கல்வெட்டு செய்தி:
கி.பி 1231 ஆம் ஆண்டு கொங்கு சோழர் வீர ராஜேந்திரன் ஆட்சி காலத்தில்,வட பரிச நாட்டு கவையன் புத்தூர்(கோவை) வெள்ளாளன் மலையரில் கேசன் தமிழ் வேளான் என்பவர் காலகாலதேவர் கோவிலில் பெரிய திரு மண்டப நாயக தூண் ஒன்றை கொடையாக வழங்கியுள்ளார்.
இடம் - காலகாலேசர் கோவில்,கோவில் பாளையம்,கோவை
நூல் - கோவை மாவட்ட கல்வெட்டுக்கள்
மலை வெள்ளாளர்(MALAI VELLALAR) இன மக்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைகளில் வசிக்கிறார்கள்.இவர்கள் கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற காராளர்(KARALAR) இன மக்கள் ஆவர்.
கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் இம்மக்களுக்கு காராள கவுண்டர்(KARALA GOUNDAR),காராள முதலி(KARALA MUDHALI),மலையாளி(MALAYALI) மற்றும் மலையாள கவுண்டர்(MALAYALA GOUNDAR) என்ற பெயரும் உண்டு.
கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,
மலையாள முதலி என குறிப்பிடுவதை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக