kollimalai chekku inscriptions:
கொல்லிமலையில் காராளர்(Karalar) என்னும் மலையாளி பழங்குடி இனம் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் சின்ன அண்ணன் பிரிவை சார்ந்தவர்கள்.இம்மக்களுக்கு காராள கவுண்டர்,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை வெள்ளாளர் என்றும் பிற பெயர்கள் உண்டு.
இவ்வினத்தில் சாத்தன் வீடு என்னும் குலத்தில் பிறந்த அறப்பள்ளி,பன்றி என்னும் இருவர் தானமாக கொடுத்த செக்கு பற்றிய செய்திகள் இது.
கல்வெட்டு 1:
இடம்:
கொல்லிமலை,அரியூர்நாடு, மேல் கலிங்கம் சோழமுடையார் கோயில் அருகில் உள்ள செக்கு
காலம் :12 ஆம் நூற்றாண்டு.(1200 ஆண்டுகளுக்கு முன்)
செய்தி :
இவ்வூர்ச் சிவன் கோயிலுக்கு அறப்பள்ளி சாத்தன் கொடுத்த செக்கு.
கல்வெட்டு பகுதி:
ஸ்வஸ்திஸ்ரீ இச்செக்கு உள்ளூர் மாதேவர்க்கு குடுத்தேந் அறப்பள்ளி சாத்தநாந
கல்வெட்டு 2:
இடம்:
கொல்லிமலை,திண்ணனூர் நாடு வாசலூர்ப் பட்டி தோட்டம்.
காலம் :12 ஆம் நூற்றாண்டு.
செய்தி :
வாயலூருடையான் (வாசலூர்) பன்றி சாத்தன் கொடுத்த செக்கு.(வாயலூர் பகுதியை ஆட்சி செய்தவர் அல்லது நாட்டார்)
கல்வெட்டு பகுதி:
ஸ்வஸ்திஸ்ரீ வாயலூருடையாந் பந்றி சாத்தன் செக்கு.
நன்றி - ஆவணம் இதழ் 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக