வெள்ளி, 19 ஜூலை, 2013

Varadharaja Perumal Temple,madhoor

Varadharaja Perumal Temple,Madhoor.

       Thiru Varadharaja Perumal Temple,Madhoor.


                          மதூர்(madhoor) கிராமம் சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியத்தில் உள்ளது.இக்கிராமத்தில் பழமைவாய்ந்த திரு வரதராச பெருமாள் கோவில் உள்ளது.இக்கடவுளை மலயாள கவுண்டர்(மலையாளி) இனத்தில் தும்புடையார் வீடு(குலம்) தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.இவர்கள் பச்சை மலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து சேர்வராயன் மலையில் குடியேறிய கூட்டம் ஆகும்.
                            
                               இக்கோவில் பூசாரியாக காடை குலத்தில் ஒருவர் உள்ளார்.இக்காடைக்குலக் கூட்டம் வலசையூர் பக்கத்திலுள்ள கவுண்டம்பட்டியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த கூட்டம் ஆகும்.இருப்பினும் இவர்களின் பூர்வீகமும் பச்சைமலை ஆகும்.
                தும்புடையார் குலத்தாரின் பூசையில் திருப்தியடையாத கடவுள் காடை குலத்தார்க்கு பூசை உரிமை கொடுக்க வேண்டும் என்று பில்லேரி கிராமத்தில் உள்ள பெரியண்ணன் கூட்டத்தை சேர்ந்த ஒருவரின் கனவில் கூற,அவர் இச்செய்தியை மதூர் கிராமத்தாரிடம் கூற,அச்சமயத்தில் சில நாட்கள் கழித்து காடை குலத்தார் பிழைப்பு தேடி மதூருக்கு வந்தபொழுது,மதூர் கிராமத்தினர் கனவு கண்ட செய்தியை கூறுகின்றனர்.அவர்களும் அவர்களின் கனவில் வரதராச பெருமாள்" பூசை உரிமை கிடைக்கும்போது அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியதாக கூற,தும்புடையார் குலத்தார் அவர்களுக்கு பெண் கொடுத்து,இருக்க இடம் கொடுத்து,கோவில் பூசை உரிமையும் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார் மதூரை சேர்ந்த வடம கவுண்டர்.
                காடை குலத்தாரின் குலதெய்வம் மண்மலை திரு வரதராச பெருமாள் ஆகும்.தும்படையார் குலத்திற்கும் காடைகுலத்தார்க்கும் ஒரே தெய்வம் குலதெய்வமாக இருக்கும் போது எப்படி தும்புடையார் குலம் பெண் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை.இது ஆராய்ச்சிக்கு உட்பட வேண்டியது.