ஜவ்வாது மலை கவரை நடுகல்:
ஜவ்வாது மலை,கீழூர் ஊருக்கு தெற்கே உள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்.
காலம்:
இராஜாதிராஜன் சோழர், கி.பி.1048
செய்தி:
பங்கள நாட்டில் உள்ள,நவிரமலையை(ஜவ்வாது மலை) சேர்ந்த விரையன் என்பவருக்கும்,விறகூர் கவரை(வளஞ்சியர்) வணிகக்குழுவின் தலைவனும்(ஐயன்), நரைவிலை உடைய கேத்தன் குட்டேற்றன் என்பவருக்கும் நடந்த சண்டையில், கேத்தன் குட்டேற்றன் வீரமுடன் இறந்தார்.இறந்தவருக்காக நிலம்(கன் நாடு/கல் நாடு) வழங்கப்படுகிறது.
(நடுகல்லில் ஒருவர் சிற்பம் மட்டும் தான் உள்ளது.எனவே இறந்தவர் ஒருவராக தான் இருக்க முடியும்.)
கல்வெட்டு:
1.ஸ்வஸ்தி ஸ்ரீ
2.ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்கு யா
3. ண்டு முப்பதாவது பங்கள நாட்
4.டு நவிரமலையரை...
5. விரையன் மேள் கெவரை
6. கள் ஐயநு
7. ம் நரைவிலை
8. உடைய கே
9. த்தன் குட்டே
10. ற்றநும்
11. இவ்வூர் விற
12. கூர் ஊர
13. மைக்கு வழ
14. க்காடி வ
15. ழக்கழி
16. ய நாட
17. றிய ப
18. ட்டமை
19. க்கு கன்
20.நாடு
குறிப்பு:
1.கவரை என்பது ஆவணங்களில்,கடல் வாணிகம் செய்யும் "வளஞ்சியர்" என்னும் வணிகக்குழு என உள்ளது.
2.நரைவிலை என்பது ஊர் பெயராக இருக்கலாம்.
3. 'கன் நாடு என்பது 'கல் நாடு' என்பது,ஊர் நலனுக்காக வீரமுடன் போரிட்டு இறந்தவருக்காக அளிக்கப்படும் நிலப்பகுதி ஆகும்.
நன்றி:
ஆவணம் 24.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக