வியாழன், 26 மார்ச், 2026

ஆவணத்தில் காராள முதலி( மலையாளி) வரலாறு.

ஆவணத்தில் காராள முதலி(மலையாளி) வரலாறு:

1930 ஆம் நம் காராள முதலியார்(மலையாளி) இனத்தின் மகா சபை கூட்டத்தில்,நம் இனத்தின் ராஜா மற்றும் குரு,குலசேகரன் பட்டம் கொண்ட தேனாண்டை குல லட்சுமண குரு கூறிய நம் வரலாறு பின்வருமாறு:


ஸ்ரீராமஜெயம்.

(திருவுருவப் படம்: விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி)

காராள வம்சம் (விஷ்ணுகோத்திரம்) ஆதிமுதலில் முதலி(முதலியார்) வம்ச மலையாளி ஜாதியின் லோககுரு பரம்பரையாகிய சேலம் ஜில்லா அரூர்தாலுக்கா குரு க்ஷேத்திரம் சித்தேரிமலை கலசபாடியில் வாசஞ்செய்யும் தொம்பகல் தேனாண்டை
லக்ஷ்மணகுரு தனக்கு சம்மந்தப்பட்ட தமிழ் பேசும் மலையாளி ஜாதியின் சிஷ்யர்களுக்கு சீர்திருத்தம் செய்யும்பொருட்டு தானும் (தனக்கு சம்மந்தப்பட்ட நாட்டில் முக்கியமாய் நாகரீகம் அடைந்த சிஷ்யர்களும்) ஆமோதித்து கொண்டு வந்த விவாக விஷயமாக சீர்திருத்த மசோதா.

(1930-ம் வருடத்தில் பிரசுரம் செய்யப்பட்டது.)


தமிழ் பேசும் ஒவ்வொரு மலையாளிகளும் கீழ்கண்ட உண்மை
ஜாதியை முற்காலத்தில் இருந்ததை கவனித்து நமது மலையாள ஜாதிக்கு
நன்மதிப்பை கொண்டுவரும்படி ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

நாம் மலைமேல் வாசம் செய்துவந்ததால் நமக்கு மலையாளிகள் என்று நாமதேயமாயிற்று சில நூற்றாண்டுகளுக்குமுன், நம்முடைய ஜாதி ஆகப்பட்டது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சீபுரம் தாலுக்காவில் இருந்தது.
(வேளாண்மை தொழில் செய்துவந்த காராள முதலி வம்சத்தை ஒட்டின பரம்பரை) பிறகு தற்காலத்தில் ஸ்ரீ கரிராமர் என்று அழைக்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கரிவரதரின் நாமதேயத்தை நம்முடைய ஜாதிகளுக்கு புகட்டிக்கொண்டு,சோழ ராஜா காலத்தில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு மலைமலையாக தங்கி மேற்படி கால்நடைகளுக்கு சௌகரியத்தின்பொருட்டு மலைமேல் தங்கி விட்டபடியால் நமக்கு மத்தியில் மலையாள ஜாதியென்று அடி நாட்டார்கள் நம்மை கூப்பிடலாயிற்று.

சாஸ்திராப்படி தமிழ் பேசும் மலையாளி(கேரள மக்கள்) ஜாதி அல்ல.மலையாளிகளுக்கு அவர்கள் ஜில்லாவும் வேறு அவர்கள் பாஷையும்
மலையாளம், அவர்கள் பேச்சும் மலையாளம், அவர்கள் பழக்கமும் நடையுடை பாவனையும் வேறு.

நம் ஜாதியார் முதலிமார்,முதலிமார் என்றால் தப்பு அர்த்தம் கொள்ளக் கூடாது. அதாவது நாம் செங்குந்த முதலி வம்சத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 

சோழ ராஜகாலத்தில், பயிர் தொழிலும், கால் நடை மேய்ச்சலும் செய்துவந்ததால் நம்மை கார் ஆளர்(காராளர்) என்று கூப்பிடலாயிற்று.
நமக்கு பிறகு அடி நாட்டார்கள் நம்மை கவுண்டர்கள் என்று கூப்பிடலாயிற்று. 

கவுண்டர் என்றால்,கொங்கு வேளாளருக்கும், வன்னிய குலத்தாருக்கும் கவுண்டர் என்று நாமதேயமுண்டு, அவர்களை ஒட்டின ஜாதியல்ல, நாம் கிழக்கே அதாவது சமுத்திர கரையை ஒட்டி வந்த காராள முதலி வம்சமென்று அறியவும்.நம்முடைய ஜாதியை ஒட்டினவர்களே ஜவ்வாது மலைமேல் வாசஞ் செய்பவர்களும், கொல்லிமலை,பச்சைமலை,மற்றுமுள்ள மலைபேரில்(சேர்வராயன் மலை,ஏலகிரி மலை,வத்தல் மலை,கல்வராயன் மலை மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள காளி மலை,கடம்பூர் மலை,பால மலை) வாசஞ்செய்யும் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் நம் இனத்தார்களே. 

அந்த அந்த மலைபேரில் வாசம்
செய்துவந்ததால் மலையின் பேர் மேற்படியார்களுக்கு வழங்கலாயிற்று.
சாஸ்திரபடி மலைமேல் வாசஞ்செய்யும் ஒவ்வொரு மலையாளர் தமிழ்பேசு
பவரெல்லாம் நம் இனத்தார்களே என்று அறியவும். அந்த மலையின்
மேல் வசிப்பவர்களை அந்த அந்த அடிநாட்டார் வழக்கத்தை மத்தியில்
கையாடிவிட்டுவந்து இருக்கிறார்கள்.

முன் ஒரு காலத்தில் நமது ஜனங்கள் கடவுள் வணக்கமே இல்லா
மலும், மூட்டுதனமாயும், மிலேச்சாயும், நமது மதத்தைதொழுவாமல்
அன்னிய மதத்தை தொழுதுகொண்டுமிருந்தவர்களை நல்வழிக்கு
கொண்டுவரும்பொருட்டும் கடவுள் வணக்கம் விக்கிரக ஆராதனை செய்
யும்பொருட்டும் காஞ்சீபுரத்திலிருந்து நமது காராள குலசிகாமணி
களாகிய 10-க்கு மேற்பட்ட முதலிமார்மார்கள், கிழக்கே இருந்து வந்து அநேக ஆறுகள், மலைகள் கடந்துவந்து ஸ்ரீ கரிராமர் என்னும், காஞ்சி ஸ்ரீ கரிவரதரின் மகிமையும் ஷை சுவாமியின் அடையாளமாகிய குடையும், வெஞ்சாமரையும், சுவாமியின் கொடியையும், இன்னும் அநேக அடையாளங்கள் கொண்டுவந்து அங்காங்கே கோயில்களை உற்பத்தி செய்து, நமது ஜாதிக்கு ஆதி குருபீடமாகிய கலசபாடியில் தேனாண்டை வம்சத்தை(குலத்தை) ஷை சுவாமி காரியத்திற்காக குருகாணிக்கை நமது குலதார்களிடம் வசூல்செய்யவும் மேலும் நமது குலத்திற்கு பெரிய பீட
மாகவும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தற்காலத்தில் இதை சிலர் அடியோடு மறந்துவிட்டு குரு வணக்கத்தையும், குருவுக்கு முற்காலத்தில் ஏற்பட்ட குரு காணிக்கையும் மறந்து விட்டு வருகிறார்கள். அம்மாதிரி நடவாமல் நமது ஜாதிக்கு நற்பெயரும் நல்ல மதிப்பும் இனிகொண்டுவரும்படி இதன்மூலியமாய் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இனிமேற்கொண்டு நமது ஜாதியைப்பற்றிய சீர்திருத்தம், நம் விஷயத்தைப்பற்றியும் அபிவிர்த்தியைப்பற்றியும், கடவுளின் வணக்கத்தைப்பற்றியும், ஆலய வழிபாடுபற்றியும், குருவின் காணிக்கையைப்பற்றியும், பெரியோர்களின் வணக்கத்தைப்பற்றியும் அடிக்கடி பிரசுரம் மூலியமாய் வெளிவரும்.

மேல்கண்ட சீர்திருத்தம் (தமிழ் பேசும் மலையாள தேசமாகிய,
சித்தேரி மலைநாடு, அரியகவுண்டன் மலைநாடு, குறும்பகவுண்டன் மலை
நாடு, அன்னதான ஜடயகவுண்டன் மலைநாடு, பெரிய கல்ராயன் மலைநாடு,சின்னகல்ராயன் மலைநாடு, சேர்வராயன் மலைநாடு, வத்தல மலைநாடு,கொல்லி மலைநாடு, பச்சைமலைநாடு பால மலைநாடு, காளிமலைநாடு, ஜவ்வாது மலைநாடு, ஏலகிரி மலைநாடு, பர்கூர் மலைநாடு,மைசூர் சமஸ்தானத்திலும்,
கோயம்பத்தூர்(இன்று ஈரோடு) ஜில்லா பூனாச்சிமலையில் வாசஞ்செய்யும் காராள வம்ச தமிழ் பேசும் மலையாளருக்கும் மேல்கண்ட தீர்மானம் செலாவணி
ஆகும்.

தமிழ் பேசும் மலையாள ஜாதியின் பிறப்பு வளத்தைப்பற்றியும் ஜாதி உற்பத்தியைப்பற்றியும் இதற்கு குருவின் சரித்திரத்தைப்பற்றியும், நம்குல தெய்வமாகிய கரிராமர் என்று அழைக்கும் ஸ்ரீ காஞ்சி கரிவரதராஜ
பெருமாளின் மகிமையைப்பற்றியும் சாஸ்திரபடி உண்மையான சரித்திரம்
ஒவ்வொரு நம்முடைய ஜாதியாருக்கு குருவால் பின்னால் பிரசுரிக்கப்
படும்.

இப்படிக்கு ஆசிர்வாதம்.
இப்படிக்கு தமிழ் பேசும் மலையாள ஜாதியின் லோககுருவாகிய
குலசேகரன் என்ற பட்டமும் தேனாண்டை என்ற பட்டமும்பெற்ற,
தொம்பகல். லக்ஷ்மணதுரை.
என் சீலும் முத்திரையும் போடப்பட்டது.

(***குலசேகரன் என்னும் பட்டம் பாண்டிய மன்னர்களுக்கு உரிய பட்ட பெயர் ஆகும்.***)

இதில் நமது மலையாள லோக குரு
தீர்மானத்தை நாங்கள் ஸ்ரீ கரிராமன்
எழுத்தும் கைநாட்டும் போட்டு சம்மதித்து
நடக்குபோம்,ஒவ்வொரு மலையாள ஜாதியும்.மீறினால்
காராம் பசுவை கழுத்தை அறுத்த தோஷம் அடைவோம்.
"இது சத்தி"(சத்தியம்).

இப்படிக்கு,
கையொப்பங்கள்:--
1. சித்தேரிமலை குருவின் மந்திரி [கையொப்பம்]
2. ஷையார் காணிமகன் [கையொப்பம்]
3. S. R. சங்கரதுரை பாளையகாரர்
4. [பெயர் தெளிவில்லை]
5. ராமநாட்டார், நாட்டாண்மைக்காரர்
6. வெள்ளையகவுண்டர்,(ஊர் பெயர்)
7. தீர்த்தகிரி நாட்டார், தாதம்பட்டி
8. மோளைய நாட்டார், மானேஜர்(நிறுவனம் பெயர் தெரியவில்லை) தாதம்பட்டி
9. ஷை நாட்டு காணிமகன் ஜடையகவுண்டர்
10. தீர்த்தகிரி நாட்டார், சூரியகடை
11. ஷை நாட்டு காணிமகன் சி.மு. [பெயர்]
12. அ. அருணகிரி கவுண்டர், சிட்டிலிங்கி
13. வேங்கை நாட்டார், நாட்டாண்மை
14. தீர்த்தா நாட்டார், சூரியகடை
15. ஜாகீர் வெள்ளி நாட்டார்
16. தீத்தா நாட்டான், [பெயர்]
17. கல்லிராய(கல்வராயன்) கவுண்டர், நாட்டாண்மை
18. கரியா நாட்டான்
19. ஜடைய நாட்டான்
20. ராமகவுண்டர், தேக்கல்பட்டி
21. அண்ணாமலை கவுண்டர், அரசநத்தம்
22. வெங்கடாஜலகவுண்டர், கலசபாடி
23. லட்சுமணகவுண்டர், கலசபாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக