செவ்வாய், 13 அக்டோபர், 2026

சிறுமலை "புயிலன் சேந்தன்" நடுகல் (கி.பி.1202):

சிறுமலை நடுகல்:-

இடம்:

சிறுமலை கிராமம்,
மாரியம்மன் கோவில்,
கல்வராயன் மலை,
வாழப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம்.

காலம்:

கி.பி.1202 ஆம் ஆண்டு,
மூன்றாம் குலோத்துங்க சோழர்,
ஆட்சி ஆண்டு 24.

செய்தி: 

1.திரிபுவன சக்ரவர்த்தி குலோத்துங்க சோழரின் 24 ஆவது ஆட்சி ஆண்டில்,"மகதை நாடாழ்வார்(வாணகோவரையர்)" சிறுமலை பகுதியை ஆளும் போது,

2.சேலம் சுற்றிய(சேலம் எல்லையில்) மகதை நாட்டுக்குச் சேர்ந்த "சிறுமலை காணத்தில்(அடர் வனம்)" "தோள் பக்க படப்பில்" உள்ள "அரணம் உடையான்(திருவண்ணாமலையை சேர்ந்த)" புயிலன் சேந்தன் என்னும் பெயருடைய கேசன் என்பவர்,

3.பகவைர்கள் மகதை நாட்டில் மண்ணழிய (போர் புரிய) வந்தபொழுது,அதை தடுத்து ஏற்பட்ட போரில் வீரமுடன் போரிட்டு இறந்து போனார் "புயிலன் கேசன்" என்பவர்.அவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்.

குறிப்பு:-

*"அரணம்" என்னும் வார்த்தை திருப்புகழ் மற்றும் கந்த புராணத்தில் திருவண்ணாமலை என்கிற அருணை நகரை குறிக்கிறது.

*இம்மலையில் உள்ள "காராளர்" என்னும் மலையாளி இன மக்களும் தங்களை "காஞ்சி மண்டலத்தார்(தொண்டை மண்டலத்தார்)" அல்லது "காஞ்சீபுரம் காராளர்கள்" எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.


*இதே ஊரில் "சுந்தர பாண்டியன்" கல்வெட்டு கொண்ட "ஆதி சிவன்" கோவில் ஒன்று உள்ளது.இன்று கல்வெட்டுகளை உடைத்துவிட்டார்கள்.

*"சேலஞ் சுற்றிய" என்னும் வார்த்தை,ஓமலூர் வட்டம் கருப்பூர் கல்வெட்டிலும்,சேர்வராயன் மலை கோவிலூர் கிராம கல்வெட்டிலும் உள்ளது.கல்வெட்டுகள் உள்ள இடங்களை பார்க்கும் பொழுது சேலம் நாட்டின் எல்லைப் பகுதியை குறிக்க "சேலஞ் சுற்றிய" என்னும் வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

*ஆறகளூரை தலைமையாக கொண்டு மகதை நாட்டை ஆண்ட "வாணகோவரையர்" மன்னர்களுக்கு "மகதை நாடாழ்வார்" என்னும் பெயர் உண்டு.

*"வாணவரையர்" என்னும் பெயர் கொண்ட அரையர் குலம்(வீடு) கல்வராயன் மலையில் உண்டு.

கல்வெட்டு:-

1. [திரி ] புவநச் சக்க [ரவத்திகள்]

2. ஸ்ரீ குலோத்துங்க( சோழ)

3. தேவற்கு இயா[ண்] டு இரு பத்]-

4. து நாலாவ[நி]ல் மகதை [நா]-

5. டா[ழ்] வார் சேலஞ்[சூ]ற்றிய [இ]-

6.னாட்டைச் சிறுமலையில் [கா)

7. ணத்தில் தோட் பக்க [ப]-

8. டப்பில் இருக்கும் அரணமு-

9. டையான் புயிலன் சேந்த -

10. ந் நான கேசந் எந் மண்ண-

11. ழிய வந்திடத்தில் படை னய்

12. காத மாறு கெடுத்து

13. எய்த புயிலன் கேச-

14. நேந் பட்டேந்.

நன்றி:-
ஆவணம் இதழ் 28.
வீர ராகவன்
பொன் வெங்கடேசன்
வை.கலைச்செல்வன்
ஆசிரியர் பெருமாள்
பொன்னம்பலம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக