வியாழன், 4 டிசம்பர், 2025

salem gazetteer ல் கல்வராயன் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்.

கோவில்புதூரில் உள்ள கரி வரதராஜ பெருமாள்(கரிராமன்)கோயில், இந்த மலையின் அனைத்து மலையாளிகளாலும் ஒரு தேசிய ஆலயமாகப் போற்றப்படுகிறது என்பது உண்மை.

மலையாளிகள் தாங்களாகவே,கரி வரதராஜ பெருமாள்(கரிராமன்) கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கல்லில் பொறிக்கப்பட்ட ஒரு பதிவை தங்கள் தோற்றத்திற்கு சான்றாகக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பதிவு வாய்மொழியாகத் திருத்தப்பட்டதாகத் தெரியவில்லை, ஆனால் திரு. லே ஃபனு அதன் பின்வரும் மொழிபெயர்ப்பைத் தருகிறார்: "இந்த மலை வேணுவராயன் என்பவரால் ஒதுக்கப்பட்டது,இவர் வெவ்வேறு நிறத்தில் ஒரு லட்சம் குதிரைகளை வைத்திருந்தவர்.சின்ன-கல்வி-காயன் மற்றும் பெரிய-கல்வி-ராயன் ஆகிய நாடுகளில் கரிய பெருமாள் மற்றும் பிற தெய்வங்களை வணங்குவதற்காக தேர் மற்றும் பிற விழாக்களை கொண்டாடுவதற்கான பரிசாகும் இந்த மலைகள். ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதை பின்பற்ற வேண்டும், மேலும் மேற்கூறியவற்றைச் செய்ய தவறுபவர்கள், கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றவருக்குச் சமமான குற்றவாளிகளாக இருப்பார்கள்".இனாம் துறை கலெக்டர், 1866 ஆம் ஆண்டு பிஸ் அறிக்கையில், பெரிய-கல்ராயண் நாட்டில் உள்ள ஒரு கல்லில் உள்ள இரண்டு கல்வெட்டுகளைக் குறிப்பிடுகிறார். இவற்றில் ஒன்று ரௌத்ரி ஆண்டின் 21வது மார்கழி, சாலிவாகனா 942 (=1020 கி.பி.) தேதியிட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் "கல்ராய-கவுண்டர் நஞ்சை மற்றும் பஞ்சை நான்கு எல்லைகளுடன் கொடுத்தார் மற்றும் அனைத்தையும் கடவுள் கரிய-பெருமாளுக்கு வழங்கினார்" என்று பதிவு செய்துள்ளது. மற்றொரு பதிவு சாலிவாஹன 1224 (=1302 கி.பி.) இல் தேதியிடப்பட்ட உதவியாகும், மேலும் "கல்ராய கவுண்டருக்கு, எட்டு கரை நாட்டிற்கு" என்ற சொற்களைக் கொண்டிருக்கிறது. இந்த குறிப்புகள் 
ஜாகீர்களின் வரலாற்றில் மிகக் குறைந்த வரலாறை மட்டுமே காட்டுவதாக  தெரிகிறது.பழங்காலத்தில் இந்த மலையாளி குடியேற்றத்தை நிரூபிக்க, கல்ராயன் 
பாளையக்காரர், ஜடய-கவுண்டன் பாளையகர் வசம் உள்ள நான்கு செப்பு சாசனங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் இரண்டு விஜயநகர மகா கிருஷ்ண ராஜாவின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1519), மற்ற இரண்டு அச்சுத ராயரின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1532) இருக்கிறது.

மலை வாழ் காராளர்,பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆண்டு

 மலையாளி என்ற பெயரில் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட்ட மலை வாழ் காராளர்கள்(hill's karalar people add in Tribe list)


சென்னை மாநிலத்தில் மலையாளிகள் மிகப்பெரிய ஒற்றை பழங்குடியினர். 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அவர்களின் மக்கள் தொகை 1, 29, 953 ஆகும். 

1951 ஆம் ஆண்டில் இந்த பழங்குடியினர் ஜனாதிபதியின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 

1956 ஆம் ஆண்டில் மட்டுமே, அந்த விளைவுக்கான பிரதிநிதித்துவ ஒப்பந்தத்திற்குப் பிறகு அவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் கூட, அனைத்து மலையாளிகளும் சேர்க்கப்படவில்லை. 

இந்த மக்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் காணப்பட்டாலும், ஜனாதிபதியின் பட்டியல் வட ஆற்காடு, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் மலையாளிகளை மட்டுமே குறிப்பிடுகிறது. 

தென் ஆற்காடு மற்றும் கோயம்புத்தூரில்(இன்று ஈரோடு) வாழும் இந்த பழங்குடி மக்கள் மற்ற மூன்று மாவட்டங்களில் உள்ள அவர்களின் சகாக்களைப் போலவே பழங்குடியினராக இருந்தாலும், தென் ஆற்காடு மற்றும் கோயம்புத்தூர்(இன்று ஈரோடு)மாவட்டங்களைச் சேர்ந்த மலையாளிகள் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவில்லை.  

தென் ஆற்காட்டில் உள்ள சின்னக்கல்ராயன் மலைகள் மற்றும் கோயம்புத்தூர்(இன்று ஈரோடு )மாவட்டத்தில் உள்ள குத்தியாலத்தூர் மலைகளுக்கு நாங்கள் மேற்கொண்ட பயணங்கள், வட ஆற்காடு, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களைச் சேர்ந்த மலையாளிகளிடமிருந்து அவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன.


CENSUS OF INDIA 1961

VOLUME IX

MADRAS

PART VI

VILLAGE SURVEY MONOGRAPHS

ALADIPATTI, 

K. NAMBIAR ,1965


 

கல்வராயன் மலை கல்வெட்டு,கரிய பெருமாள் கோவில்

  கல்வராயன் மலையில் காராளர்(KARALAR )என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.

கல்வராயன் குலத்தை சார்ந்த மன்னரான கல்வரைய கவுண்டரும்,வீரைய கவுண்டரும்,நாட்டார்களும் கரிய பெருமாள் கடவுளுக்கு மேலை செம்பற்க்கையில் நிலம் தானம் விட்ட செய்தியாக கல் வெட்டப்பட்டுள்ளது.சந்திரர் சூரியர் உள்ளவரை இந்த தானத்தை நடத்தி வர வேண்டும்.மீறுபவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவர் என்று உள்ளது.


இக்கல்வெட்டு உள்ள இடத்தையும் ,இம்மக்கள் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்யும் போது,இம்மலை மன்னரான கல்வராயன் கவுண்டர் கரிய பெருமாளுக்கு கொடுத்த இறையிலி நிலம் பற்றிய செய்தி ஆகும்.ஆனால் கல்வரைய கவுண்டர் என்பதற்கு தள்ளரையகவுண்டர் என்றும், வீரைய கவுண்டர் என்பதற்கு மதுரை வீரைய்ய கவுண்டர் என்றும் தவறாக படிக்கப்பட்டுள்ளது.


இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுக்கள் புத்தகத்தில் உள்ளது.ஆனால் salem gazetteer ல் சாலிவாகன ஆண்டு 942(கி.பி.1020) என்று உள்ளது.


18 ஆம் நூற்றாண்டு என்பதை ஆய்வுகுட்படுத்த வேண்டும்.


கல்வெட்டு:


1. (வி) ரோதிகிறி வருஷம் மார்

2.கழி மாதம் 21 தள்ள

3. () ரையகவுண்டர் மேல்ம

4. வீரையகவுண்டர் மேல்ம 

     யுள்பட ச

5. (லை) நாட்டாரும் கரிய

6. () பெருமாளுக்கு மேலைச்

7. செம்பறக்கை திருவி

8. ளையாட்டம்

9. படி நஞ்சை புஞ்சை

     நாற்பாக்கெல்லை 

10.யு(ம்) சகலமும்

12. ந்தி (ஏ) சூரியர்வ(ரை)

13. அ (கு) தம் பண்(ணின)

14.வர் கெங்கையிலே

15. க(ஈ) ராம் பசுவை

16. கொன்ற பா

17. வத்திலே (போ)

18. க (க) டைவர்கள்

(சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் - கிருட்டிணன்-பக்கம் 92)


புதன், 3 டிசம்பர், 2025

கல்வராயன் மன்னர் கல்வெட்டு, கெராங்காடு

 கல்வராயன் மலையில் காராளர்(KARALAR )என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.


இந்த மலையை ஆண்ட காராளர் இனத்து மன்னர்களான,கல்வராயன் குலத்தவர்கள் கரியப்ப கவுண்டரும் பட்டத்து அண்ணியப்ப கவுண்டரும் கோவிலுக்கு கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டு இது. இருவரில் ஒருவர் மன்னராக இருந்துள்ளார்,இன்னொருவர் மகனாகவோ அல்லது தம்பியாகவோ இருக்கலாம்.கோவிலில் பூசை செய்வதற்கென்று, இவ்வினத்தில் நம்பி என்ற குலம் உள்ளது.நயினா கவுண்டர் நம்பி என்னும் நாம்பியான் குல முன்னோர் பெயரும் காணப்படுகிறது.


இம்மக்களிடையே பெயர் எழுதுவதற்கென்று ஒரு வழக்கம் இருந்திருக்கிறது.ஒருவர் தன் பெயர் எழுதும் போது தன் குல பெயரையும் சேர்த்து எழுதுவார்கள்.அந்த நடையிலேயே இந்த கல்வெட்டும் அமைந்துள்ளது.


கள்வரைய்ய என்பதற்கு கள்ளரைய்ய என்று படிக்கப்பட்டுள்ளது, கள் நாட்டில் ("கள் நாட்டி"என்று கூட இருக்கலாம்)என்பதற்கு கள்ள நாடு என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....இந்த கல்வெட்டு இருக்கும் பகுதியில் வாழும் மக்களின் வரலாறை பார்க்கும் போதும் பழக்க வழக்கங்கள் பார்க்கும் போதும்,ஆண்ட மன்னர்கள் அவர்களின் குலங்களை ஆராயும் போதும், கல்வரைய்ய என்பது தான் சரியாக இருக்கிறது.படித்தவர்கள் எழுத்தை தவறாக கூட படிக்க வாய்ப்பிருக்கிறது.






கெராங்காடு கிராமத்தில் இரண்டு கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன. மலை மேலுள்ள அவையாரம்மன் கோவில் கல்வெட்டு சிதைந்துள்ளது.மாரியம்மன் கோவில் அருகே உள்ள கல்வெட்டின் மேல்புறம் பெருமாளின் சின்னமான சங்கு, சக்கரம் காணப்படுகிறது. மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகத்தில் வெளிவந்திருக்கிறது.ஆனால் Salem gazetteer ல் சாலி வாகன ஆண்டு 1224(கி.பி.1302) என்றும் கல்வராயன் கவுண்டர் என்றும் தெளிவான பதிவு உள்ளது.


இது மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.


இதில் விய வருடம் வைகாசி மாதம் 27-ம் தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூஜைகள் செய்ய கள் நாட்டை (கீழ்நாடு) சேர்ந்த கருங்காடு (கெராங்காடு) என்ற பகுதியை கள்(ல்)வரைய்ய பெரிய கரியப்பக்கவுண்டர் பட்டத்து கள்(ல்)வரைய்ய அன்னியப்ப கவுண்டர் ஆகிய இரு தலைவர்களும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது. இத்தானத்தை நயினாகவுண்டநம்பி என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூஜையும், கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள் . இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இதற்குத் தீங்கு விளைவிப்பவர்கள்,கங்கை கரையிலே,காராம் பசுவை கொன்ற பாவத்திலே போவார்கள்.



கல்வெட்டு:

1. விய வருஷம் வய்யாசி மாதம் 27

2. அவைய்யாரம்மை

3. சுவாமியாற் 5 பூத

4. ானம் விட்டதுக்கு (க)

5. ள்வரையக பெரிய

6. கரியப்பகவுண்ட(ர்)

7. பட்டத்து கள்வ

8. ரய அண்ணியப்ப

9. கவுண்டர் இந்த ரண்

10. டு துரையளும் நாலு

11. கரைநாட்டரும் கள்(கீழ்)

12. நாட்டில் செத்த(செய்த) கா(ங்)

13. நாடு பூதானம் விட்ட

14. துக்கு பூசை நிமத்தி

15. யம் பண்ணி வருகுறவர்

16. கள் நயினாவுண்டந(ம்)பி

17. யார் உள்பட்ட யிந்தவூ(ர்)

18. தானததுக்கு யாதா மொரு

19. வர் பூசை கட்டளை அவி

20 (மெ) கம் அதி

21. காமாகா நடத்திவரு (கிற)

22. (வ)ர்கள் ஆயிராரோக்கி (ய)

23. (அய்)ஸ்வரியம் அவர்பி

24. .. வை தொழுது மாதா ..

25. யம் பண்ணி வருகுறவர்

26. இந்த பூ (த)ானம் பூமி

27. ஆக(வும்) சந்திர(ரா)தித்தர்

28. உள்ளமட்டும் நடத்தவு/ம் இ/

29. ப்படி யிதுக்கு (யாதா)

30. மொருத்தர ரண்டு(நி)

31. னைச்சவர்கள் கெங்

32. கைக்கரையிலே

33. க(ஈ) ராம் பசுவை (க்)

34. கொன்ற பாவத்தி

35. (லே)போவர் (கள்)




(சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் - கிருட்டிணன்) பக்கம் 91