செவ்வாய், 9 டிசம்பர், 2025

மலை வெள்ளாளர் (காராளர்,மலையாளி ) கல்வெட்டு(MALAI VELLALAR' S INSCRIPTION)

மலை வெள்ளாளர்(MALAI VELLALAR) இன மக்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைகளில் வசிக்கிறார்கள்.இவர்கள் கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற காராளர்(KARALAR) இன மக்கள் ஆவர்.

இவர்களுக்கு காராள கவுண்டர்(KARALA GOUNDAR),காராள முதலி(KARALA MUDHALI),மலையாளி(MALAYALI) மற்றும் மலையாள கவுண்டர்(MALAYALA GOUNDAR) என்ற பெயரும் உண்டு.

கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,
மலையாள முதலி என குறிப்பிடுவதை பார்க்கலாம்.

கி.பி.1313 ஆம் ஆண்டு சுந்தர பாண்டியர் ஆட்சி காலத்தில்,கொங்கு பாண்டியர் ஆண்ட கொங்கு பகுதியில்,ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் குன்னத்தூர் ஊரிலுள்ள,இலட்சுமி நாராயணன் கோவிலில் இவ்வினத்தை சேர்ந்த தில்லை கூத்தர் (தந்தை பெயர் சிதைந்துள்ளது) என்பவர்,கோவிலில் ஒரு சந்தியா தீபம் ஏற்ற,பூசாரி ஒருவருக்கு பணம் கொடுத்த செய்தி கல்வெட்டாக உள்ளது.

இடம்: இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவர்.

விளக்கம் : இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாள், மலையாளரில் தில்லைக்கூத்தரிடம் பன்னிரண்டு பணம் பெற்றுக் கொண்டு ஒரு சந்தியா தீபம் எரிக்க ஒப்புக்கொண்டார்.

மாவட்டம் : ஈரோடு
ஆட்சி ஆண்டு : 28
வட்டம் : பெருந்துறை
வரலாற்று ஆண்டு : 1313
ஊர் : குன்னத்தூர்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 187/1967-68
அரசு : கொங்குப் பாண்டியர்
அரசன் : சுந்தரபாண்டியன்

கல்வெட்டு:

1. ஹஹிஸ்ரீ கோச்சடபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு உயஅ ஆடி மாதம் குறுப்பு நாட்டுக்

2. குன்றத்தூர் ல
க்ஷிநாரயணப் பெருமாள் னம்பிமாரில் ஹாரதாஜி திருவேங்கடநாதன் அழகப்பெருமாளேன் மலையாளரில் கண

3.......ர்மகன் தில்லைக்கூத்தர்க்காக இன்னாயனார் திருமுன்பே ஒரு ஸநாசீபம் வடிாஷித்தர்வரை ரிப்பதாக இவர் பக்கல் வாங்கின பணம் யஉ இப்

நூல் - ஈரோடு மாவட்ட கல்வெட்டுகள்
தொடர் எண் :- 1105/2003



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக