டின் குறுக்கே = - ன; 0 - ம்; n - ப; தமிழி [- ட்; மீண்டும் [- ட; தமிழி | - ர்; தமிழி | - ண்; தமிழி |● - ஈ, தமிழி L - ரு; ? - ன்; பிறை )) - ந; தலைமாறான J - ன்; பிறை ((-ன; =-ண். இதில் உள்ள எழுத்துகள் நாவனம் பட்டர் ண்ஈருன் (ணீருன்> நீருன்) நன்னண் > நன்னன் என்பது. இதன் பொருள் நாவனன் (ம்) - நாவாய்ப் படை; பட்டர் - படைத் தலைவர்; நீருள்(ன்) கடலில், seas; நன்னன் -பெருந்தகை, Lord.
இதன் பொருள் "நாவைப்(கடற்படை) படைத் தலைவர் இவர் கடல்களின் பிரான் (Lord of seas) "என்கின்றன மேலே உள்ள சிந்து, தமிழி கலப்பு எழுத்துகள்.
வலப்பக்க எழுத்துகள்:
தலைமாறான J கீழ் வலித்த கோடுடன் நா; உடுக்கை 8-வ; @ - ன; V - ம்; n - ப; [] - ட், பட்டாக் கத்தி - ட; கவிழ்ந்த ய - ய்; வில் D - த; | - ர்; A - ம; A - ம். இதில் உள்ள எழுத்துகள் நாவனம் பட்டய் தர்மம் என்பன. பட்டய் > பட்டை என படிக்க வேண்டும். இதன் பொருள் நாவனன்(ம்) - நாவாய்; பட்டை - படை; தர்மம் - கல் நிறுத்தம்.
இந்த "கல் நிறுத்தம் நாவாய்ப்(கடற்படை) படையால் நிகழ்ந்தது" என்று பொருள்.
குறிப்பு:
இதே போல் சிந்து தமிழி எழுத்துக்கள் பெரம்பலூர் வெண்கலம் சிவன் கோவில் வணிக கல்வெட்டுகளில் உள்ளது.அதில் "தாவளம்(தாங்கும் இடம்)" என்று உள்ளது.
நன்றி: சோழ மண்டல வரலாற்று தேடல் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக