ஜவ்வாது மலை அடுத்த கோட்டூர் கொல்லை கிராமத்தில் உள்ள சிறிய கோயிலில் பகவதி(கொற்றவை) சிலையும், அதன் அருகே சோழர் கால கல்வெட்டு இருந்தது.
13 வரிகளை கொண்ட கல்வெட்டு 3 அடி உயரம் கொண்டது.
கல்வெட்டு செய்தி:
"11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் எட்டாம் ஆட்சியாண்டில் (கி.பி.1078),நெல்வாடை மாதன் சித்திரமேழி, போடன் நக்கன், மாறன் மாதன், பன்றன் ஆகிய நால்வரும்,பகவதி சிலையை செய்து வழங்கியுள்ளனர்".
பகவதி என கல்வெட்டில் குறிப் பிடப்பட்டிருந்தாலும், எருமை தலை மீது நிற்கும் துர்க்கையும் (கொற்றவை), கைகளில் சங்கு சக்கரம் கொண்டு அமைந்துள்ளது. கொற்றவையை பகவதி எனும் பெயரில் வழிபடப்படுகிறது என்பது இது ஒரு சான்றாகும்.
நெல்வாடை மாதன் சித்திரமேழி என்பது நெல்லில் இருந்து வரும் வாசம் என்ற பொருளில் அமைந்த புதுமையான பெயராகும்.
சித்திரமேழி என்பது வேளாண் பெருமக்கள் குழு என அறியப்படுகிறது.
நக்கன் என்பது சோழர் காலத்தில் கல்வெட்டுகளில் அதிகம் புழங்கி வரும் சிவன் கடவுளுக்குரிய சொல்லாகும்.
மாறன் என்பது பாண்டியர்களின் பட்ட பெயராக வரும் சொல்லாகும்.
பன்றன் என்ற பெயரின் தொடர்ச்சி கல்வெட்டில் கிடைக்கவில்லை.
நன்றி:
இந்து தமிழ் நாளிதழ்,
பாலமுருகன் ஐயா,
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக