புதன், 5 ஆகஸ்ட், 2026

கண்டராதித்த சோழர் பள்ளிப்படை கோவில்,கொல்லிமலை

கண்டராதித்த சோழர் பள்ளிப்படை கோவில்,கொல்லிமலை:

இடம்:
மேல் கலிங்கம்,
அரியூர் நாடு,
கொல்லிமலை.

பள்ளிப்படை கோவில்:-

*"கண்டராதித்தர் சோழர்" ஒரு சிறந்த சிவன் பக்தர்.இவர் ஆறு ஆண்டுகளே (கி.பி.950 - 956) ஆட்சிப் புரிந்தார்.

*இவருக்கு "சோழமுடையார்" என்னும் பெயரும் உண்டு.

*இவரைப்பற்றிய கல்வெட்டுகள் "மேற்கு துஞ்சிய தேவர்"(மேற்கு இறந்த தேவர்) என்று கூறுகிறது.

*இருந்தாலும் இவர் பள்ளிப்படை(சமாதி) கோவில் எங்குள்ளது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

*வரலாற்று ஆசிரியர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் தான் கொல்லிமலையில் இருக்கும் பள்ளிப்படை கோவிலை ஆய்வு செய்து கண்டறிந்தார்.

அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கருத்துக்கள்:

1. கண்டராத்த சோழருக்கு சோழமுடையார் என்னும் பெயர் உண்டு.கொல்லிமலை கோவிலும் சோழமுடையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பட்டு வழக்கில் இருந்துள்ளது.

2.மேற்கு துஞ்சிய தேவர் என்பதிலிருந்து சோழ நாட்டிற்கு மேற்குப் பக்கம் இவர் இறந்துள்ளார் என தெரிகிறது.கொல்லிமலை சோழ நாட்டிற்கு மேற்குப் பக்கத்தில் உள்ளது.

3.பள்ளிப்படை (சமாதி) கோவில்களில் சிவ லிங்கம் மற்றும் நந்தி இரண்டு மட்டும் தான் இருக்கும்.அம்மன்,முருகன் மற்றும் இதர பரிவார தெய்வங்கள் இருக்காது.கொல்லிமலையிலுள்ள கோவிலும் இதற்கு பொருந்தி போகிறது.

4.இந்த சோழரோட மனைவியார் "செம்பியன் மாதேவியார்" இந்த கோவிலுக்கு தானங்கள் அளித்துள்ளார்.

5.மேற்கண்ட கூற்றுகளை வைத்து ஆய்வாளர் இது பள்ளிப்படை கோவில் என முடிவுக்கு வந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக