திங்கள், 31 ஆகஸ்ட், 2026

வாணராயர் கல்வெட்டு,கொல்லிமலை.

கொல்லிமலை வாணராயர் கல்வெட்டு:

இடம் :
வாசலூர், (கொல்லிமலை) இடிந்த நிலையில் உள்ள சிவன் கோவில் கருவறை நிலைக் கால்கள்.

அரசன் : வாணராயன்

காலம் : கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.

செய்தி :-

பறிவை ஊரில் வாழும் "வாணராயன் அரைய நாடன் மற்றும் வாணராயன் மல்ல நக்கன்" ஆகியோர் தானம் அளிக்க,அதைப் பெற்றுக்கொண்டு வாயலூர் ஊரில் வாழும் "கவிசிகன் களிங்களியன்" விளக்கு வைத்த செய்தியோ அல்லது பூசை செய்த செய்தியாகவோ இருக்கலாம்.
கல்வெட்டு சரியாக முற்றுப் பெறவில்லை.

*வாணராயர் ஆட்சி கங்கநாடு,கல்வராயன் மலை மற்றும் கொல்லிமலை வரை பரவியிருந்தது என தெரிய வருகிறது.

*இந்த அரச மரபினர் இன்றும் கல்வராயன் மலை மற்றும் கொல்லிமலையில் "அரையன்" அல்லது "அரசன்" என்னும் பெயரில் உள்ளனர்.
(ஆனால் இன்று இவர்கள் வரலாறு புரிதல் இல்லாமல் இருக்கின்றனர்)

*இக்கோவில் நிலைக்கால்களில் உள்ள எழுத்தமைதிப்படி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் எனலாம்.

*கல்வெட்டில் குறிக்கப்படும் வாயலூர் தற்பொழுது இக்கோவில் உள்ள வாசலூராக இருத்தல் வேண்டும். 

*பறிவை எனக் குறிக்கப்படும் மற்றொரு ஊர் கொல்லி மலையில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் பரியூர் என தற்பொழுது வழங்கப்படுகிறது. 

*அரைய நாடு என்பது இன்றைய அரியூர் நாடு ஆகும்.

*வாசலூர் அருகில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களும் சோழர் கால சமணர் கோவில் ஒன்றும் உள்ளன.

கல்வெட்டு:-

வடக்கு நிலைக்கால்

1.வாய

2. லூர் வா-

3. ழும் கவி-

4. சிகன்

5, களிங்

6. களிய-

7.ன் 

8. பறி-

9. வை வா-

10. ழும் வா-

11. ணராச-

12. அரைய

13. நாடன்

14. வாயலூர்

15.........

கீழ்பகுதி மண்ணில் மரத்தின் அடியில் புதைந்துள்ளது.

தெற்கு நிலைக்கால்

1. பறிவை

2. வாழும்

3. வாண

4. ராசன்

5. மல்ல

6. நக்கன்

7. வாய

8. லூர் வா-

9. ழும் க

10. விசிக

கீழ்ப்பகுதி மரத்தின் அடியில் புதைந்துள்ளது.

குறிப்பு:

கொல்லிமலையில் காராளர் என்னும் மலையாளி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கல்வெட்டுகளில் இவர்கள் மலையாளர்,மலையாழ்வான்,மலையாள முதலி,பிள்ளை முதலி 
என்றும்.காராளர்,காராள முதலி,காராளக் கவுண்டர்,மலையாளக் கவுண்டர்,மலையாளி எனப் பிறப் பெயர்களால் அறியப்படுகின்றனர்.

நன்றி : ஆவணம் 19, 2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக