புதன், 28 அக்டோபர், 2015

கல்வராயன் மலை ஜல்லிக்கட்டு கல்வெட்டு

ஜல்லிக்கட்டை பறைசாற்றும் கல்வராயன் மலை கல்வெட்டு:

கல்வராயன் மலையில் காராளர் என்னும் மலையாளி பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இம்மக்களிடையே காணப்படும் பல குலங்களில் "கோவுரி" குலமும் ஒன்று. இக்குலத்தை சார்ந்த சங்கன் என்பவர் எருது விளையாட்டின் போது இறந்துள்ளார்.அவரது நினைவாக அவருடைய பெரிய பையல்(பையன்) நடுகல் வைத்துள்ளார்.

(குறிப்பு - பெயருக்கு முன்னால் குலப்பெயரை எழுதுவது இம்மக்கள் பழங்கங்களில் இருந்துள்ளது)

இக்கல்வெட்டின் காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றுள்ளது.15 ஆம் நூற்றாண்டில் இம்மலை மக்கள் அனைவரும் கவுண்டர் பட்டம் கொண்டிருந்தனர் என பிற கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது..ஆகவே 15 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டாக இது இருக்கலாம்.இது ஆய்வுக்குரியது.


கல்வெட்டு:

"கோவுரிச் சங்கன் கருவந்துறையி லே எருது விளை யாடி பட்டான் சங்கன் மக(ன்) பெரிய பயலு நட்டக ல்லு"

காலம் - 15 ஆம் நூற்றாண்டு. 

இடம் - பெத்தநாயக்கன்பாளையம்,ஆத்தூர்.


இக்கல்வெட்டு சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.