வெள்ளி, 24 ஏப்ரல், 2026

பச்சை வெள்ளாளர்

பச்சை வெள்ளாளர்

பச்சை வெள்ளாளர் என்னும் இனத்தவர்கள் ஜவ்வாது மலையில் வாழ்கிறார்கள்.இவர்கள் கல்வராயன் மலை,பச்சை மலை பகுதியிலிருந்து வந்து ஜவ்வாது மலைக்கு குடிபெயர்ந்த காராளர் இன கூட்டம் ஆகும்.

தெற்கு பகுதியில் உள்ள கல்வராயன்,பச்சை மலை பகுதியிலிருந்து குடியேறியதால் இவர்களை தெற்கத்தியார் வீடு என்றும் அழைக்கிறார்கள்.

இவர்கள் பச்சை குத்தி கொள்வதால்,இவர்களுக்கு பச்சை வெள்ளாளர்கள் என்னும் பெயர் வந்தது.

ஜவ்வாது மலை பூர்வ குடி மக்களான காராளர் என்கிற கார்காத்த வெள்ளாளருக்கும்,பச்சை வெள்ளாளருக்கும் இன்றுவரை திருமண உறவு இல்லை.

காரணம்,கார்காத்த வெள்ளாளர்கள் பச்சை குத்தும் பழக்கம் இல்லாதவர்கள்.பச்சை வெள்ளாளர்கள் பச்சை குத்தும் பழக்கம் கொண்டிருப்பவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக