சேர்வராயன் மலை(சேருவா மலை) சேல நாடு,முக நாடு,முட்ட நாடு என மூன்று பிரிவாக உள்ளது.
இதில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவிலில் 3 வெங்கல பானை கல்வெட்டு காணப்படுகிறது.
இந்த மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில்,காராளர் என்கிற மலையாள கவுண்டர்களில் தும்புடையார் வீடு குல தெய்வ கோவில் ஆகும்.
பானை 3 கல்வெட்டு:
(பிற)..சொபதி வருடம் சித்திரை மாதம் 22 அனுப்பி..(வசம்)மலையிலிருக்கும் வேங்கடன் செட்டி
மகன் சின்னா செட்டி செருவாமலையிலை
யிருக்கும் மதூரு வருதராசபெருமாளுக்கு
தவலை உபயம்
விளக்கம்:
பிறசோபதி ஆண்டு 1811 அல்லது 1751 ஆக இருக்கலாம்.
பிறசோபதி ஆண்டு சித்திரை மாதம் 22 ஆம் தேதி,மலையிலிருக்கும் வெங்கடன் செட்டியாரின் மகன் சின்னா செட்டி என்பவர் சேர்வராயன் மலையிலிருக்கும்(செருவா மலை) மதூர் வரதராச பெருமாளுக்கு வெங்கல தவிலை தானமாக கொடுத்த செய்தி.
(மலையில் செட்டியார்கள் மளிகை கடை வைத்திருப்பார்கள்.வேங்கடன் செட்டி மலையில் எந்த பகுதியில் வாழ்ந்தவர் என்று தெரியவில்லை.அல்லது வேறு மலையை சேர்ந்தவரா என்று தெரியவில்லை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக