வியாழன், 25 டிசம்பர், 2025

2-மலை வெள்ளாளர் கல்வெட்டு(மலையாளி, காராளர்)(MALAI VELLAALAR INSCRIPTION -2)

மலை வெள்ளாளர் கல்வெட்டு-2

கல்வெட்டு செய்தி:

கி.பி.1276 ஆம் ஆண்டு,கொங்கு சோழர்,மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சி காலத்தில் இடிகரையில் வாழ்ந்த வெள்ளாளன் மலையரில்(மலை வெள்ளாளர்) சோழ காமிண்டன் என்பவர் வில்லீஷ்வரர் கோவிலில் சந்தி விளக்கு ஒன்றை கொடையாக கொடுத்துள்ளார்.

நூல் - கோவை மாவட்ட கல்வெட்டுக்கள்
கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).

சேர்வராயன் மலை மற்றும் கொல்லி மலையில் வாழும் காராளர்(மலையாள கவுண்டர்) இன மக்களில் மலையர் வீடு என்னும் குலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மலையில் வாழும் காராளர் இன மக்களுக்கு மலை வெள்ளாளர் என்னும் பெயரும் மலையாளி(இடம் சார்ந்த பெயர்),மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக