அரசன்: சுந்தர சோழர்
சிற்றரசர் : ஒற்றியூரன் கொல்லி மழவன் பிரதிகண்டன்
ஆண்டு : கி.பி.962
விளக்கம்:-
1.சோழ மன்னர் ராஜகேசரிவர்மர் சுந்தரசோழன் மன்னனின் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில்,தொண்டை மண்டலம் ஒற்றியூரிலிருந்து (திருவொற்றியூர்) வந்து சோழருக்கு அடங்கிய சிற்றரசாக கொல்லிமலையும் அதன் சுற்றிய பகுதிகளையும் ஆண்ட மன்னன் "ஒற்றியூரன் கொல்லிமழவன் பிரதிகண்டன்" என்பவர்,அவர் நாட்டு பகுதியிலுள்ள தூசியூர் திரு மூலட்டானேஷ்வரர் என்ற சிவன் கடவுளுக்கு வழங்கிய நிலதானமும் அதன் எல்லைகளும்.
(கொல்லிமலையில் வசிக்கும் மலையாளி என்கிற "காராளர்" இன மக்களும் காஞ்சிபுரத்திலிருந்து(தொண்டை மண்டலம்) வந்ததாக கூறுகிறார்கள்)
(இந்த பிரதிகண்டனும் காராளர் இனத்தை சார்ந்தவராக இருக்கலாம்.)
(தூசியூர் -நாமக்கலுக்கு அருகிலுள்ள தூசூராக இருக்கலாம்)
2. கிழக்கு எல்லை - பிடரியார் அமைச்சிக்கும் மற்றும் பூனாற்று அணைக்குச் சொந்தமான நிலத்திற்கு மேற்கே அமைந்துள்ளது.
3.தெற்கு எல்லை - திருப்பாறையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள பெரிய மலைத்தொடர் மற்றும் கன்னாடு ஆகியவற்றிற்கு வடக்கிலும், அதே திருப்பாறையின் மேற்கு,கன்னாட்டுக்கும் பெரியவரம்பிற்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
4.மேற்கு எல்லை - சூளை குளமான காந்தளேரிக்கும்,தான்தோன்றிபிரான் கோவில் தூசியூரின் தெற்கு நுழைவாயிலிலிருந்து தெற்காகச் செல்லும் பெருவழிக்கு(நெடுஞ்சாலை) கிழக்கிலும் அமைந்துள்ளது;
5.வடக்கு எல்லை - தூசியூர் பழவூர்க்கு தெற்கும், தாமரைக் குளமும், இந்தக் குளத்தின் நிர்கோவை (அதாவது, நீரால் சூழப்பட்ட நிலம்),மற்றும் கற்றளி ஏரி என்ற புதுக்குளமும், இக் குளத்தின் நீர்கோவையும்(குளம் சுற்றியுள்ள நிலப்பகுதி) ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.
5.மேலும்,இந்தக் குளத்தின் கீழுள்ள நிலங்களின் எல்லைகள் பின்வருமாறு:
கிழக்கு எல்லை கன்னாட்டுக்கு மேற்கிலும், தெற்கு எல்லை கட்டிநாகன் கூவல் இட்டர் எனப்படும் குறுக்குப்பாதைக்கு அல்லது ஆழமற்ற கிணத்திற்கு வடக்கிலும்,மேற்கு எல்லை முக்கறுக்காவிற்கு கிழக்கிலும், வடக்கு எல்லை குளத்திற்குத் தெற்கிலும் அமைந்துள்ளன.இவற்றில் கணவதி நல்லூர் என்கிற அமண்குடியும்,அந்த கிராமத்திற்குச் சொந்தமான நன்செய்,புன்செய் நிலங்களும் அடங்கும்.
6.கொல்லிமழவன் ஒற்றியூரன் பிரதிகண்டவர்மனான நான்,தூசியூரில் உள்ள கற்கோவில் திருமூலட்டானேஷ்வரர் கடவுளுக்கு,கணவதிநல்லூர் என்ற அமண்குடியை எல்லை வகுத்து கல் நாட்டி வழங்கினேன்.
7.தூசியூரில் உள்ள கற்கோவில் திருமூலட்டானேஷ்வரர் கடவுளுக்கும், அவருக்கு ஐந்து பெரும் ஒலிகளை எழுப்பும் மேளக்காரர்களுக்கும் (உவச்சர்), கணவதிநல்லூர் என்ற அமன்குடியை வழங்கினேன். இந்தத் தானத்தைப் பாதுகாப்பவனின் திருவடிகள் என் தலையில் இருக்கும். இதற்கு எதிராகச் செயல்படுபவன், தவறாமல் ஏழு பிறவிகளில் சந்ததியை இழப்பான்.
கல்வெட்டு:-
முதல் தட்டு: முதல் பக்கம்.
1.ஸ்வஷ்திஶ்ரீ
2.கொவிராஜகெசரி யிவது (ர்க்*] க-வுத் திருவெழுத்தி-
3.(ருவெழுத்தி)ட்டுச் செல்லாநின்ற யாண்டு அஞ்சாவது இவ்வ[*]ண்டு கொல்-
4.விமழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட[வ]னென் என்னாட்டுத் தூசியூர்-
5.த் தென்புலத் தூநிலம் கிழக்கெல்லை பிடாரியா [ர்*] நிலத்துக்கும்
6.அமைச்சிரும் பூநாற்றி அணைக்கு[ம்*] மெக்கும் தெற்க்கெல்லை திருப்பா-
7 றைக்குக் கிழக்குக் கன்னாட்டுக்கும் பெருவாம்புக்கும் வடக்கும் திரு-
8.ப்ப[] றைக்கு மெக்கு கன்னாட்டுக்கும் பெருவாம்புக்கும் வடக்கும் மெ-
9.க்கெல்லை சூளைகுளமான காந்தளெரிக்குத் தான்றொன் திப்பிரான் கொ-
முதல் தட்டு: இரண்டாவது பக்கம்.
10 யிலுந் தூசியூர்த் தென்வாய் வாயிலினின்று தெற்க்கு நொக்கிப்
11 (ப்) பொன பெருவழிக்கும் கிழக்கும் வடக்கெல்லை தூசியூருப் பழவூர்.
12 க்குத் தெற்க்கும் தாமரைக்குளமும் இக்குளத்தால் நிர்கொவை
13 யும் இசுடுபிவிரன் ஊருமியும் கற்றளியெரியான புதுக்குள-
14 மும் இக்குளத்து நிர்கொவையும் இக்குளக்கிழெ-
15 ல்லையாவது கிழக்கெல்லை கன்னாட்டுக்கு மெக்குக்
16. தெற்க்கெல்லை கட்டிநாகன்கூவ விட்டெர்க்கு வடக்கு மெக்(கெ*]
17 ல்லை மூக்குஅகாவிற்க்கு கிழக்கும் வடக்கெல்லை எரிக்கு-
18 க் தெற்க்கும் கணவதிநல்லூரான அமண்குடியும் அவ்வூ-
19 ர் நன்புலமும் செப்புலமும் இவ்விசைத்த பெருநான்-
இரண்டாவது தட்டு: முதல் பக்கம்.
20 ()ெகெல்லையி னிலம் மெனொக்கின மாமும் கீழ்-
21 நொக்கின கிணறும் புற்று முடக்குறையும் உடும்பொடியா-
22 மை தவழ்ந்தது எப்பெர்ப்பட்ட நிலமும் தூசியூர்-
23 த் திருக்கற்றளி திருமுலஷானமுடைய பரேெஹார்க்-
24 கு உஉமவடுவஞ் செய்து எல்லையுங் கல்-
25 அந் தெரித்துக் குடுத்தென் கொல்லிமழவ-
26 ன் ஒற்றியூரன் பிரதிகண்டவது னென்(*] கணவ-
27 திநல்லூர்) ரான அமண்குடி காசியூர் திருமூலட்டானம் -
28 உடைய வரைெஹரர்க்கு உஉகவ-அலுகம் சைய்துகு-
இரண்டாவது தட்டு: இரண்டாவது பக்கம்,
29 டுத்தென் ஒற்றியூரன் பிரதிகண்டபன்-
30 மனென் காசியூர் கிருமூலட்டான (ர) முடைய ப
31 மௌரருந் தமக்கு பஞ்சமானுழ கொட்-
32 டுகின்ற உவச்சகளுக்கு கணவதிகல்லூ(ர்) சான
33 அமண்குடி உஉகபூது ஞ் செய்துகுடுத்தெ-
34 திரு க்* ] கற்றளிஉடைய பாமௌார்(க்கு"] [*] இதனை இ-
35 ரக்ஷிப்பான் ஸ்ரீபாடி மென் தலைமெல்ன [*] இதிற-
36 க்கினான் வழி யெழெச்ச மொழியாம லறுவான் (j*]
மூன்றாவது தட்டு: முதல் பக்கம்.
37 கொல்லிமழவன் ஒற்றியூரன் பிரநிகண்டவன்மனென் தூசி.
38 யூர் தெவகிலம் பழந்தெவதானம் (சூ]னைகுள(ம்)ம [*] ன காந்தளெ
39 ரிக் குளத்தின்கீழ் திருப்பாறைக்கு தெற்க்கு பிரமதெய் (ம்*] []ெ சய்தமை-
40 யில் அக்நிலத்துக்கு நிலம் கழாறு []] இதுக்கு எல்லை சிறுகரைக்கு
41 மெக்கு பள்ளிச்சந்த[த்* ] துக்கு வடக்கும் அமச்சிக்கு கிழ-
42 க்கும் கல்லொடணைக்கு[ம் ] குசவன்கழனிக்கு[ம்] தெற்க்கு-
43 [ம்] [1] இந்த [ச] ன்கு என் எல்லை நிலம் நிலத்துக்கு நிலம் குடுத்தேன்.
குறிப்பு:-
*இந்தப் "ஒற்றியூரன் பிரதிகண்டன்" மன்னர்கள் தொண்டை மண்டலத்திலுள்ள திரு ஒற்றியூரை பூர்வீகமாக கொண்டவர்கள்.சோழர்களின் படை தளபதிகள்.
*கொல்லிமலை காராளர் (மலையாளி) மக்களும் தங்களது பூர்வீகம் காஞ்சிபுரம் (தொண்டை மண்டலம்) என்கிறார்கள்.எனவே இந்த பிரதிகண்டனும் காராளர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
*இவர்களுக்கு கீழ் கொல்லிமலை காராளர்(மலையாளி) மக்கள் போர்வீரர்களாக இருந்திருக்க வேண்டும்.
*சோழருக்கு அடங்கிய சிற்றரசாக கொல்லிமலையையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் ஆட்சி செய்தவர்கள்.ஆதலால் இவர்கள் "கொல்லி மழவன்" என்ற பட்டம் கொண்டவர்கள்.
*கோவை பேரூர் கல்வெட்டு ஒன்றில் "மலை ராச்சியத்திலிருந்து வந்து பேரூர் பகுதியை ஆட்சி செய்தவர்களில் "மழவரையர்" பட்டம் கொண்டவர்களும் உண்டு".
(https://karalarmani.blogspot.com/2026/06/blog-post_13.html)
*கோவை மாவட்ட கல்வெட்டுகளில் "வெள்ளாளர் மாடைகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்.
*சேர்வராயன் மலை கோவிலூர் வாணீஷ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கற்கட மாராயர் "முதலிகளில் மழவரையர்" ஒருவர் காணப்படுகிறார்.
நன்றி:-
SOUTH INDIAN INSCRIPTIONS.VOL III
(தென்னிந்திய கல்வெட்டுகள். தகுதி -3)
பக்கம் எண் - 478,479.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக