வெள்ளி, 13 மார்ச், 2026

மலையாள கவுண்டர் குறிப்புகள்

இனம் - காராளர் 

பிற பெயர்கள் - காராள முதலி,மலையாளக் கவுண்டர், மலைக் கவுண்டர்,மலை வெள்ளாளர்,மலையாளி.

பழகுங்குடி பட்டியலில்
சேர்க்கப்பட்ட ஆண்டு -1956 ஆம் ஆண்டு,காமராசர் ஐயா ஆட்சியில்.

1880 ஆம் ஆண்டுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியப்பட்ட இம்மக்களின் பெயர் -
கார்காத்த வெள்ளாளர்,காஞ்சி மண்டல வேளாளர்,கொங்கு வேளாளர்.

வாழும் இடங்கள் - கல்வராயன் மலை தொடர்ச்சிகள்,ஜவ்வாது மலை,ஏலகிரி மலை,சேர்வராயன் மலை,கொல்லி மலை,பச்சை மலை,ஈரோடு மாவட்ட மலைகள்,மேற்கூறிய மலைகள் சுற்றிய நிலப்பகுதிகள்.

பூர்வீகம் - காஞ்சிபுரம்

மலைக்கு குடியேறிய காரணங்கள் - பஞ்சம்,போர்கள்,மன்னர்களின் வரிசுமை,இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு.

தொழில் - விவசாயம்

மதம் - வைணவம்,சைவம்

வைணவ தலைமை கடவுள் - காஞ்சிபுரம் கரி வரதராஜ பெருமாள் (கரிய பெருமாள்,கரிராமன்)

சைவ தலைமை கடவுள் - திருவண்ணாமலை அண்ணாமலையார்

பச்சை மலை குரு மற்றும் ராஜா - தங்கராஜ் கவுண்டர்,சேந்தகம் ஊர்.

கொல்லிமலை குரு மற்றும் ராஜா-பார்த்திபன் கவுண்டர்,ஆதி மலையன் சக்கரவர்த்தி குலம்,வளப்பூர் நாடு

சேர்வராயன் மற்றும் கல்வராயன் மலை குரு - குலசேகரன் பட்டம் கொண்ட லட்சுமண கவுண்டர்,தேனாண்டை குலம்,தேனாண்டை மலை(சித்தேரி உள்ளிட்ட மலைகள்),கலசப்பாடி கிராமம்.

மற்ற இரண்டு குருவும் தேனாண்டை லட்சுமண குருவுக்கு கட்டுப்பட்டவர்கள்.

(குறிப்பு - குலசேகரன் என்பது பாண்டிய மன்னர்களின் பெயர்களில் ஒன்று)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக