மலையாண்டி வெள்ளாளர் என்பவர்கள் அரூர் வட்ட பகுதியிலும்,அரூர் வட்ட கல்வராயன் மலைகளிலும் வாழும் காராளர்(மலையாளி) இன மக்கள் ஆவர்.
இவர்கள் கல்வராயன் மலையை சார்ந்த காராளர் இன மக்கள் ஆவர்.சில நூற்றாண்டுகளுக்கு முன் அரூர் பகுதியில் வாழும் காராளர்(மலையாளி) மக்கள் தங்களை மலையாண்டி வெள்ளாளர் என கூறியிருப்பார்கள் போலும்.
"பாரமாகால் பதிவுகள்(Baramahal Records)" என்னும் புத்தகத்தில் மலையாண்டி வெள்ளாளர் என்னும் தலைப்பில் விரிவான குறிப்பு உள்ளது.
இவர்களின் பிரதான தெய்வங்களாக வெங்கட்ராமனன்(திருப்பதி) மற்றும் அருணாச்சலேஸ்வரர் (திருவண்ணாமலை) கடவுளை வழிபடுகிறார்கள்.மலை அடிவாரத்தில் வசிப்பவர்களின் குலதெய்வமாக தீர்த்தகிரீஷ்வரர் (தீர்த்த மலை) உள்ளார்.மலை உச்சியில் வசிப்பவர்களின் குலதெய்வம் காளியம்மன் ஆகும். இவர்கள் அனைவரும் மாரியம்மாவை வழிபடுகிறார்கள்.
திருமாலை வழிபடும் வைணவ பிரிவை சார்ந்தவர்கள் நெல்லர்வார் என்னும் பிராமணரை குருவாக ஏற்றுக்கொள்கிறார்கள்,சிவனை வழிபடும் சைவ பிரிவை சார்ந்தவர்கள் ஒரு குருக்களை குருவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக