சேர்வராயன் மலை(சேருவா மலை) சேல நாடு,முக நாடு,முட்ட நாடு என மூன்று பிரிவாக உள்ளது.
இதில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவிலில் வெங்கல பானை கல்வெட்டு காணப்படுகிறது.
இந்த மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில்,காராளர் என்கிற மலையாள கவுண்டர்களில் தும்புடையார் வீடு குல தெய்வ கோவில் ஆகும்.
இக்கோவிலில் உள்ள 3 வெங்கல பானைகளில் கல்வெட்டு காணப்படுகிறது.
பானை 1 கல்வெட்டு:
தாதுவர வறசம பெறடாசி மீ யஅ தெதிசே ருவாமல சேர்ந்தமது வுருலிருக்கும் மூகா கவுண்டன் வருதாற்சபெரு மா ளுக்கு தாவலை வாங்கிவச்ச உபயம் உ
வெங்கடப்பன்
விளக்கம்:
தாது வருட ஆண்டு கி.பி 1756 அல்லது கி.பி 1816 ஆக இருக்கலாம்.
தாது வருசம் புரட்டாசி மாதம் 18 தேதி சேருவா மலைக்கு(சேர்வராயன் மலைக்கு) சேர்ந்த மதூரிலிருக்கும் மூக்காகவுண்டன் என்பவர் வரதராச பெருமாருளுக்கு தவலை(வெங்கல பானை) வாங்கி உபயம் செய்த செய்தி.
(இதில் தவலை 2(உ) என்று உள்ளது.இரண்டு வெங்கல பானையாக இருக்கலாம்)
வெங்கடப்பன் என்பவரால் எழுத்து எழுதப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக