குரும்ப கவுண்டர் ஜாகிர் காராளரா?
இந்த கல்வராயன் மலையானது,தேனாண்டை மலை,பெரிய கல்வராயன் மலை,சின்ன கல்வராயன் மலை,சடைய கவுண்டர் மலை, அரிய கவுண்டர் மலை மற்றும் குரும்ப கவுண்டர் மலை என ஆறு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் வரும் குரும்ப கவுண்டர் என்பவர் காராள இனத்தை சார்ந்தவரா அல்லது குறும்பர் இனத்தை சார்ந்தவரா என சந்தேகத்தின் பேரில் கல்வராயன் மலையில் கள ஆய்வு மேற்கொண்டேன்.
சேராப்பட்டு கிராமத்தில் குரும்பன் வீடு என்னும் குலத்தை சார்ந்த ராமலிங்க கவுண்டர் குடும்பத்தாரிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது,"குரும்பு செய்கிறவன் என்னும் பொருளில் இந்த குல பெயர் வந்ததாக கூறினார்,நாங்கள் காராள கவுண்டர் என்பதால்,எங்கள் குலத்தை சார்ந்தவர் ஆட்சி செய்வதால், பரம்பரையாக அவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பெயருக்கு பின்னால் குல பெயரையும் கவுண்டர் பெயரையும் வைத்து கொள்கிறார்கள் என்றும் எங்களுக்கும் குரும்பர் என்னும் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறினார்".
சரி குறும்பர் பேசும் கன்னடம் கலந்த மொழி பேசுகிறார்களா என ஆராயும் பொழுது அனைவரும் தமிழ் தான் பேசுகிறார்கள். குறும்பர் இன குல தெய்வக் வழிபாடும் இங்கு இல்லை.
குறும்பர் சாதியை சார்ந்த நண்பர்கள் சிலர்,கல்வராயன் மலையில் இருக்கும் குறும்ப கவுண்டர் நாடு குறும்பர் என்னும் சாதிக்கு சொந்தமானவர்கள் என கூறியும் பதிவிட்டும் வருகிறார்கள்.அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக