வெள்ளி, 24 ஏப்ரல், 2026

ஜவ்வாது மலை காராளர்கள்

ஜவ்வாது மலை காராளர்கள்

காராளர் என்னும் இன மக்கள் தமிழ்நாட்டில் பரவலாக வாழ்ந்து வந்தாலும் தங்களை வெள்ளாளர் என்றே அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள்,ஆனால் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் மக்கள் தங்களை காராளர் என்னும் பெயரில் இன்றும் அழைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

குறிப்பாக ஜவ்வாது மலைகளில் வாழும் காராளர் இன மக்கள் கார்காத்த வெள்ளாளர் அல்லது காரைக்காட்டு வெள்ளாளர் பிரிவை சார்ந்தவர்கள்.

இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து ஆரணி வழியாக படைவீடு என்னும் இடத்தை அடைந்து நெடுநாட்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.பின் பெரு மழை காரணமாக மலைக்கு குடியேறிய மக்கள் ஆவர்.(நன்றி - North arcot district manual)

நில பகுதியில் வாழும் கார்காத்த வெள்ளாளரில் பாக்கமுடையார் என்னும் பிரிவு இந்த காராள மக்களிடமும் ஒரு குல பிரிவாக உள்ளது.இம்மக்கள் தங்களை மலை வாணர் என அழைத்து கொள்வதாக ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் கூறுகிறார்கள்.குலம் என்னும் பொருளில் வீடு என்று பல பிரிவுகள் இம்மக்களிடையே உள்ளது.

இம்மக்கள் பொதுவாக அண்ணாமலையார் கடவுளையும்,கரி வரதராஜ பெருமாள் கடவுளையும் மற்றும் நாச்சியம்மன் கடவுளையும் பெரும்பாலும் வணங்குபவர்களாக உள்ளனர்.சில இடங்களில் வேடியப்பன் வழிபாடும் உள்ளது.


தமிழ்நாடு அரசு 1956 ஆம் ஆண்டு முதல் மலையாளி (மலை ஆள்) என்னும் பெயரில் சாதி சான்றிதழ் வழங்குவதால்,வெளி ஊர்களுக்கு செல்லும் இம்மக்கள் தங்களை மலையாளி என்று அடையாள படுத்தி கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக