வெள்ளி, 8 மே, 2026

சின்ன வட்டானூர் பல்லவர் கால நடுகல்,ஜவ்வாது மலை

சின்ன வட்டானூா் மீது ஏறத்தாழ 1,300 ஆண்டுகளுக்கு முன்பு பகைவா்கள் படையெடுத்து, ஊரை முற்றுகையிட்டு, ஊரையே பகைவா்கள் எரியூட்டியுள்ளனா். அப்போது இங்கு காட்டப்பட்டுள்ள மூன்று வீர மறவா்களும் வீரத்துடன் போராடி தம் ஊா் மக்களைக் காத்து, தம் உயிரை விட்டுள்ளனா். இந்தக் காட்டுப் பகுதியில் மிகப்பெரிய போா் நடைபெற்றுள்ளது. தமிழத்தின் சமவெளிப் பகுதிகளை விட, போக்குவரத்து, கல்வி, நாகரீகம் ஆகியவற்றில் குறைந்த இடமாக மதிப்பிடப்படும் மலை உச்சி ஊரில் கல்வி, எழுத்தறிவு, தொல்காப்பிய இலக்கணத்துடன் ஒரு மலை ஊா் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால், அது சிறப்பிலும் சிறப்பான ஒன்றாகும். ஜவ்வாது மலைப் பகுதி பங்கள நாட்டில் இருந்ததாக இந்த நடுகல் கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு வாசகம் ஸ்வதிஸ்ரீ பங்கள நாட்டு நவிர மலை மீள யூரும் மக்கள் எரிக்க (உ)ரு மீளப் பட்டான் என்று பொறிக்கப்பட்டுள்ளது.


பல்லவா் காலத்தில் பங்கள நாட்டில் இருந்த ‘நவிரமலை’ பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் மீது பகைவா்கள் படையடுத்து வந்தபோது, இவ்வூா் வீரா்கள் பட்டு (இறந்து) போயினா் என்று கல்வெட்டு உணா்த்துவதாக தெரிவித்தாா்.

நன்றி - தினமணி நாளிதழ்,திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, தொல்லியல் அறிஞா் பெ.வெங்கடேசன், காணி நிலம் மு.முனிசாமி

https://www.dinamani.com/amp/story/all-editions/edition-chennai/thirupattur/2024/Jan/03/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-8-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4132601.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக