வெள்ளி, 24 ஏப்ரல், 2026

நீர்பூசி வெள்ளாளர்கள்,ஏலகிரி மலை

நீர்பூசி வெள்ளாளர்கள்

ஏலகிரி மலையில் இருக்கும் மக்கள் தங்களை காராளர் என அழைத்துகொண்டாலும்,இவர்கள் நீர்பூசி வெள்ளாளர் இனத்தை சார்ந்த மக்கள் ஆவர். (தகவல் - கூத்து கலைஞர் ஜகா ஐயா,ஏலகிரி மலை)

இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் ஆவர்.இவர்கள் காஞ்சியில் இருக்கும் போது சைவவெள்ளாளர்களாக இருந்திருக்கிறார்கள்.தங்கள் தெய்வமான நாச்சியம்மன் தன் காதலன் நாச்சியப்பனுக்கு வடக்கு பக்கமாக தலை வைத்து படுத்திருக்கும் விலங்கை கொண்டு வந்து பலியிடுமாரு இவ்வின பூசாரி கனவில் கூற,அவர் அந்த விலங்கை தேடி அலயும் போது பன்றி வடக்கு பக்கமாக தலை வைத்து படுத்திருந்ததாம்,அந்த பன்றியை பிடித்து நாசியம்மனுக்கும் நாச்சியப்பனுக்கும் பலி இட்டார்களாம்,அந்த நிகழ்விலிருந்து இவர்கள் மாமிசம் உண்ணுபவர்களாக மாறி விட்டார்களாம்.

நாச்சியம்மனோடும் பன்றியோடும் ஏலகிரி மலைக்கு குடியேறி விவசாயம் செய்து வருகிறார்கள்.(நன்றி - தமிழக பழங்குடிகள் புத்தகம், பக்தவச்சல பாரதி ஐயா)

ஏலகிரி மலையில் ஜவ்வாது மலை காராள மக்களும் இடம்பெயர்ந்து வாழ்வதால்,அனைவரும் காராளர் என்னும் ஒரே பெயரில் கலந்து விட்டனர்.

இம்மக்களின் முக்கிய தெய்வம் அழகு நாச்சியம்மன்,பொன் நாச்சியம்மன்,இளைய நாச்சியம்மன் ஆகும்.

தமிழக அரசு 1956 ஆம் ஆண்டு முதல் இம்மலை மக்களுக்கு மலையாளி (மலை ஆள்) என்று சாதி சான்றிதழ் கொடுப்பதால்,வெளி ஊர்களுக்கு செல்லும் இம்மக்கள் தங்களை மலையாளி என அடையாள படுத்திக்கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக